சென்னை :"விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. இதில் இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், "முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.
அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.
இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. இதில், உள்துறை செயலாளர், நடிகர் கமல் மற்றும் முஸ்லீம் தரப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில், சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய 7 காட்சிகளில் ஒலியை நீக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட தங்களுக்கு சம்மதம் என முஸ்லிம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படும். கமலுக்கும் தங்களுக்கும்இடையே தனிப்பட்ட விரோதம் இல்லை என முஸ்லிம் பிரதிநிதிகள் கூறினர். இதனிடையே, விஸ்வரூபம் படத்திற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெறப்படும்.இதனையடுத்து விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்ந்தது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்,இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்த முதல்வருக்கும். பொறுமையாக கருத்துக்களை கேட்ட உள்துறை செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த கூட்டத்தில் இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம். சர்ச்சைக்குரிய 7 காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்துள்ளேன். மத்திய தணிக்கை துறை அனுமதி பெற்ற பின்னர் அறிவிக்கப்படும். எங்கள் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்படும். தடை உத்தரவும் வாபஸ் பெறப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து உடனடியாக அறிவிக்கப்படும் என கூறினார்.
மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா கூறுகையில், இரு தரப்பினரும் எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். விஸ்வரூபம் படத்திற்கு எதிரான அனைத்து போராட்டமும் வாபஸ் பெறப்படும் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வணக்கம், அணைவரும் அறிந்தும் அரியாத உண்மையை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் வரும் மத சண்டைகள் அனத்தும் அரசியல்வா(வியா)திகலாள் உருவாகிறது. உண்மையை சொல்லுங்கல் நாம் பக்கதுவீட்டுகாரன் மதத்தை நாம் தினமும் சிந்திப்போமா. எண்ட்றாவது பலகாரம் தரும்போதுதாண் அவன் மதமே நிணைவுக்கு வரும். என்றுமே அவன் நம்மில் ஒருவன். பாஜக,ஆர்எஸ்ஸ், மற்றும் முஸ்ஸிலிம் கட்சிகளும் இவ்வேளையை செவ்வெண் செய்கிறது
விஸ்வரூபம் படம் தொடர்பாக கடந்த வார நிகழ்வுகளை பார்க்கும்பொழுது தொலைக்காட்சி செய்தி , செய்திதாள் மற்றும் சமூகவளைதலங்களில் பொதுமக்கள் கமல் ரசிகர்கள் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கருத்தாளர்கள் குறிப்பாக தினமலரில் பதிவான அனைவரது கருத்துகள் விஸ்வரூபம் சமந்தமாக செய்தி வெளிட்ட சில மணிநேரங்களில் 600க்கும் மேற்பட்ட கருத்துக்கள் இவைகளை ஆய்வார்ந்து பார்த்தால் அரசுக்கும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைப்புகளுக்கும் மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக மேல்குறிப்பிட்ட செய்திகளின்மூலம் தெளிவாகிறது.
தமிழ் மக்களை ..தமிழ் நாட்டை நினைத்தால் மிக கவலையாக இருக்கிறது ...சுமார் இருபத்தி ஐயாயிரம் கோடி பணத்தை குடித்து குடித்து நாட்டுக்கு வரியாக கட்டிவிட்டு ..சில நூறு கோடிகளை இலவசம் என்ற பெயரில் பிச்சையாக பெறுவதில் சந்தோஷ படும் இந்த பாமரனை நினைத்தால் நெஞ்சு பொறுக்கவில்லை மாறுவது எப்போது ..சினிமாவிலும் ..மதத்திலும் கட்டுண்டு இருக்கும் நீ மாறுவாயா
நேற்று தான் சிங்கப்பூரில் படம் பார்த்தேன். தடை செய்யும் அளவுக்கு படத்தில் எதுவுமில்லை. சில காட்சிகள் மட்டும் கொஞ்சம் கொடூரமாக இருக்கின்றன (ஏற்கனவே யுடியூப்பில் இந்த மாதிரி காட்சிகள் இருக்கின்றன).
ஆப்கன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபமாய் இருக்கின்றன. ஆனால் அதை தவிர்த்துப் பார்த்தால், படம் சுமார் தான்.
ஏற்கனவே பல படங்களில் பார்த்த அமெரிக்கா, சண்டைகள் என கொஞ்சம் போர் தான். திரைக்கதையில் இன்னும் தெளிவு தேவை. பி மற்றும் சி சென்டர்களில் இந்த படம் ஓடுவதற்கு வாய்ப்பு குறைவு தான்.
நானும் படம் பார்த்தேன் . பாபு எழுதி உள்ள விமர்சனம் 100 % சரியே சி சென்டரில் போடவே முடியாது . அந்நிய மொழிகள் அதிகமாக உள்ளது. திரைகதை விறுவிறுப்பு இல்லை. வழக்கமான துப்பாக்கி போன்ற ஒரு படம். போட்ட காசை மட்டுமே எடுக்க முடியும். தடை செய்ய கூடிய விமர்சிக்க கூடிய அளவுக்கு ஒன்றுமே இல்லை. இவர்கள் பண்ணுவது நாடகமா? இது என்னுடைய நேர்மையான விமர்சனம்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.