கோவை:கோவை மாநகராட்சி சாதாரண கவுன்சில் கூட்டம், மேயர் வேலுசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில், தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக, கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது.
மாலை 5:30 மணிக்கு கவுன்சில் தீர்மானங்களை மேயர் வாசிக்க துவங்கினார். ஒவ்வொரு தீர்மானமாக படிக்க காலவிரயம் ஏற்பட்டதால், கவுன்சில் அனுமதியோடு தீர்மான எண்களை மட்டும் குறிப்பிட்டார்.
தி.மு.க., கவுன்சிலர்கள் மாலை 5:50 மணிக்கு வெளிநடப்பு செய்தனர். அதன்பின், 10 நிமிடத்தில் அனைத்து தீர்மானங்களும் வாசிக்கப்படாமல் "ஆல் பாஸ்' என, அறிவித்து, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேஜையை தட்டியதும் கூட்டம் நிறைவடைந்தது.
மாநகராட்சி வருவாயை உயர்த்த வணிக வளாக கடைகளுக்கு வாடகை நிர்ணயம்; குடிநீர் பற்றாக்குறை சமாளிக்க டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய 75 லட்சம் ரூபாய்க்கான தீர்மானம்; பில்லூர் நீரேற்று நிலையத்தில் சுற்றுச்சுவர் அமைத்தல்; ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில் 24ஙீ7 குடிநீர் திட்டத்திற்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்; பாதாள சாக்கடை திட்டப்பணிகள்; குடிநீர் திட்டப்பணிகள்; மாநகராட்சி அலுவலக கட்டட மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் பதித்து, மின்உற்பத்தி செய்ய மதிப்பீடு தயாரித்து, பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட 59 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.