district news | வங்கிகளில் வட்டி விகிதம் குறைப்புக்கு வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில் வட்டி விகிதம் குறைப்புக்கு வரவேற்பு

Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது.சங்கத் தலைவர் ஜெகதீசன், முதுநிலை தலைவர் ரத்தினவேலு தெரிவித்துள் ளதாவது: நாட்டின் பொரு ளாதார சரிவை தடுத்து நிறுத்த, மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படவும், தொழில் துறை முதலீடு மற்றும் உற்பத்தி அதிகரிக்கவும் கூடும்.வட்டி விகிதத்தை குறைத்திருப்பது, தொழில் வணிக துறைக்கு வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படவும், தொழில் உற்பத்தி பெருகவும், ஒரளவு வழிவகுக்கும்.பணவீக்கத்தை நிரந்தரமாக கட்டுப்படுத்தவும், தொழில் உற்பத்தியை பெருக்கிடவும், பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை