உசிலம்பட்டி:
உசிலம்பட்டி சந்தையில் குப்பையை யார் அள்ளுவது என நகராட்சிக்கும், ஊராட்சி
ஒன்றியத்திற்கும் நடக்கும் போட்டியால், சந்தை "நாறுகிறது'.இந்நகரின்
மத்தியில், சந்தைதிடல் உள்ளது. புதன்கிழமை தோறும் வாரச்சந்தை கூடும்
தினத்தில், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் கூடுவர்.
உசிலம்பட்டி நகராட்சியானபோது இந்த
சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில்
கொண்டுவரப்படவில்லை. சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ஊராட்சி
ஒன்றியமும், நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என
நகராட்சியும், கோர்ட்
வரை சென்று போராடி வருகின்றன.அள்ளப்படாத குப்பை: இரு மாதங்களாக சந்தையில்
சேரும் குப்பையை அள்ளாமல் நகராட்சி புறக்கணித்து வருகிறது. இதன் காரணமாக,
நூலகம், நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசிக்கும் பகுதியில் குப்பைகள்
குவிந்து சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறது. நகராட்சித் தலைவர் பஞ்சம்மாள்:
சந்தையை நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என பலமுறை உயர் அதிகாரிகள்,
கோர்ட் கூறியும் ஒப்படைக்க மறுக்கின்றனர். சந்தையில் வரும் வருமானம்
அனைத்தும் ஒன்றியத்துக்கே
செல்கிறது. சந்தையை பராமரிப்பவர்கள்தான் அதை
சுத்தப்படுத்த வேண்டும். நகராட்சி செய்யாது, என்றார்.ஊராட்சி ஒன்றிய
கமிஷனர் வெங்கட்ராகவன்: சந்தையில் சேரும் குப்பையை அள்ளிவந்த நகராட்சி,
தற்போது "நீங்களாகவே சுத்தம் செய்து கொள்ளுங்கள்' என கூறுகிறது. தற்போது
சேர்ந்துள்ள குப்பையை அகற்ற ஒன்றியக்குழுத் தலைவர், சந்தை ஒப்பந்தகாரர்களை
அழைத்து பேசியுள்ளோம். விரைவில் குப்பை அகற்றப்படும். தொடர்ந்து
சந்தைக்குள் கடை வைத்துள்ளவர்கள் குப்பையை தாங்களாகவே அகற்றிக்கொள்ள
வேண்டும் என அறிவிப்பு வெளியிட உள்ளோம், என்றார்.நகராட்சி, ஊராட்சி ஒன்றிய
அதிகாரிகள் போட்டியால் சந்தை நாறுவதுதான் மிச்சம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.