மேலூர்: அரசு ஆலையில் பதிவு செய்தும் கரும்பை வெட்டாமல் இருப்பதால், கருகி வருகின்றன. இதை தடுக்க தனியாருக்கு வெட்ட அனுமதித்தால், செலவு செய்த தொகையாவது மிஞ்சும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலூர் பகுதியில் வெள்ளலூர், உச்சரிச்சான்பட்டி, உறங்கான்பட்டி, தனியாமங்கலம், வண்ணாம்பாறைப்பட்டி, சூரக்குண்டு என சர்க்கரை ஆலைக்கான கரும்புகள், பல்லாயிரம் ஏக்கர்களில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இக்கரும்புகளை அலங்காநல்லூர் அரசு ஆலைக்கு வெட்டுவதாக விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன், ஆலையில் பழுது ஏற்பட்டு, சரி செய்யப்பட்டது. அதிலிருந்து அரவை திறன் குறைந்து விட்டதாகவும், கரும்பு வெட்டுவதில் தாமதம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்துடன் சீனியாரிட்டியை மாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு, பதிவு செய்யாதவர்கள் மற்றும் வரிசையில் பின்னால் இருப்பவர்களின் கரும்புகள் வெட்டப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக "பீல்டு மேன்'களாக செயல்படுவர்களே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முத்துலிங்கம், வெள்ளலூர் : ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை செலவு செய்து 2 ஏக்கர் கரும்பு பயிரிட்டேன். அரசு ஆலையில் பதிவு செய்து ஆறு மாதமாகியும் வெட்ட வரவில்லை. மழையின்றி, கிணற்று நீரை பயன்படுத்த மின்சாரமும் இன்றி அவதிப்பட்டு கரும்பை பயிர் செய்துள்ளோம். வெட்டும் பருவத்தை தாண்டி கரும்பு வயலிலேயே நிற்கிறது. அவற்றை பராமரிக்க தண்ணீர் இல்லாததால், அனைத்தும் கருகி வருகிறது. பயிர் செய்ததில் சில பகுதிகளையாவது தனியார் மில்லிற்கு விற்பனை செய்ய அனுமதி கொடுத்தால், செலவு செய்த தொகையாவது கிடைக்கும்.ராஜா, உச்சரிச்சான்பட்டி : இரண்டரை ஏக்கரில் பயிர் செய்துள்ள எனது கரும்பு கருகி வருகிறது. இப்பகுதியில் மட்டும் 3 ஆயிரம் ஏக்கர் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் இது வரை ஆயிரம் ஏக்கர் வரை வெட்டப்பட்டிருக்கும். எஞ்சியுள்ள விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த ஆண்டுடன் இனி கரும்பை பயிர் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளோம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.