மதுரை: மதுரை மாநகராட்சியில், மேயர்-மண்டலத் தலைவர் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்த நிலையில், மண்டலம் 1ல் நடந்த கவுன்சிலர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
மேயர் ராஜன் செல்லப்பா பங்கேற்றார்.மேயருடன், மண்டலத் தலைவர்களும் ஆரம்பம் முதலே மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். பின்னணியில் "வருவாய்' பிரச்னை இருந்தது, அடுத்தடுத்த கவுன்சில் கூட்டங்களில் தெரியவந்தது. கடந்த கூட்டத்தில், மண்டலம் 1ன் தலைவர் ராஜபாண்டி, மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வெளி நடப்பு செய்ததால், அ.தி.மு.க., வட்டாரத்தில் மட்டுமின்றி, நிர்வாகத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. மேயர்-மண்டலத் தலைவர் மோதல் வலுப்பெற்று, இருதரப்பும், ஒருவரை ஒருவர் மேலிடத்தில் புகார் செய்தனர். இதுஒருபுறம் நடக்க, ராஜபாண்டிக்கு "செக்' வைக்கும் வேலைகள் ,மறுபுறம் நடந்தன. நகர் செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ, இருதரப்பையும் சமரசம் செய்ததை தொடர்ந்து, மேயர்-ராஜபாண்டி இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. "தன் மண்டலத்தில் எந்த பணியும் நடக்கவில்லை,' என, ராஜபாண்டி வைத்த குற்றச்சாட்டுகளை கவனத்தில் கொண்ட மேயர், முதன்முறையாக, "கவுன்சிலர்கள்' குறைதீர்க்கும் கூட்டத்தை நேற்று மண்டலம் 1ல் நடத்தினார். மொத்தமுள்ள 24 வார்டுகளில், 20 வார்டுகளின் கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர் ராஜபாண்டி பங்கேற்றனர். ஒவ்வொரு வார்டிற்கும் ரூ.20 லட்சம் முதல், ரூ.40 லட்சம் வரை உடனடி நிதி ஒதுக்கப்பட்டது. "நாளையே(இன்று) மதிப்பீடு தயார் செய்து வழங்கவும், ஏழு நாட்களில் "டெண்டர்' விட்டு, பணிகள் தொடங்கப்படும்,' அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை எதிர்பார்க்காத கவுன்சிலர்கள், நேற்றே மதிப்பீடுகளை தயார் செய்து, பணிகளுக்கு தயாராகினர். கவுன்சிலர்கள் "ஆப்சென்ட்': "பாவம்' 5 வார்டுகள் மண்டலம் 1ல் நேற்று நடந்த கவுன்சிலர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தாஸ்(வார்டு எண் 9), ஜெயராமன்(12), லட்சுமி(18), திரவியம்(23), தி.மு.க., கவுன்சிலர் அருண்குமார்(10) பங்கேற்கவில்லை. இதனால், அந்த வார்டுகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள்,
கிடைக்காமல் போனது. ஒவ்வொரு வார்டிற்கும் ரூ.40 லட்சம் வரை கிடைத்த
நிலையில், சம்பந்தப் பட்ட இந்த 5 வார்டுகளுக்கு, கவுன்சிலர்கள் வராததால்,
நிதி ஒதுக்கப்படவில்லை
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.