Stalin not met important countries envoys | முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்காத ஸ்டாலின்: தமிழர்களுக்கு பலனளிக்காத பயணம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்காத ஸ்டாலின்: தமிழர்களுக்கு பலனளிக்காத பயணம்

Updated : பிப் 03, 2013 | Added : பிப் 02, 2013 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்காத ஸ்டாலின்: தமிழர்களுக்கு பலனளிக்காத டில்லி பயணம்,Stalin not met important countries envoys

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், டில்லி சென்ற குழுவினர், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை சந்திக்கவில்லை. இதனால், இந்த குழுவின் பயணத்தால், எவ்வித பலனும் ஏற்படவில்லை என, உலக தமிழர் அமைப்புகள் கருதுகின்றன.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை, டில்லியில் உள்ள, 47 நாடுகளின் தூதர்களிடம் வழங்குவதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் டி.ஆர்.பாலு, சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர், நான்கு நாள் பயணமாக, டில்லி சென்று விட்டு சென்னை திரும்பியுள்ளனர்.பார்லிமென்டில் இலங்கை தமிழர்களுக்காக, தீவிரமாக குரல் கொடுத்த ராஜ்யசபா எம்.பி.,க்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரை இந்த குழுவில் இணைத்து, அழைத்து செல்லவில்லை என்ற அதிருப்தி, தி.மு.க., எம்.பி.,க்கள் மத்தியில் நீடிக்கிறது.அதேபோல், லண்டனில் நடந்த, தமிழ் மாநாட்டிற்கு ஸ்டாலின், டி.ஆர்.பாலுவை பங்கேற்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்த, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.இதனால், டெசோ குழுவினர் திட்டமிட்டப்படி, ஐ.நா., சபையில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளின் தூதர்களையும் சந்திக்க முடியவில்லை.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் தூதர்களை இக்குழுவினர் சந்திக்கவில்லை.டெசோ பிரதிநிதிகளின் இந்த டில்லி பயணத்தால், எவ்வித பயனும் விளையப்போவதில்லை என்று உலகத் தமிழ் அமைப்புகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம், தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நாளை நடக்கிறது. அக்கூட்டத்தில் டில்லி பயணம் குறித்து விளக்கி, தொடர் நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படுகிறது.

மேலும், இம்மாதம் 7ம் தேதி, பீகார் மாநிலத்திற்கும், 8ம் தேதி, திருப்பதிக்கும், இலங்கை அதிபர் ராஜபக்ஷே வர திட்டமிட்டுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்பு சட்டை அணிவது அல்லது கறுப்பு பேட்ஜ் அணிவது என்ற போராட்டத்தை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது: அழகிரியின் பிறந்த தின விழாவில், பங்கேற்பதை தவிர்க்கும் வகையில், தன் டில்லி பயணத்தை, ஸ்டாலின் வகுத்துக் கொண்டார். ஐ.நா., சபை உறுப்பு நாடுகளின் தூதர்களிடம், தி.மு.க., - எம்.பி.,க்களை அழைத்து செல்லவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுலை, ஸ்டாலின் சந்திக்காமல் வந்ததும், டெசோ குழுவினருக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் வரை, இலங்கை தமிழர்கள் பிரச்னையில், ஆதரவான நிலைப்பாட்டை காட்டியாக வேண்டும் என்பதற்காக, டெசோ கூட்டம் நாளை கூட்டப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப் போவதில்லை. இந்தியாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிர்ப்பு தெரிப்பது, இலங்கை போர் குற்றங்கள் குறித்து, ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா.,வில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரித்து, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha Lingam - kerala,இந்தியா
15-ஏப்-201310:08:37 IST Report Abuse
Maha Lingam தமிழ் நாட்டின் தலை எழுத்த யாரும் மாத்த முடியாது இவங்கள நம்பினா....?
Rate this:
Share this comment
Cancel
T. Ramadass - New Delhi,இந்தியா
08-பிப்-201312:38:48 IST Report Abuse
T. Ramadass When the old man was in power, what did he do for Srilankan's Tamils. He has not mumbled even. Now these people are shedding crocodile's tears. Problem for Tamilian is there is no genuine and stronger native party
Rate this:
Share this comment
Cancel
varadh - chennai,இந்தியா
08-பிப்-201310:57:43 IST Report Abuse
varadh who knows may be planning to ask for foreign affairs ministry soon to visit switzerland or other countries to personally check the safety of the 2g money deposited with the foreign banks
Rate this:
Share this comment
Cancel
JOHN SELVARAJ - CHENNAI ,இந்தியா
06-பிப்-201314:49:53 IST Report Abuse
JOHN SELVARAJ எல்லா நாட்டு பிரதிநிதிகளையும் ஓரிரு நாளில் சந்திக்க முடியுமா? தி.மு.க எதைச் செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், இன்று ஆளும் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க வோ, முதல்வர் ஜெயலலிதாவோ, மற்ற கட்சிகளோ இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள், என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடமுடியுமா? இவர்களும் செயா மாட்டார்கள், அடுத்தவர்கள் செய்தாலும் குறை கூறுவார்கள்? இதுதான் ஜனநாயகம்????
Rate this:
Share this comment
Cancel
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
03-பிப்-201319:53:33 IST Report Abuse
Mohanadas Murugaiyan தி.மு.க. எது செய்தாலும் ஏமாற்று வேலை என்பவர்கள், சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போட்டதற்காகவே ஈழத்தாய் பட்டம் கொடுத்து பாராட்டினீர்களே ...., அவர் அதன்பிறகு அது தொடர்பாக என்ன செய்தார் என்று ஏன் கேட்கவில்லை.......???? ஒரு வேலை எல்லோரும் அதைத்தான் இவர்களிடமும் எதிர்பார்க்கிறீர்களோ.....????? தமிழனுக்காக இவர்களும் எதுவம் செய்ய மாட்டார்களாம்......, மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்களாம்......
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
03-பிப்-201319:09:17 IST Report Abuse
Raju Rangaraj டெல்லிக்கு போகும் போது எடுத்து கொண்டு போன டைகர் பிரியாணி [அது தாங்க புளிசோறு ] தீர்ந்து போனதால் பலநாட்டு தூதுவர்களை சந்திக்க முடியாமல் போனது குற்றமா ? பூரியும் சப்ஜியும் வயிற்றுக்கு ஒத்து கொள்வதில்லை. பாணி பூரி சாப்பிட்டால் உருளை கிழங்கால் வயிற்றில் காற்றோட்டம் உருவாக்கி தூதர்களை பார்த்து பேசும் போது வெடித்து சத்தம் வருவது கஷ்டமாக இருக்கிறது. எனவே அழகிரியின் அடுத்த பிறந்த நாளில் நிச்சயம் எல்லா நாட்டு தூதர்களையும் san திப்போம்
Rate this:
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
03-பிப்-201318:23:38 IST Report Abuse
K.Balasubramanian இலங்கை தமிழர்களை பற்றிய பிரச்சனைகளை இவர்கள் அரசியலில் பகடை காய்களாக பயன் படுத்த தார்மீகம் இல்லாதவர்கள் . தமிழர் நலமே பேணாதவர்கள் இலங்கைக்கு சென்று என்ன செய்தார்கள் ?
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
03-பிப்-201314:06:58 IST Report Abuse
GUNAVENDHAN முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை ஸ்டாலின் சந்திக்கவில்லை, அதனால் தமிழர்களுக்கு அவரது பயணம் பலனளிக்கவில்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்களே ஸ்டாலின் என்ன தமிழர்கள் பலனடையவா டெல்லி சென்றார் என்று நினைத்துகொண்டிருக்கின்றீர்கள், அழகிரி பிறந்த நாள் ஜனவரி 30ந் தேதி வந்ததால் , அழகிரியை மதுரைக்கு சென்று சந்திக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டதால் , இப்படி டெல்லி டூர் அடித்தார். முக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் என்ன கருணாநிதியின் கைத்தடிகளா?. ஸ்டாலின் டெல்லி வந்தால் , தங்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டால் கொடுப்பதற்கு. அழகிரியை சந்திக்காமல் இருக்க இந்த டுபாகூர் பயணம்.
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
03-பிப்-201313:42:02 IST Report Abuse
மதுர முனியாண்டி தேறாத கேஸ்
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-பிப்-201319:08:22 IST Report Abuse
சு கனகராஜ் இன்று ஏனோ காலையில் இருந்தே ஒரு மந்தமான சூழ்நிலை. என்னடா என்று பார்த்தல் முத்தமிழ் விதவரின் கருத்தோ அறிக்கையோ ஒன்றும் இன்று தினமலரில் இல்லை. அதனால் தானோ என்னவோ தினமலர் வாசகர்களின் துவம்ச நாயகன் ( பட்டிமன்ற நாயகன் போல ) முத்தமிழ் வித்தவர் வால்மார்ட் கருணாவை காணாது சுணக்க நிலையிலே உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
03-பிப்-201312:30:58 IST Report Abuse
dori dori domakku dori கமல் பாரின் போனா , படம் எடுகிறேய்னு அவங்களுக்காக பணம் செலவழிபாறு அமெரிக்காவுல வரவேற்பாங்க .......இவங்க போனா .........அவங்களுக்கு வருமானம் இல்லையே ..அதனால கண்டுக்க மாட்டாங்க .........அதான் கமுக்கமா திரும்ப வேண்டிய நிலைமை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை