புதுடில்லி : ""எல்லையில் பதட்டம் குறைந்து வருகிறது; இருப்பினும், பாகிஸ்தான் அளித்துள்ள வாக்குறுதிகள் நிறைவேறும் வரை, நல்லுறவு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது,'' என்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.
இந்திய எல்லையில், ராணுவ வீரர்கள் ஹேம்ராஜ், சுதாகர்ராவ் ஆகியோர், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதையடுத்து, எல்லையில் பதட்டம் நிலவியது. பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பாகிஸ்தான் இறங்கிவந்தது. எல்லைப்பகுதியில் பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இதுகுறித்து, டில்லியில் நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் அந்தோணி கூறியதாவது: எல்லையில் பதட்டம் தணிந்துவிட்டது என்பதற்காக நாம் கவனக்குறைவாக இருந்துவிடக்கூடாது; தொடர்ந்து தீவிர பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நமக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. வாக்குறுதிகள் மட்டும் போதாது. சொன்னபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதுவரை, பாகிஸ்தானுடனான நல்லறவு மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது.இவ்வாறு, அவர் கூறினார்.பாகிஸ்தான் அளித்த வாக்குறுதிகள் விபரத்தை வெளியிட அந்தோணி மறுத்துவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சார் சும்மா கதை விடவேண்டாம் பாகிஸ்தான் கடந்த காலங்களில் இந்தியாவோடு எந்த விதத்தில் ஒத்து போனார்கள்? பாகிஸ்தான் திருந்த வாய்ப்பே இல்லை. மனைவி, மக்களை பிரிந்து நமக்காக எல்லையில் உயிரை விடும் அந்த இராணுவவீரனை, என் சகோதரனை நினைக்கும் போது, நெஞ்சம் பூரிப்பு அடைகிறது ஆனால், அவன் தலை துண்டிகபட்டு, முண்டமாக கிடப்பதை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. பின்லேடனை, பாகிஸ்தானிலே வைத்து போட்டன் அமெரிக்கா, அவன் தான் உண்மையான நாட்டுப் பற்று உடையவன். நம்ம நாட்டில் என்ன நடக்குது? பிரச்சனைகளை மூடி
மறைக்கணும். குட்ட குட்ட குனிபவனும் முட்டாள், குட்டுபவனும் முட்டாள். அவனக்கு ஒரே பிரச்சனை காஷ்மீர் தான். நாடு முன்னேறனும், மக்கள் முன்னேறனும் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்பதே கிடையாது. அங்கு வரும் எந்த தலைவராக இருக்கட்டும், அவங்க செய்யுற முதல் வேலை காஷ்மீர் விசயத்தில் மூக்கை நீட்டுவது, அதுதான் அவங்களோட வேலை, வேற எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். இந்திய கொஞ்சம் ராஜா தந்திரத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்க அவனுடை இரண்டு இடத்தை பிடி, அடி, ஓடுவான். காஷ்மீரை விட்டே ஓடுவான். இரண்டு முறை போர் வந்தும் திருந்த வில்லை. திருந்தபோவதும் இல்லை. பாராளுமன்றத்தை, மும்பை போன்ற இடங்களில் தாக்கினார்கள், நாம் என்ன செய்தோம். இனிமேலாவது இந்தியா, பாகிஸ்தானுக்கு ஒரு சரியான பதிலடி கொடுக்க வேண்டும், அது இறுதியாக இருக்க வேண்டும். ஜெய் பாரதி மாதா மக்களுக்கு இன உணர்வு தான் இருக்கிறதே தவிர, தேசிய உணர்வு கிடையாது பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. குற்றவாளிகளுக்கு, அரசியல்+போலீஸ்+நீதிமன்ற உதவிகள் கிடைக்கும் வரை, அப்பாவி மக்களின் பாடுதான் மிக மோசமாக இருக்கும். மழை இல்லை, மின்சாரம் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம்? அடிதாட்டு மக்கள் என்ன செய்வார்கள்? ஜெய் ஹிந்த்
\\\கிறிஸ்த்துவ மதத்தை சார்ந்தவர், சோனியாவின் விசுவாசி வேறு எந்த தகுதியும் அற்றவர்.\\\\ திரு.சேஷாத்ரி கிருஷ்ணன் அவர்களே, மனிதனை மனிதனாக பாருங்கள்... மதத்தால் பார்க்காதீர்கள்....மற்ற அமைச்சர்களைவிட A K அந்தோணி எந்த விதத்திலும் குறைந்தவரல்ல... மேலும் எந்த ஊழல் வழக்கிலும் சிக்காமல் "மிஸ்டர் கிளீன்" என்ற பெயருடன் இருப்பவர்....ஆகவே, பார்வையை மாற்றுங்கள்.....
திரு. ஹுசைன், அந்தோணி மீதும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன .... மத அடிப்படையிலேயே அந்தோணியும், முன்னாள் சிவிசி ஆணையர் தாமசும் தத்தம் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.... இதில் தாமஸ் கேரளாவில் ஏற்கனவே ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிந்தும் சிவிசி ஆணையராக நியமிக்கப்பட்டார் இது உண்மை ... அலைக்கற்றை ஊழலில் சிதம்பரம் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர் மறு ஏலம் பற்றிய முடிவு எடுக்க வேண்டிய குழுவுக்குத் தலைவராக முடியாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக் கூட அவரையே இன்-சார்ஜ் ஆகா நியமித்தது மத்திய அரசு யார் கையிலோ சாவியைக் கொடுத்தது போல என்பார்களே .... அது மத்திய இத்தாலிய மாபியா அரசுக்கு ரொம்பவே பொருந்தும் .... அந்தோணியும் கை சுத்தமானவர் அல்ல...
பாகிஸ்தான் நமக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. வாக்குறுதிகள் மட்டும் போதாது. சொன்னபடி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் ( வேறென்ன சொல்லிருப்பார்கள் போனாபோவது தீவிரவாத ஒழிப்பிற்காக பல ஆயிரம் கோடி அமெரிக்கா கிட்ட வாங்குற பணத்துல இத்தனை கோடி கொடு அதுல என்பங்கிற்கு எடுத்து கேரளாவில் நாங்க உங்களுக்கு ஆதரவா சில இயக்கங்களை தொடங்கி உள்நாட்டுல ஆப்பு வைக்கிறோம் . எப்படி நம்ம திட்டம் . பாகிஸ்தான் அளித்த வாக்குறுதிகள் விபரத்தை வெளியிட அந்தோணி மறுத்துவிட்டார்
ஐயா ராணுவ அமைச்சரே, உலக வரைபடங்களை காட்டும் பகுதிகளில் உங்களது ஆளுங்களை ரெகுலரா பாக்க சொல்லுங்க, இப்பவே இந்தியாவை மொட்டை தலையாதான் பாக்க முடியுது?சின்ன உதாரணம் நாசாவின் trmm.gsfc.nasa.gov/trmm_rain/Events/latest_big_3hrly.gif இதன் மூலமாவது உங்களுக்கு புரியும், நம்ம நாட்டோட எந்த பகுதிகளை தீவிரவாதம் மூலமாக திருடுராங்கன்னு, அப்புறம் நீங்க மத்த விஷயங்களை கவனிக்கலாம்
திரு சேஷாத்திரி அவர்களே நீங்கள் கூறியுள்ளது மிகவும் உண்மை.இந்த நாட்டை கேவலப் படுத்துவதற்காகவே அவதாரம் எடுத்து இத்தாலியில் இருந்து இந்தியாவிற்க்கு வந்துள்ளார் இந்த அம்மையார்.பதவிப் பேய் பிடித்த இந்திய காங்கிரசார் இவரையே தலைவராக ஏற்றுக் கொண்டு நமது நாட்டை மிகவும் இழி நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.