அன்னூர்: காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு, அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர்.
கீழ்கதவுகரையை சேர்ந்த விவசாயி குருசாமியின் மகள் பரிமளா, 19. இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். முகாசிசெம்சம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயகுமார், 24, விவசாயி. விஜயகுமாரும், பரிளமளாவும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் பரிமளாவிற்கு, வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சித்தனர். இதனால், இருவரும், கடந்த 29ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, காங்கேயத்திலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். "பெண்ணின் குடும்பத்தினர் ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்,' என்று கேட்டு அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர்.
எஸ்.ஐ., சுப்புராஜ், பெண்ணின் குடும்பத்தாரை வரவழைத்து பேசினார். "இருவரும் மேஜர். எனவே அவர்கள் விருப்பப்படி நடக்க உரிமை உண்டு. நீங்கள் பிரச்னை செய்யக்கூடாது,' என, போலீசார் அறிவுறுத்தினர்.
பெண்ணின் பெற்றோர், "இனி எங்களுக்கும், பெண்ணுக்கும் சம்மந்தம் இல்லை. நாங்கள் செல்கிறோம்,' என்று போலீசாரிடம் கூறிவிட்டு சென்று விட்டனர்.
இதையடுத்து போலீசார் "திருமண ஜோடியிடம், உடனே சார் பதிவாளர் அலுவலகத்தில், திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்,' என, அறிவுறுத்தி, வாழ்த்தி அனுப்பினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.