திண்டுக்கல்: பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் திண்டுக்கல் மாவட்ட போலீசாருக்கு தரமான உணவு அளிப்பதில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தாததால், போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படும் போலீசாருக்கு உணவு படியாக நாள் ஒன்றுக்கு ரூ. 75 அரசால் வழங்கப்படுகிறது. தற்போதைய விலை வாசியில் இந்த பணத்தை வைத்து ஒருவேளை உணவு மட்டுமே திருப்தியாக உண்ண முடியும் நிலை உள்ளது. மற்ற வேளைகளில் கைபணத்தையே போலீசார் செலவு செய்கின்றனர். இதனால் பாதுகாப்பு பணி என்றாலே மனதளவில் போலீசார் சோர்ந்து விடுகின்றனர். இதை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக செல்லும் போது அவர்களுக்கென்று தனி சமையல் குழுவினரை அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கும், முதல்வர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு தேனிக்கும், தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கும் திண்டுக்கல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.ருசியில்லை: இவர்களுக்கான சமையல் குழுவினர் தயாரித்த உணவு வாயில் வைக்க முடியாத அளவிற்கு சிரமப்பட்டுள்ளனர். பசி தாங்க முடியாமல் சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்த நாட்களில் வயிற்று போக்கினால் அவதிப்பட்டு பணியில் கவனம் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். பணி முடித்து திரும்பி வந்த பின்பும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.அதே நேரம் மதுரை, சிவகங்கை, தேனி போலீசாருக்காக வரவழைக்கப்பட்டிருந்த சமையல் குழுவினர் தரத்துடன் ருசியாகவும் உணவுகளை சமைத்து கொடுத்துள்ளனர். பழநிக்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்ட போலீசாரிடம், எஸ்.பி., ஜெயச்சந்திரன் எக்காரணத்தை முன்னிட்டும் அன்னதானமாக அளிக்கப்படும் உணவுகளை போலீசார் வாங்கி சாப்பிடக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். இதனால் நல்ல உணவு கிடைக்காமலும், அன்னதானத்தை வாங்க முடியாமலும் சிரமம் அடைந்தனர். இதனால் பணியில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலைஏற்பட்டது. அதிருப்தி: போலீசாருக்கான உணவு படி முழுமையாக சமையல் குழுவை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் அதை முழுமையாக பயன்படுத்தாததால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அதிருப்தியில் இருக்கும் போலீசார் தெரிவித்தனர். உடலில் தெம்பு இருந்தால்தானே நிமிர்ந்து நிற்க முடியும் என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் உணர்ந்து, உணவு விஷயத்தில் கூடுதல் அக்கறை செலுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன்வரவேண்டும் என்பது போலீசாரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.