தேவதானப்பட்டி: மேல்மங்கலம் அருகே, தனியார் பஸ்சும், ஆட்டோவும் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.ஒருவர் காயம் அடைந்தார்.ஆம்புலன்ஸ் வர தாமதமானதால்,கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் வெள்ளமலை,50. வாழை இலை கட்டுகளை பெரியகுளம் மார்க்கெட்டில் வைத்து விட்டு, இவரும், இதே ஊரை சேர்ந்த குமரேசனும் ஆட்டோவில் ஊருக்கு திரும்பினர். தேவதானப்பட்டியில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற தனியார் டவுன் பஸ் மேல்மங்கலம் அருகே, வைகை அணை பிரிவில் ஆட்டோ மீது மோதியது. இதில், வெள்ளமலை சம்பவ இடத்திலேயே பலியானார். குமரேசன் படுகாயம் அடைந்தார். தகவல் தெரிவித்தும், ஆம்புலன்ஸ் 108 வர தாமதமானதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் துணை மண்டல தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.