திண்டுக்கல்:
பூலத்தூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் பணியாற்றுபவர் ரேணுகா தேவி.
இவருக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் கும்பரையூர் பள்ளிக்கு இடமாறுதல்
அளிக்கப்பட்டது. உள்நோக்கத்துடன் ஆசிரியைக்கு இடமாறுதல்
அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, ஜே.எஸ்.ஆர்., தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியின் மாவட்ட தலைவர் குன்வர் தலைமையில் ஆசிரியர்கள் நேற்று மாலை 5
மணியிலிருந்து 8 மணி வரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்குள் நுழைந்து
உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
சிவானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார். இட மாறுதல் உத்தரவு தொடர்பாக
கலெக்டரிடம் பேசுவதாக தெரிவித்ததையடுத்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.