சென்னை :"விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, முத்தரப்பு பேச்சு வார்த்தை நேற்று துவங்கியது. இதன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கு, அரசின் அழைப்புக்காக, முஸ்லிம் அமைப்பினரும், கமல் தரப்பினரும் காத்திருக்கின்றனர். இதனால், விஸ்வரூபம் படம் வெளியாவதில், இழுபறி நிலை தொடர்கிறது.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், "முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர்.சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை. அரசு தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரவில்லை என்று இதற்கு காரணம் கூறப்படுகிறது.இந்நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெறலாம் என்று தெரிகிறது. இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், விஸ்வரூபம் திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியவரும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஓவியர் ஹுசைன்னுக்கு விடுக்கப்பட்ட எதிர்ப்பு கமலுக்கு விடுக்கப்படவில்லை. கமல் நாட்டை விட்டு ஓடுகிறேன் என்று சொல்லுகிறார். இது ஒரு அரசியல் தான். என் சொத்து எல்லாம் போய்விட்டதே என்று அழுகிறார். இதுவும் லாபம் வந்த இவரு தரவா போறாரு. இவரை நம்பிய கலைபுலி தாணு ஆளவந்தானில் தலையில் துண்டை போட்டது தான் மிச்சம். கமல் அவருக்கு அடுத்த படம் பண்ணி அந்த நஷ்டத்தை ஈடு கட்டவில்லை. ஆனால் ரஜினி இவருக்கு கஷ்டம் என்றால் ஒரு படம் நடித்து நஷ்டத்தை நட்புக்கு பரிசாக தருகிறேன் என்று சொல்லுகிறார். கமல் படம் இஸ்லாமியர் உணர்வுகளை புண்படுத்தவில்லை என்று சொன்னால் மட்டும் போதும். நடிகரே இவளவு அரசியல் பண்ணும் போது அரசியலில் இருக்கும் அம்மா இதை வைத்து குளிர் காய நினைப்பது ( தப்பா, தப்பு இல்லையா ) ஜயாவை பொறுத்த வரை சரி தான். சங்கராச்சாரியார் ஆஸ்பத்திரியை சசிகலாவுக்கு கொடுக்கவில்லை என்று தாம் அம்மா உள்ள தூக்கி போட்டாங்க. ஹிந்து பத்திரிகை, ஒரு பொண்ணு பேருல கஞ்சா வழக்கு (பானுவா..அது) வெங்கடேச பண்ணையார் டுமீல், கருணா கைது... எல்லாம் அரசியல் தான். அம்மா இதையும் தாண்டி நாட்டுக்கு நல்லது pannanum. மு.க வர வேண்டும் அதுக்கு தான் சொல்லறேன்.
விஸ்வரூபம் பட பிரச்சினை அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது தெளிவாக அனைவருக்கும் புரிகிறது. முஸ்லிம்கள் நண்பர்கள் ஏன் ஒன்றுமே இல்லாத பிரச்சினைக்கு இவ்வளவு போராடுகிறார்கள் என்று புரியாத புதிராக உள்ளது. முஸ்லிம் நண்பர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்கிறார்கள்? சினிமாவினால் தமிழகத்தில் ஒரு சிறு மாற்றம் கூட இது வரை ஏற்பட்டதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கான்பூர், லக்னோ, போன்ற நகரங்களிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்தி விஸ்வரூபம் ஓடுகிறது. பாபர் மசூதி பி. ஜே. பி.யினரால் இடிக்கப்பட்ட போது கூட முஸ்லிம் நண்பர்கள் இந்த அளவிற்கு உணர்ச்சிவச படவில்லை. சிந்திக்கவும்....
இது அரசியலை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாக புரிகிறது. சினிமாவினால் நாட்டில் மாற்றம் ஏற்படும் என்றால் நம் தமிழ்நாடு பல ஆண்டுகளுக்கு முன்பே மிக பெரிய மாற்றம் அடைந்திருக்கும். முஸ்லிம் நண்பர்கள் போராட்டம் அர்த்தமற்றது. பி.ஜே.பி.யினரால் பாபர் மசூதி இடிக்கபட்ட போது கூட இந்த அளவிற்கு முஸ்லிம் நண்பர்கள் உணர்ச்சிவசபடவில்லை. இன்றைக்கு ஏன்? யார் உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது? மற்ற மாநிலங்களில் இந்த படம் நல்ல முறையில் ஓடி கொண்டிருப்பது தங்களுக்கு புரியாமல் போனது ஏனோ?
கமல் ஹாலிவூட் படங்களை இயக்கப்போவதற்கான முன்னோட்டமே இந்தப்படம். உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் தமிழ் நாட்டில் ஹாலிவூட் ரேஞ்சில் எடுக்கப்பட்ட இப்படம் அவர்களுக்கான ட்ரைலர் அன்றி வேறொன்றும் இல்லை. அதனால்தான் அவர் வெளிநாட்டில் குடிஏறப்போவதாக சொல்லியிருக்கிறார். இதற்குமுன் எத்தனையோ தமிழ் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டியிருக்கிறார்கள். தீவிரவாதி என்றாலே அது முஸ்லிம்கள்தான் என்பதுபோலே. அப்போதெல்லாம் இல்லாத பிரச்சினை இப்போது உருவாகுவதை பார்த்தால் இதற்க்கு பின்னணியில் வேறு எதோ காரணம் இருப்பதுபோல் தோன்றுகிறது. 24 இசுலாமிய அமைப்புகள் இப்படத்திற்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்திருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. இதில் எந்த இசுலாமிய அமைப்பில் நான் இருக்கிறேன் என்பதுதான் புரியவில்லை. வாசகர்களின் கருத்துக்களை படிக்கும் போது எந்த அளவிற்கு முஸ்லிம்கள் மேல் வெறுப்பும், துவேஷமும் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இத்தனை துவேஷம் வேண்டாமே. இது நமது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல - நமது எதிரிகளுக்குத்தான் நல்லதாக முடியும். நமது நாட்டிலேயே சொல்லவேண்டிய விஷயங்கள் - படமாக எடுக்க வேண்டியவகைகள் எத்தனையோ இருக்கிறேதே அதை சொல்லலாமே? ஆப்கானிஸ்தானைப்பற்றி சொல்லத்தான் வெள்ளையர்கள் இருக்கிறார்களே. பொதுவாக மதம், மொழி, இனம் ஆகியவை மனிதர்களை உன்மத்தம் கொள்ளவைத்துவிடும். அதற்க்கு நாம் இடம் கொடுக்காமல் இருப்போம். வியாபார ரீதியில் எடுக்கப்பட்ட படம், எங்கே தான் போட்ட பணம் திரும்ப கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம். லாபம் வந்தாலோ முதலீட்டைவிட நான்கு மடங்கு பலன். விதைநெல்லு கூட திரும்ப கிடைக்காமல், விளைச்சளுக்கேற்ற விலை கிடைக்காமல் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை............... வெள்ளாமைக்கு தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரத்திலோ ஊழல்.......... அனால் நமக்கோ கவலை கமலைப்பற்றி
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். கடவுள் அகங்காரத்தை எப்படி அழிக்கிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 100 கோடி போட்டு படம் எடுத்து, அந்தப் படத்தை திமிராக DTH ல் முதலில் வெளியிடுவேன்... நான் எடுத்த படம்.. என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கூறி எத்தனை விநியோகஸ்தர்கள், திரைப்பட உரிமையாளர்களை கண்ணீர் விடவைத்தார்? அதேநேரம் இந்தப் பிரச்சினை தீர படம் வெளியிடுவதை 15 தள்ளிப்போட்டாரே.. அப்பொழுது இவரது முதல் வீணானது தெரியவில்லையா? இஸ்லாமிய அமைப்புகள் (அது லெட்டெர் பேட் அமைப்பாக இருந்தாலும்) இதை எதிர்த்தபோது, அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியபோது திமிராக நிராகரித்தாரே... இப்பொழுது அரசு தடை விதித்தால் நஷ்டம் என்று கூறுவது ஏன்? இவரது பிசினெஸ் பிரச்சினைக்காக 15 நாள் கழித்து படத்தை வெளியிடலாம்.. ஆனால் அரசின் கோரிக்கையை நிராகரித்தபோது, அரசு நடவடிக்கை எடுத்தால் இவர் அதை வைத்து குதிப்பாராம். அரசு என்ன கிள்ளுக்கீரையா? இவருக்கு இது ஒரு படிப்பினை. இவர் தமிழகத்தை விட்டு வெளியேறினால் யாருக்கும் நஷ்டமில்லை.
ஏன் பட வெளியீட்டை இந்த அம்மையாரின் டிவி கோ அல்லது அம்மையாருக்கு வேண்டியவர்களுக்கு கமல் கொடுத்திருந்தால், கமலுக்கு இந்த பிரச்சினை வந்து இருக்காது. இன்னைக்கு வடநாட்டில் 800 தியேட்டர்களில் எந்த வித கலவரமும் இன்றி ரிலீஸ் ஆகி உள்ளது குறிப்பிட்ட மதத்தினர் அதிகமுள்ள ஹைதராபாத்தில் இரண்டு நாளைக்கு முன்பு ரிலீஸ் ஆகி படம் ஓடிகொண்டிருகின்றது வேண்டுமென்றால் குஜராத்தில் தடை செய்யப்படலாம் அது ஏன் என்று அனைவருக்கும் புரியும் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் இந்த நிலை ? விஸ்வரூப அரசியல் எங்கு உள்ளது ,யாரிடம் உள்ளது ???
இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இப்படம் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் டெல்லி, மும்பை நகரங்களில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓடிக்கொண்டு இருக்கிறது. இஸ்லாம் மதம் உலகம் முழுமைக்கும் பொதுவான ஒன்று. அப்படியிருக்க தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இஸ்லாமிய நண்பர்கள் இப்படத்தை எதிர்க்க வேண்டும்? இது எங்கோ நெருடுகிறது. ஒருவேளை விரைவில் சுமூக தீர்வு எட்டபடாமல் போனால், தமிழ் திரைப்படதுறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிவருங்காலங்களில் தமிழ் திரைபடத்தின் பெயரிலோ, கதாபாத்திரத்தின் பெயரிலோ அல்லது சம்பவங்களை குரிப்பிடும்போதோ இஸ்லாமிய பெயர்கள் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள். பிறகு இதை காரணம்காட்டி படத்திற்கு தடை கோரலாம். மற்ற மாநிலங்களில் சுமூகமாக இப்படம் ஓடும்போது இங்குமட்டும் தடை கோருவதால் இவ்வாறுதான் நினைக்க தோன்றுகிறது. இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
முதல்வர் அம்மா அவர்கள் இவ்வளவு அரசியல் முதிர்ச்சி இருந்தும் ஒரு சிறு தவறு செய்து விட்டார்கள். அவர்கள் கமலை குறைவாக எடை போட்டு விட்டார்கள். இப்பொது பாருங்க மொத்த தமிழ்நாடும், சிறு குழுக்களை தவிர கமலுக்கு ஆதரவாக இருக்கிறது. கமல் தனது ரசிகர்களை எப்போதும் தவறாக பயன் படுத்துவது இல்லை, அதனால் மக்களுக்கு அவர் மேல் ஒரு நல்ல அபிபிராயம். மக்கள் எல்லாம் இப்பொது என்ன தெரிந்து கொண்டார்கள் என்றால் கமல் பணம் ஆசை இல்லாதவன், எத்தனையோ கோடி சேர்த்தும் தனக்கு என்று ஒதுக்காமல் சினிமாவில் மீண்டும் முதலீடு செய்பவன், இப்படி பட்ட ஒருவன் தான் அரசியலில் வரவேண்டும் , அப்போது தான் அரசின் வருமானத்தில் வரும் கோடிகளை மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிப்பார் என்று புரிந்து கொண்டார்கள். கமலுக்கு அரசியல் பிடிக்க விலை தான், ஆனால் இனி மக்கள் அவரை அரசியலுக்கு இழுத்து விடுவார்கள் , அதற்கு காரனமாய் நீங்க தான். 2014 தேர்தலில் உங்களுக்கு அது உண்மையாகவை புரியும், 40 இம் நமக்கு தான் என்று சொல்லி கொண்டிருக்கும் நீங்கள் இப்பொது இருக்கும் நிலைமையில் 4 இடத்தில வெற்றி பெற கடினம். இந்த தேர்தலில் கமல் உங்களை நேரடியாக ஏதிர்கா விட்டாலும், மறைமுகமாக ஏதிர்பார். அவன் ஒரு பச்சை தமிழன், தெரியம் உள்ளவன். இப்பொது மும்பையில் பேட்டி கொடுக்கும் பொது, துணிச்சலாக இது அரசியல் வாந்திகளால் இந்த போராட்டம் கிழரபடது என்று.
விஸ்வரூபம் Hindi version has been released in more than 1000 screens in the north and seems to be drawing good crowd, according to trade analysts.(ஆதாரம் Behindwoods) வெறும் ஐநூறு திரைகளில் பாதுகாப்பு அளிக்கமுடியாது எனக் கூறிய முதல்வர் இனி எங்கே போய் ஒளிவார்? U.S.A. BOX-ஆபீஸ் VISHWAROOPAM [Tamil]: In its ing week, the film has collected $ 6,34,912 [Rs. 3.43 crores] on 44 screens,இனியுமா எதிர்ப்பு?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.