புதுடில்லி : ""திருத்தப்பட்ட லோக்பால் மசோதா விஷயத்தில், மத்திய அரசு எங்களையும், நாட்டையும் ஏமாற்றிவிட்டது; வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,'' என்று, சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே கூறினார்.
லோக்பால் மசோதாவை, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முன்தினம் ஆலோசிக்கப்பட்டது. பார்லிமென்ட் தேர்வு குழு அளித்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே அரசின் பரிசீலனையில் இருந்து வரும் லோக்பால் மசோதாவில், குறிப்பிட்ட சில திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, நிருபர்களுக்கு பேட்டியளித்த சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே கூறியதாவது:வலுவான லோக்பால் மசோதாவை அரசு கொண்டு வந்தால், நான் அரசை பாராட்டுவேன். இல்லையேல், மக்களை சந்திப்பேன்.லோக்பால் விஷயத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. குறிப்பாக அனைத்து அரசு அதிகாரிகளும், லோக்பால் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்; சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி வழங்க வேண்டும் ஆகியவை திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்படவில்லை.
நான் நாட்டு மக்களிடம் கேட்டு கொள்வது எல்லாம், நாட்டிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், நல்லவர்களை, பார்லிமென்ட்டிற்கு அனுப்புங்கள், இல்லையேல் ஜன் லோக்பால் வராது.நேற்று முன் தினம் பீகாரில், பயணத்தை துவக்கினேன். நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, மத்திய அரசு ஏமாற்றியதை வெளிச்சம் போட்டு காட்டுவேன்.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அன்றிலிருந்து என் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி, நல்ல மக்களை பார்லிமென்ட்டிற்கு அனுப்புங்கள் என வலியுறுத்த இருக்கிறேன்.ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, என் போராட்டம் தொடரும்; நாட்டிற்கு அனைத்தையும் வழங்க தயாராக இருக்கிறேன்."லோக்பால் மசோதா பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படும்' என, சோனியா எனக்கு கடிதம் எழுதினார். நான் அவருக்கு அனுப்பிய கடிதத்தில்,"சி.பி.ஐ., மற்றும் சி.வி.சி., ஆகிய அமைப்புகள் லோக்பால் வரம்புக்குள் வருமா, அல்லது ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் வரை, சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி வழங்கப்படுமா' என, கேள்வி எழுப்பி இருந்தேன்.இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
யோவ்... போய் வேற ஏதாவது தொழில் செய்து பிழைப்பை நடத்து... என்னமோ நாட்டில் உள்ள எல்லோருக்கும் அறிவு இல்லாதது போலவும்... இவருக்கு தான் தலை நிறைய மூளை இருப்பது போலவும் நினைப்பு... இந்த வயதில் காந்தி கனவெல்லாம் வேண்டாம்...ஓய்வு ஊதியம் பெரும் ஆட்களை வைத்தெல்லாம் மகுடிவித்தை செய்யதீர்... முடிந்தால் தேர்தலில் நின்று 430 M . P க்களை பெற்று எல்லாத்தையும் சாதிக்கலாம்... போய் வேலைய பாருப்பா...
ஏய்யா சும்மா பெனாதிகீனுகீரே... காந்தி குல்லா போட்டுவிட்டால் காந்திஜி ன்னு நினைப்பு... நீங்கள் இந்திய நாட்டின் சர்வாதிகாரி போல் ஆக முடியாது... ஒரு முனிசிபாலிட்டி கவுன்சிலர் ஆக முடியாதவநேல்லாம் நாட்டின் சர்வாதிகாரி போல் நினைப்பது..கீழ்பாக்கம் மருத்துவமனையில் இருந்துகொண்டு சொல்வது போல் இருக்கிறது...என்னமோ இந்த புடலங்காய் தான் 125 கோடி மக்களின் ஒரே பிரதிநிதி போல் நினைக்கிறார்...
நான் ஆஸ்கர் அவர்டுல ஆலோசகராக இருந்திருந்தால்.... திரு ஹசாரே அவர்களுக்கு உலகமகா ஆக்டர் அவார்டுக்கு பரிந்துரை செய்து இருப்பேன்... அய்யா புது மந்திரம் கத்தவன் பொண்டாட்டிகிட்ட போட்டு கட்டின கதை தெரியுமா அய்யா.... உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்ளலாம் அதன் பிறகு வியாபாரத்தில் ஈடுபடலாம் ...அதை நீங்கள் செய்யவில்லை என்று நினைக்கின்றேன்... நேரடியாக சந்தைக்கு வந்துவிட்டீர்கள் ...தங்களுடைய சரக்கு தரத்தை மக்கள் உணர்ந்து விட்டனர் வியாபாரத்தை மூடை கட்டிவிட்டு ...கிஜிரிவளோடு இணைந்து அனைத்து மக்களவையலும் பொய் மூட்டையை அவிழ்த்துவிட்டு வாருங்கள்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.