மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய திட்டங்களும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை பற்றியும், கவர்னர் உரையில் எந்தத் தகவலும் இல்லை என்ற அதிருப்தி மக்களிடம் எழுந்துள்ளது.
மாறாக, 30 மில்லியன் யூனிட் அளவிற்கு, மின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்ற தகவல் மட்டுமே இடம் பெற்றுள்ளது, ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. புது திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாததால், இப்போது உள்ள கடும் மின்வெட்டு, வரும் கோடை காலத்திலும் நீங்க வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது.தமிழகத்தில் மின்பற்றாக்குறை காரணமாக, தொழில்கள் முடங்கியுள்ளன. சென்னை தவிர பிற பகுதிகளில், 12 முதல் 15 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்ந்து வருகிறது.
தீவிர நடவடிக்கை:
இதனால், மின்வெட்டை குறைக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்; எதிர்கால தேவைக்கு புதிய திட்டங்களை கொண்டுவர வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக, மொத்த மின் உற்பத்தி, 10,000 மெகா வாட் அளவிற்கு அதிகரித்ததால், மின்வெட்டு நேரம் குறைந்தது. இந்நிலையில், இரண்டு மாதத்தில், கோடை காலம் துவங்குவதால், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என்று, மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.இந்நிலையில், கவர்னர் உரையில் புதிய மின் திட்டங்கள் குறித்தும், திட்டமிடப்பட்டுள்ள மின் உற்பத்தி குறித்தும் அறிவிப்பு வெளியாகாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.மாறாக, மாநிலத்தின், நாளொன்றின் மின்பயன்பாடு, 180 மில்லியன் யூனிட்டிலிருந்து, 210 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. இதனால், மின் பற்றாக்குறையை குறைக்க முடியவில்லை என, கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டு, மாநில, மத்திய மற்றும் கூட்டு முயற்சி பிரிவுகளின் மூலம், 4,887 மெகா வாட் கூடுதலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.இதில், 600 மெகா வாட் திறன் கொண்ட மேட்டூர் மூன்றாவது அலகில், சோதனை உற்பத்தியை மட்டுமே துவங்கியுள்ளது. கடந்தாண்டே முடிய வேண்டிய இத்திட்டம், சோதனை உற்பத்தியிலேயே நிற்கிறது.முழுத் திறனுடன் உற்பத்தி செய்வதற்கு முன்பே பலமுறை பழுதடைந்தும் உள்ளது. வல்லூர் அனல் மின் திட்டம், பல பிரச்னைக்கு பின், நவம்பரில் தான் முதல் அலகு செயல்பட துவங்கியுள்ளது.
மின் பற்றாக்குறை:
மேட்டூர், தூத்துக்குடி மற்றும் வல்லூர் ஆகிய மின் திட்டங்கள் மூலம், 1,600 மெகா வாட் மின் உற்பத்தி கிடைத்தால் மட்டுமே, கோடை காலத்தில் மின்தடை நேரம் குறையுமே தவிர, மின் பற்றாக்குறை முழுவதும் நீங்க வாய்ப்பில்லை.இல்லையெனில், கடந்தாண்டை போல், மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தேர்தல் வந்தால் இலவசங்கள் குறித்து தாரளமாக புது திட்டங்கள் உடனே அறிவிப்பு செய்யபடும் டாஸ்மாக் சரக்கு குறைந்தால் உடனே நடவடிகை எடுக்கப்படும் இது மின் திட்டம் தானே தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கிறது அதனால் புது திட்டங்கள் குறித்து அறிவிப்பு இல்லை தேர்தல் நெருங்கும் போது புது திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வரும்
மின்வெட்டுப் பிரச்சினை எவ்வளவு கடுமையானது,இது தொடர்ந்தால் விளைவுகள் எப்படி கடுமையாக இருக்கும் என்று விரைவில் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் ஜெயலலிதாவுக்கு நன்றாகப் புரியும்.எனவே இதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் நிச்சயம் அவர் ஈடுபடுவார்.சிலபேர் சொல்லிவிட்டுச் செய்ய மாட்டார்கள்.அம்மையார் சொல்லாமலே சாதித்துக் காட்டுவார்.
://cleantechnica.com/2012/11/07/1000-mw-of-new-solar-power-installed-in-germany-in-september-6000-mw-installed-in-2012-already/
நம் நாட்டில் தான் உப்பு காற்று வீசுகிறது, தூசி சுத்தம் செய்ய வேண்டும், பராமரிப்பு தேவை என்று பல சாக்கு போக்கு சொல்லுகிறாகள். ஒன்றும் செயமால் கரண்ட் வேண்டும் எண்டால் சூர்யனுக்கு தான் ஒயர் இழுக்க வேண்டும்......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.