மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பல்வேறு துறைகளில் உதவியாளர்கள் பணியில் இருந்து, 28 பேர் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்றனர்.கடந்த சிண்டிகேட் கூட்டத்தில், சம்பத் கமிட்டி அறிக்கைப்படி தகுதியுள்ள பல்கலை ஊழியர்களுக்கு, பதவி உயர்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 7 பேர் நிரந்தர கிளார்க்குகளாகவும், 4 பேர் துப்புரவுப் பணியாளர்களாகவும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மேலும், பல துறைகளில் உதவியாளர்களாக பணியாற்றிய 28 பேருக்கு, கண்காணிப்பாளர்களாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவுகளை துணைவேந்தர் கல்யாணி வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.