வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடந்தது. நிறைவு விழாவிற்கு தாளாளர் சகிலா முன்னிலை வகித்து பேசினார். துணை முதல்வர் ரமேஷ்ராஜா வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி டி.ஐ.ஜி., அறிவுச்செல்வம் பேசியதாவது: உலகமயமாக்கலால் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பங்களை நாள்தோறும் தெரிந்து கொண்டாலும், கிராமப் புற மாணவர்கள் தகவல் பரிமாற்றத்தில் தடுமாறுகின்றனர். இந்த நிலையை கிராமப்புற மாணவர்கள் மாற்றிக் காட்ட வேண்டும். தகவல் பரிமாற்ற அறிவை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும், என்றார். முதல்வர் செந்தில்மாறன் நன்றி கூறினார். நிறுவன ஆடிட்டர் தொட்டியாத்தான், மதுரை பாட்டியாலா வங்கி மேலாளர் புஷ்பவதி ஆகியோர் பேசினர். மேற்பார்வையாளர் ராமநாதன், வேலை வாய்ப்பு அலுவலர் பிரேம்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.