நகரி: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து, சிறுவன் ஒருவன் குறித்த நேரத்தில் தகவல் தெரிவித்ததால், சப்தகிரி விரைவு ரயில் தண்டவாளத்தில் விபத்தில் இருந்து தப்பியது.
சப்தகிரி விரைவு ரயில், நேற்று மதியம், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சென்றது. ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள, பொன்பாடி - தடுக்குபேட்டை ரயில் நிலையகளுங்களுக்கு இடையே, மாலை, 4:00 மணிக்கு வந்து கொண்டிருந்தது.சப்தகிரி விரைவு ரயில் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, அவ்வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்றது. அந்த ரயிலின் கடைசி பெட்டி, மேற்கண்ட இரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து சென்றதும், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது.
இதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிரஞ்சீவி என்ற சிறுவன் கவனித்தான். உடனே, அருகில் இருந்த, ரயில்வே கடவுபாதையில், பணியில் இருந்த ஊழியரிடம், விஷயத்தைக் கூறினான். அவர் இதுகுறித்து, ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் துரிதமாக செயல்பட்டு, அவ்வழியாக வந்து கொண்டிருந்த சப்தகிரி விரைவு ரயிலை நிறுத்தினர். தகவல் அறிந்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை சரி செய்தனர்.
இதையடுத்து, சப்தகிரி ரயில் ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. சிறுவன் சமயோசித புத்தியால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும், பயணிகளும் சிறுவனை பாராட்டினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விபத்திலிருந்து மத்திய அரசின் உரிமையான ரயிலை விபத்திலிருந்து காப்பாற்றியதுடன் அள்ளாமல் அதில் பயணம் செய்த அனைத்து உயிர்களையும் காப்பற்றியிருக்கிறான். அவருக்கு சம்பந்தப்பட்ட அரசுகள் தக்க சன்மானத்தை கொடுப்பதுடன் அள்ளாமல், அந்த பணிகளை செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நியமிக்கப்பட்ட ஊழியர்களை(அவர்களின் பணிகளை சரிவர செய்யாததற்கு) தண்டிக்கவும் செய்யவேண்டும் என்பது எனது கருத்து.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.