district news | கேரளாவில் தொழில் போட்டியால் எல்லையோர பால் விவசாயிகள் பாதிப்பு| Dinamalar

தமிழ்நாடு

கேரளாவில் தொழில் போட்டியால் எல்லையோர பால் விவசாயிகள் பாதிப்பு

Added : பிப் 01, 2013
Advertisement
கேரளாவில் தொழில் போட்டியால் எல்லையோர பால் விவசாயிகள் பாதிப்பு

கோவை:கேரள தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை குறைக்க நிர்பந்திப்பதற்கு எதிராக, எல்லையோர விவசாயிகள், கோவை கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
கோவை மாவட்டத்தில், கேரள எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களான வழுக்குப்பாறை முதல் கிழவன்புதூர் வரை, 5,000 விவசாயிகளிடம் இருந்து, பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பால் கொள்முதல் செய்து வருகிறது. தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனம், உள்ளூர் வியாபார பிரச்னைகளை காரணம்காட்டி, பால் கொள்முதல் விலையை குறைக்க வேண்டும் என, விவசாயிகளிடம் வலியுறுத்தி வருவதாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட விவசாயிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
நேற்று பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்ட, திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் தலைமையில், எல்லைப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
கேரளாவை சேர்ந்த சம்பந்தப்பட்ட தனியார் பால் நிறுவனத்தினர், 500க்கும் மேற்பட்ட பால் கறவையாளர்களை பணியமர்த்தி, விவசாயிகளின் நிலத்துக்கு வந்து பால் கறந்து செல்கின்றனர்.
தூரத்தை பொறுத்து, பால் லிட்டருக்கு ரூ. 18 முதல் ரூ. 22 வரை விலை கொடுக்கின்றனர். கேரளாவில் அரை லிட்டர் பால் பாக்கெட்டுக்கு ரூ. 2.20 கமிஷன் கொடுத்து, ரூ. 17க்கு விற்பனை செய்கின்றனர்.
ஆனால், சமீப காலமாக, போட்டி நிறுவனம் ஒன்று அரை லிட்டர் பால் பாக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கமிஷன் கொடுத்து, அவர்களின் தயாரிப்பு பாலை கேரளாவில் விற்கின்றனர்.
இதனால், எங்களிடம் கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படுகிறது. இதை காரணம் காட்டி, லிட்டர் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு ரூபாய் வரை குறைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது.
இதனால், 5,000 விவசாயிகளும், 500க்கும் மேற்பட்ட பால் கறவையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட பால் நிறுவனங்களை அழைத்துப் பேசி பால் உற்பத்தியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஆவின் பால் கொள்முதல் மையங்களை, எல்லைப் பகுதி கிராமங்களில் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முறையீட்டு கூட்டத்திலும், விவசாயிகள் பேசினர்.
கலெக்டர் கருணாகரன் கூறுகையில், ""ஆவின்' நிறுவனம் கமிஷன் எடுக்காமல் பால் கொள்முதல் செய்து வருகிறது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆவின் "மொபைல்' கொள்முதல் நிலையம் வாயிலாக, பால் கொள்முதல் செய்வது குறித்து, ஆய்வு செய்கிறோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை