E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2013,01:05 IST
கருத்துகள்  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பாரதிதாசன் பல்கலையில், கடந்த ஆண்டு பட்டம் வழங்காததால், 58 ஆயிரம் மாணவர் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.திருச்சி பாரதிதாசன் பல்கலையின் கட்டுப்பாட்டில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த, 93 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன.

இக்கல்லூரிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டு இறுதியிலும், பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிப்பை நிறைவு செய்து வெளியேறுகின்றனர்.அப்போது அவர்களுக்கு, உடனடியாக, "புரவிஷனல்' சான்று, மதிப்பெண் சான்று வழங்கப்படும். இந்த சான்றை, மாணவர்கள் தங்களது உயர்கல்வி, வேலைவாய்ப்புக்கு பயன்படுத்திக்கொள்வர். புரவிஷனல் சான்று, ஆறு மாதத்துக்கு பின் செல்லாது; அதன் பிறகு பட்டம் அவசியம்.பட்டம் இருந்தால் தான் மேல் படிப்புக்கோ, வேலைக்கோ செல்ல முடியும்.

2011-2012 கல்வி ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்த, 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு, இன்னும் பட்டம் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக பட்டம் வழங்க வேண்டும் என, கல்லூரி நிர்வாகங்கள், பல்கலை நிர்வாகத்திடம் கோரி வருகிறது. ஆனால், பல்கலைநிர்வாகம் பதில் கூறாமல் அமைதியாகவே உள்ளது.

இதுகுறித்து பல்கலை வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பல்கலை துணைவேந்தராக மீனா பதவியேற்றார். பல்கலையில் ஏராளமான முறைகேடு புகார்கள் உள்ளன. ஆட்சி மாற்றத்துக்குப்பின், முதல்வர் ஜெயலலிதாவை, துணைவேந்தர் மீனா சந்திக்க முயன்று வருகிறார். தன்னை சந்திக்க, இதுவரை, துணைவேந்தருக்கு, முதல்வர் தேதி கொடுக்காமல்

Advertisement

உள்ளார். இந்நிலையில், முதல்வரை குளிர்விக்கும் வகையில், அவரது கையால் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு, ஒரே நேரத்தில் பட்டம் வழங்க, துணைவேந்தர் திட்டமிட்டுள்ளார்.அதற்காகவே, இதுவரை மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்காமல்நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதமே, கடந்த கல்வியாண்டில் படிப்பை முடித்த, மாணவர்களுக்கு பட்டம் வழங்கியிருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

பட்டம் வழங்காததால், தங்கள் குழந்தைகளின் மேல் படிப்பு, வெளிநாடு செல்வது, வேலை வாய்ப்பு தடைபடுவதாக, பெற்றோர் புலம்பி வருகின்றனர். இனியும், பல்கலை அமைதி காக்காமல், உடனடியாக பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.