Pokkisham | யோகாவில் அசத்தும் கோவை கூலி தொழிலாளியின் மகள்| Dinamalar

யோகாவில் அசத்தும் கோவை கூலி தொழிலாளியின் மகள்

Updated : பிப் 02, 2013 | Added : பிப் 02, 2013 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை விலாங்குறிச்சியைச் சேர்ந்த பத்து வயதான பிரதீபா, அங்குள்ள பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அப்பா பூவராகவன் கூலித்தொழிலாளி. அன்றாடம் சம்பாதித்ததால்தான் குடும்பத்தை நடத்தமுடியும்.
சிரமமான சூழ்நிலையில் வளர்ந்து வந்தாலும் பிரதீபாவிற்குள் ஒரு ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றல் யோகா கலையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. மாநில அளவில் நடந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றதும் அனைவரும், "யாரது பிரதீபா' என்று கேட்டு திரும்பிப் பார்த்தனர், மாநில சாதனை படைத்த கையோடு குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு, மூன்றாவது இடத்தை பெற்றதும் திரும்பிப் பார்த்தவர்கள் பிரதீபாவை விரும்பி பாராட்டினர்.
தற்போது மேமாதம் மலேசியாவில் நடக்க உள்ள சர்வதேசச போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதற்கான கடுமையான பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். வறுமை காரணமாக பிரதீபாவின் திறமை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக "ஈரநெஞ்சம்' அமைப்பினர் முயற்சி எடுத்துள்ளனர், அவர்களது முயற்சி பலன்தரட்டும்.சர்வதேச போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க பிரதீபாவிற்கு வாழ்த்துக்கள்.- எல்.முருகராஜ்


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karam chand Gandhi - Auroville,இந்தியா
07-பிப்-201313:19:27 IST Report Abuse
Karam chand Gandhi நல்ல முயற்சி
Rate this:
Share this comment
Cancel
E Sreekanth - singapur,சிங்கப்பூர்
07-பிப்-201308:19:27 IST Report Abuse
E Sreekanth வாழ்த்துக்கள் பிரதிபா,... இந்த பொண்ணை பசங்க படத்தில பார்த்த மாதிரியான முகமாக இருக்கு.. கொஞ்சம் தெளிவாக்க வேண்டும் தெரிந்தவர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
07-பிப்-201307:19:06 IST Report Abuse
p.manimaran மகளுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
B RAJARATHINAM - salem,இந்தியா
06-பிப்-201306:03:09 IST Report Abuse
B RAJARATHINAM நல்ல ஒரு முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Kalimuthu Iyamperumal - Chennai (Madras),இந்தியா
05-பிப்-201311:48:57 IST Report Abuse
Kalimuthu Iyamperumal நான் இந்த சிறுமியை மலேசியா சென்று வர வாழ்த்தியும் அந்த சிறுமிக்கு தொண்டுள்ளங்கள் உதவ வேண்டும் என என கருத்தை தெரிவித்திருந்தேன் .துரதிச்ட்மாக் என கருத்து ஏனோ வரவில்லை .மிக்க வருந்துகிறேன்......வாழ்க வளர்க வெல்க ...........
Rate this:
Share this comment
Cancel
சூப்பர்ஸ்டார் - Delhi,இந்தியா
05-பிப்-201310:39:36 IST Report Abuse
சூப்பர்ஸ்டார் மென் மேலும் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-பிப்-201309:33:44 IST Report Abuse
Nallavan Nallavan யோகப்பயிற்சியின் வாயிலாக குண்டலினி எழுச்சி ஏற்படலாம் ... பிரதீபா என்றாலே குண்டலினி எழுச்சியைக் குறிக்கும் ... இந்தச் சிறுமியின் பெயரும் அதுவே என்னே, பெயர்ப் பொருத்தம் ...
Rate this:
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
03-பிப்-201308:24:51 IST Report Abuse
ravi ramanujam r தமிழக அரசும் இந்த பெண்ணிற்கு முடிந்த உதவிகளை செய்து பதஞ்சலி முனிவர் நம் பாரத நாட்டிற்க்கு அளித்த அரும் பெரும் பொக்கிஷமான யோகாசன கலையை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தனி பாடமாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஈர நெஞ்சம் அமைப்பினர் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்க நீவிர் பல்லாண்டு என இறைவனை இறைஞ்சும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு ஆற்றும் பணி என மனதில் உறுதி கொண்டு உங்கள் பணி சிறக்க வாழ்த்தும்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
04-பிப்-201316:37:24 IST Report Abuse
Nallavan Nallavanயோகக்கலை பதஞ்சலி முனிவர் அளித்தது அல்ல அவர் காலத்துக்கு முன்பே இது பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது .... அதன் பெயர் ஹதயோகம் .... இதனுடன் புலனடக்கம் (குறிப்பாகப் பிரம்மச்சரியம்) கடைபிடிப்பதன் மூலம் குண்டலினி எழுச்சி ஏற்படுகிறது .... ஹதயோகத்தில் முக்கிய அம்சமே வித விதமான முத்திரைகள், மற்றும் ஆசனங்கள் .... நீங்கள் பதஞ்சலி அருளியதாகக் குறிப்பிடும் யோகம் (யோகம் என்ற வட மொழிச் சொல்லுக்குத் தமிழில் "இணைப்பு" என்று பொருள்.), ராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது .... ராஜயோகம் ஆரோக்கியத்துடன்,,,,, வீடுபேறும் அளிக்க வல்லது ,.... தூய்மையான நோக்கமுடைய (அதாவது ஆயுளை நீட்டிக்க மற்றும் விரும்பியோரை வசீகரிக்க என்ற பழுதான நோக்கங்கள் இல்லாமல்) ஹதயோகத்தை ராஜயோகத்தின் ஒரு பகுதி எனலாம் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை