Advertisement
எரியோட்டில் 13 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்பு அகற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

வடமதுரை: எரியோட்டில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை, 13 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று அகற்றினர். திண்டுக்கல்- குஜிலியம்பாறை வழி- கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது எரியோடு. ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டுவந்தது. வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர், திண்டுக்கல், கோவிலூர் என ஐந்து மார்க்கத்தை
சேர்ந்த பயணிகள், பஸ் மாறி செல்லுமிடமாக உள்ளதால் பஸ் ஓட்டுனர்களும், பயணிகளும் மிகவும் சிரமத்திற்குள்ளாகிவந்தனர். எரியோட்டில் பயணியர் நிழற்கூடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி ஆக்கிரமிப்பாளர்கள் இடங்களை காலி செய்து தராததால், நிலுவையில் உள்ளது. இப்பிரச்னை எதிரொலியாக, எரியோடு நகர் பகுதி முழுவதும் நெடுஞ்சாலை இட ஆக்கிரமிப்புகள் அக ற்றும் பணி நேற்று நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், உதவி பொறியாளர் அச்சுதகண்ணன் முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் முழுமையாக அகற்றப்பட்டது. எரியோடு பஸ் ஸ்டாப் பகுதியில், நவீன பயணியர் கூடம் கட்ட எதிர்பார்க்கப்பட்ட இடத்தை சார்ந்த சிலர், கோர்ட்டுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனால் அந்த இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கவில்லை. இதனால் பயணியர் நிழற்கூடம் அமைவதில் கால தாமதம் ஏற்படும். அல்லது எஞ்சிய காலி இடத்தில் ரோட்டிற்கு வெகு அருகில் அமைக்க வேண்டியிருக்கும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.