கமலின், "விஸ்வரூபம்' திரைப்படத்தின் பிரச்னையை மையமாக வைத்து, அவரது ரசிகர்களை, லோக்சபா தேர்தலில், பயன்படுத்திக் கொள்ள, தி.மு.க., - காங்., உள்ளிட்ட சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இருப்பினும், அரசியல் கட்சிகளின் வலையில், கமல் சிக்குவாரா அல்லது நழுவி விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கமலின், "விஸ்வரூபம்' திரைப்படம், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து தடுமாறியபோது, காங்., எம்.பி., ஜே.எம்.ஆரூண், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள் சிலர், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசினர்.அப்போது அவர்களுக்கு, "விஸ்வரூபம்' படம் திரையிட்டு காட்டப்பட்டது. அதில் வரும் ஆட்சேபனைக்குரிய, 6 காட்சிகளை நீக்கி விட வேண்டும் என, கமலிடம், முஸ்லிம் பிரமுகர்கள் எழுதி கொடுத்தனர். அந்தக் காட்சிகளை நீக்கி விடுவதாக, கமலும் பதிலுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.
அதேபோல், தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி, தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் உள்ளிட்டவர்கள், கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.கமலுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு அளித்த பின், அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டியது. "கமல் எனக்கு எதிரி அல்ல என்பதையும், அப்படத்தை வெளியிட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், முஸ்லிம் அமைப்பினருடன் பேசி உடன்பாடு ஏற்படுத்துங்கள்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்நிலையில் கோர்ட்டில் வழக்கு, கமல் உருக்கமான பேட்டி, அரசு தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என, "விஸ்வரூபம்' பட பிரச்னை, பல ரூபங்களில் பிரச்னைகளை சந்தித்தது.இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில், மும்பையில், "விஸ்வரூபம்' திரையிடுவதற்கான பணிகளை மேற்கொள்ள, அங்கு கமல் புறப்பட்டு சென்றார்.அப்போது, மும்பை மாநில சிவசேனா கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர், கமலை சந்தித்து பேசியதாகவும், அப்போது, அவரது படத்திற்கு மும்பையில் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடுவதற்கு, ஆதரவு அளித்தாகவும் கூறப்படுகிறது.இது குறித்து, கமல் ரசிகர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், காங்., கட்சியின் அபிமானியாக இருந்த இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு, திரைப்படம் தயாரித்ததில் நஷ்டம் ஏற்பட்டு, பல கோடிகளை இழந்தார். அப்போது அவருக்கு, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் ஆதரவு அளித்தார்.அவரது பண நெருக்கடியை சமாளிக்க அமர் சிங் மூலமாக உதவினார். அதற்கு நன்றி கடனாக, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை அமிதாப்பச்சன் மேற்கொண்டார்.
அவரது பிரசாரத்தினால், பெரும்பான்மையான எம்.பி.,க்கள் வெற்றி பெற்று, மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தனர். அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சனுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முலாயம் சிங் வழங்கினார்.கமலை பொறுத்தவரையில், அரசியல் ஆர்வம் இல்லாதவர். தன் மன்றங்களை கூட, நற்பணி இயக்கங்களாக மாற்றியவர். ஆனால், தற்போது அவரை, அரசியல் பதம் பார்த்து விட்டது. "அரசியல் என்னை சீண்டிப் பார்த்ததால், நானும் அரசியலை சீண்டிப் பார்ப்பேன்' என, கமல் கூறியிருப்பது யோசிக்க வைக்கிறது.கமல் மதம், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். பாபர் மசூதி இடித்த போது, முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மருதநாயகம் (கான் சாஹிப் யூசுப்கான்) வரலாறை திரைப்படமாக எடுக்க முயற்சித்தார்.
எனவே, அவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அல்ல. லோக்சபா தேர்தலில், கமல் பிரசாரம் செய்யும் கட்சிக்கு, அவருடைய ரசிகர்களின் ஓட்டுகள் கிடைக்கும். இந்த விவகாரத்தில் கமல் பாதிக்கப்பட்டுள்ளதாக நடுநிலையாளர்கள் கருதுகின்றனர்.அவர்களின் ஓட்டுகளை கவர, கமலின் பிரசாரம் உதவும். இதனால், அவரை தங்கள் பக்கம் வளைக்க, அரசியல் கட்சிகள் முயற்சி எடுக்கின்றன. அதில் அவர் சிக்குவாரா அல்லது ஒதுங்குவாரா என்பது எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சுதந்திர இந்தியாவில் அவரவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது,அது மற்றவர்களை காயபடுத்தாத வரையில் .அது போல் மத சுதந்திரமும் உண்டு,மற்ற மதத்தினரை புண்படுத்தாத வரையில் .நமக்கு இருக்கும் ஒரே பெரிய சொத்து நாம் இந்தியன் என்ற உணர்வுதான் .அது நம்மிடம் இருக்கும் வரையில் உலகில் நம்மை எவரும் ஒன்றும் செய்ய முடியாது.இந்தியா வல்லரசாவது நம் கையிலும் அரசியல் வாதிகள் கையிலும் தான் இருக்கிறது...............
பாமரனுக்கும் விளங்கும் படி அம்மா அறிக்கை விட்டு விட்டார்.எனக்கு ஒன்று மட்டும் விளங்க வில்லை.திரைப் படத்தையும் அரசியலையும் ஏன் ஒன்றாக கலக்குகிரார்களோ...லோக்சபா தேர்தல் வர இன்னும் கால அவகாசம் இறுக்கிறது.அதற்குள் இது எல்லாம் ஆறின கஞ்சி ஆகிவிடும்.இது எந்த வகையிலும் அம்மாவில் ஓட்டுகளை பாதிக்காது.அனால் கருனாநிநிதிக்கு இது வாழ்வா சாவா என்ற நிலை..
கமல் ரொம்ப புத்திசாலி, அவர் கண்டிப்பாய் அரசியலக்கு வரமாட்டார். விஸ்வரூபம் பிரச்சனை வரக் காரணமே அரசியல் தான் காரணம். அவருடைய கணுவு & செயல் எல்லாமே தமிழ் சினிமா உலக தருத்துக்கும் & ஹோல்லி வூட் தருத்துக்கு படம் எடுப்பது மட்டுமே.
அவருக்கு தெரியும் நேர்மையான ஆல் அரசியல்லு வந்தால் ஜெயிக்க முடியாது என்று. ஆகையால் அவரை தொந்தருவு செய்யாமல் அவருடைய வேலையை செய்ய விடுங்க்கள். ப்ளீஸ். அப்பதான் ஒரு கலைஞனால் தெளிவாக வேழை செய்து நல்ல படம் கொடுக்க முடியும்.
நன்றி.
தி. பாண்டியராஜ், கோயம்புத்தூர்.
Viswaroopam will be released in 530 theatres in Tamilnadu. Mr Kamal went to Mumbai for Hindi release in 800 theatres. The film is released in Malaysia, Andhra, Karnataka, now in UP.The distributors in Tamilnadu have to pay in advance to get the distributorship. I cannot understand how HE CLAIMS he will loose all his lifetime earnings, if the film is not released on last week of Jan2013? HE and he alone was responsible for delaying release on Pongal day, by insisting on release on DTH.( Not TN Govt.) At that time did he forgot about his payment to financiers? Reality is that he NEEDS TO release in Tamilnadu to get the money more than he can get elsewhere. His ourburst on TV was without any consideration to the fact, he needs, tamilnadu more than other states and other country, He is a good actor,good to visualise, different style of presentation. AGREED in FULL. If you look at movies as entertainment,none of present day movies including his movies will be near Sridhar- Kaadalikka neramillaiEven today,People of three generations can sit & see & enjoy,achieved with NO violence and no Vulgar. Dil Ek Mandir applauded by Hindi and tamil audience,production value less than the cost of one set in recent films. They are ARTISTS. What we saw was problem of sale and business.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.