சோழவந்தான்: மதுரையில், புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலை பல்வேறு நோய்களால் வாடி வருகிறது. விளைச்சல் இல்லாததால் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்த
கொடிக்கால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இவ்வூர் வெற்றிலை சுவை மிக்கது. நார்சத்து அதிகம் உண்டு. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் சோழவந்தான் வெற்றிலை
பயணிக்கிறது. வெற்றிலை விவசாயத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டனர். சோழவந்தானில் மட்டும் 5,000 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்பட்டது. தினமும் இரண்டு லாரிகளில் வெற்றிலை மதுரைக்கு அனுப்பப்பட்டன. தரம் பிரிக்கப்பட்ட "கொழுந்து வெற்றிலை' வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.இந்நிலையில், பல்வேறு நோய் தாக்குதலால், வெற்றிலை விவசாயம் "வாடி' வருவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.சங்கர்: வெற்றிலையில் வேர் அழுகல், சுருட்டு, கரும்புள்ளி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன. இதனால், கடும் நஷ்டம் அடையும் விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை, தற்போது 15 ஏக்கர் அளவில் நின்று விட்டது. பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தியும் நோய் கட்டுப்படவில்லை. விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கவும், பயிர் கடனை ரத்து செய்யவும், அரசு முன்வர வேண்டும்.தங்கம்: சோழவந்தானில் உள்ள வெற்றிலை கொடிக்கால் விவசாய வங்கியில் 90 காசு வட்டிக்கு கடன் வாங்கி வெற்றிலை பயிரிட்டேன். எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. நோய்களால் பயிர் கருகி விட்டது. தற்போது வட்டி மற்றும் அசலை கட்டும்படி வங்கி நெருக்கடி கொடுக்கிறது. இங்கு வெற்றிலை விளைச்சல் இல்லாததால், ஆந்திராவில் இருந்து சுவையற்ற தடிமனான வெற்றிலையை வியாபாரிகள் வாங்குகின்றனர். சோழவந்தான் வெற்றிலை விளைச்சல் முன்பு போல் சிறப்பாக இருக்க, விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் செய்ய வேண்டும், என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.