மதுரை: மதுரை நகரில், வாகன புகை மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க, போக்குவரத்து போலீசாருக்கு, "மாஸ்க்' வழங்கப்பட்டுள்ளது. மதுரையில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியிடும் ஹைட்ரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு கலந்த புகையால் காற்றில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. வாகன பராமரிப்பு இல்லாமை; மோசமான ஆயில்; கலப்பட டீசல்; இன்ஜின் கோளாறு போன்ற பல காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த, 1998ல் வாகன புகைச்சான்று கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதை கண்டுகொள்வதில்லை. இதனால், அரசு பஸ்கள் போன்ற வாகனங்கள் புகையை தினமும் கக்குவதால் போக்குவரத்து போலீசார், ஆஸ்துமா உட்பட பல்வகை நோய்களுக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க, ஒவ்வொரு மாதமும் ஒரு போலீஸ்காரருக்கு 4 "மாஸ்க்' வழங்கப்படுகிறது. இதற்காக, ஆயிரம் "மாஸ்க்'குகள் தயார் நிலையில் உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.