கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்துச்செல்ல இரண்டு மினி பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது: தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், ஜப்பான் நாட்டின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 25 இகோ-டூரிசம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், கொடைக்கானல் வனக்கோட்டத்திலுள்ள, மன்னவனூர் புல்வெளிப்பகுதியும் ஒன்று. இத்திட்டம் மன்னவனூர் கைகாட்டி கிராம மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வழங்கப்பட்ட வேன்கள் மூலமாக சுற்றுலா பயணிகளை, பைன் பாரஸ்ட், மோயர் பாய் ண்ட், சலண்ட் வேலி, பயர் வாட்ச் டவர், தொப்பி தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, பேரிஜம் ஏரி, மன்னவனூர் புல்வெளிப்பகுதி, பூம்பாறை, பழநி எழில் தோற்ற பார்வை மாடம், குண்டார் நீர்வீழ்ச்சி, குணா குகை, தூண்பாறை, பசுமைப்பள்ளத்தாக்கு ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து, தினமும் காலை 9 மணிக்கு வேன்கள் இயக்கப்படும். மாலை 5 மணி வரை அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் சென்றுவர, நபர் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டணமாகும். மேலும் விபரமறிய, மாவட்ட வன அலுவலரின் அலுவலக தொலைபேசி எண் 04542-240 287 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என்றார். ரேஞ்சர் சக்திவேல் உடனிருந்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.