தேவதானப்பட்டி:
பொம்மிநாயக்கன்பட்டி சிறுகுளம் கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரிநீரை,
ரெங்கநாதபுரம் ஊரணிகளுக்கு திருப்பிவிட புதிய வாய்க்கால் அமைக்க
வேண்டும். பெரியகுளம் தாலுகா, பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள சிறுகுளம்
கண்மாய்க்கு, வராகநதியில் வரும் நீரை, மேல்மங்கலம் முத்தையா கோயில் அருகில்
தடுப்பணை கட்டி அங்கிருந்து வாய்க்காலில் ஜெயமங்கலம் வேட்டுவன்குளத்திற்கு
கொண்டு செல்லப்படுகிறது. குளம் நிறைந்து வெளியேறும்
உபரிநீர்,சிந்துவம்பட்டி ஓட்டக்குளத்தை நிறைய செய்கிறது. அங்கிருந்து
பொம்மிநாயக்கன்பட்டி சிறுகுளம் கண்மாய் நிறைகிறது. இதனால் 1000 ஏக்கர் பாசன
வசதி பெற்று வருகிறது. இக்கண்மாய் நிறைந்து வெளியேறும் உபரிநீர் வைகை
ஆற்றில் கலக்கிறது. இந்நீரை பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து 4 கி.மீ.,
தூரம் தனி வாய்க்கால் அமைத்து, அ.வாடிப்பட்டி, ரெங்கநாதபுரம் கிராமங்களில்
உள்ள 13 ஊரணிகளுக்கு திருப்பி விடுவதால், ஊரணிகள் நிறைவதோடு, நிலத்தடி
நீர்மட்டமும் உயர்ந்து இப்பகுதியில் விவசாயப்பணிகள் அதிகரிக்கும்.ஊராட்சி
தலைவர் மஞ்சமாலா கூறியதாவது: பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய் நிறைந்து
வெளியேறும் உபரிநீரை, அ.வாடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட ஊரணிகளுக்கு
திருப்பிவிட வேண்டும், என்று நீண்ட நாட்களாக
கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.