தேனி:
தேனியில் கோடையை சமாளிக்க நான்கு இடங்களில், தண்ணீர் சேகரிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. தேனியில் தற்போது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே,
குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பிப்ரவரி கடைசி வரை கூட முல்லை
பெரியாற்றிலும், வைகை ஆற்றிலும் தண்ணீர் கிடைக்காது. அதன் பிறகு, மார்ச்,
ஏப்ரல், மே, மாதங்களை சமாளித்தாக
வேண்டும். ஜூன் கடைசியில், மீண்டும்
ஆற்றில் நீர் வரத்து தொடங்கி விடும். இந்த இடைப்பட்ட காலங்களில் தண்ணீர்
தட்டுப்பாடு கடுமையாக இருக்கும். இப்பிரச்னைகளை சமாளிக்கும் வகையில்,
தேனி பழனிசெட்டிபட்டி குடிநீர் தொட்டி கிணறு, மீறுசமுத்திர கண்மாய், வீரப்ப
அய்யனார் கோயில் கிணறு உட்பட நான்கு இடங்களில் போர் போட்டு, லாரிகளில்
குடிநீர் எடுத்து, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகளில் சேகரித்து, குழாய்
மூலம் சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட
மதிப்பீடுகளை தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைத்து உள்ளதாக, அதிகாரிகள்
தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.