Advertisement
நிதி அமைச்சகத்திடம் ரூ.38 ஆயிரம் கோடி கேட்கிறது ரயில்வே
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2013,23:51 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 03,2013,00:05 IST

புதுடில்லி : "டீசல் விலை அதிகரித்துள்ளதாலும், நிலுவையில் உள்ள ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டியிருப்பதாலும், பட்ஜெட்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை ரயில்வே துறைக்கு ஒதுக்க வேண்டும்' என, நிதி அமைச்சகத்திடம், ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது.ரயில்வே அமைச்சகம் கேட்கும் இந்த நிதி ஒதுக்கப்படவில்லை எனில், ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்வே துறை, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், சமீபத்தில் ரயில் கட்டணங்கள் குறிப்பிட்ட அளவுக்கு உயர்த்தப்பட்டன. ஆனாலும், ரயில்வே துறையின் நிதி தேவையில், ஒரு பகுதியை மட்டுமே, இந்த கட்டண உயர்வு ஈடுகட்டும். அதே நேரத்தில், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதால், ரயில்வேக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில், ரயில்வேக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாயை, நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள செலவுகளை சரி கட்டவும், நிலுவையில் ஏராளமான ரயில்வே திட்டங்களை முடிக்கவும், அடுத்த நிதியாண்டிற்கான (2013-14) பட்ஜெட்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை, ரயில்வே துறைக்கு ஒதுக்க வேண்டும் என, நிதி அமைச்சகத்திடம் கோரப்பட்டுள்ளது.1.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 200க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்கள் நிலுவையில் உள்ளன.

இவற்றில், பல பணிகளை, அடுத்த நிதியாண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பல்வேறு விதமான நடவடிக்கைகள் மூலம், 7,000 கோடி ரூபாயை திரட்ட ரயில்வே தீர்மானித்துள்ளது. அத்துடன், வெளியிடங்களில் இருந்து பெறும் கடன்கள் மூலம், 18 ஆயிரம் கோடி ரூபாய் பெறப்படும்.இதற்கு மேலும், நிதி தேவைப்படுவதால், மத்திய நிதி அமைச்சகத்திடம், பட்ஜெட் ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், ரயில்வே துறை, தன் திறனை அதிகரிக்க, 5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் உயர்த்திய ரயில் கட்டணங்கள் மூலம், அடுத்த நிதியாண்டில், ரயில்வேக்கு, 6,600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இருந்தாலும், டீசல் விலை உயர்வால், 3,300 கோடி ரூபாய் செலவு கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு ரயில்வே அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.

வரும், 26ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்பின், பொது பட்ஜெட் தாக்கலாகும். இந்த பட்ஜெட்டில், ரயில்வே துறைக்கு உரிய ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனில், ரயில் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம். அப்படி இல்லையெனில், அதற்கு முன்னதாகவே, ரயில்வே பட்ஜெட்டிலேயே, ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
03-பிப்-201318:34:08 IST Report Abuse
K.Balasubramanian 1000 கோடிகள் லாபம் ஈட்டி ,மத்திய நிதிக்கும் கடன்/பங்கு கொடுக்கும் நிலை இவ்வாறு மாறி விட்டது துரதிர்ஷ்டம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nagarajan.Su - Chennai,இந்தியா
03-பிப்-201315:32:17 IST Report Abuse
Nagarajan.Su ரயில்வேக்கு இருபத்தெட்டாயிரம் கோடியை நிதி அமைச்சகம் அதன் வருவாயிலிருந்து ஒதுக்கவில்லை. ரயில்வேயின் மொத்த வருவாயையும் நிதி அமைச்சகத்திற்கு கப்பம் கட்டிய பிறகுதான் அதன்வருவாயிலிருந்தே அதற்கு நிதி ஒதுக்கி இருக்கிறது. ரயில்வேயின் மொத்த வருவாயையும் ரயில்வேயே உபயோகிக்க விட்டால் தட்டுப்பாடே இருக்காது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
03-பிப்-201314:05:34 IST Report Abuse
dori dori domakku dori தமிழ் பஸ்சுனா பிரைவேட் பங்குக்கு போய் டீசல் போட்டுக்கும் ...........பாவம் ஹிந்தி train ....அதான் கூப்பாடு போடுது
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
03-பிப்-201312:47:25 IST Report Abuse
Baskaran Kasimani போகிற போக்கைப்பார்த்தால் தமிழகம் போல ஒவ்வொரு மாநிலத்திலும் டாஸ்மாக் போல கடைகளை ஆரம்பித்தால்தான் முடியும் போலிருக்கிறது...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Srinath - Coimbatore,இந்தியா
03-பிப்-201307:20:41 IST Report Abuse
Srinath மேற்கண்ட செய்தியைப் படித்துவிட்டு 'தமாசு தமாசு' என்று கூறிச் லாலு சிரித்துக் கொண்டிருப்பார் இந்நேரம்.
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
g.s,rajan - chennai ,இந்தியா
03-பிப்-201306:54:34 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் கச்சாப்பொருள் இறக்குமதிக்கு மிகப்பெரும் தொகை செலவு செய்யப்படுகிறது ,கிட்டத்தட்ட பதினாலு கோடி பில்லியன் டாலர் செலவு செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்றனர் ,இது நமது தொகையில் பல லட்சம் கோடி ருபாய் ஆகும் .நமது நாட்டில் கச்சாப்பொருளை இறக்குமதி செய்யும் செலவில் கொஞ்சம் நிதியை ரயில்வேக்கு ஒதுக்கினால் என்ன ?தனி நபர் போக்குவரத்தை அரசாங்கம் ஊக்குவிப்பதை விட்டுவிட்டு பொதுப்போக்குவரத்தான பேருந்து மற்றும் ரயிலை ஊக்குவிக்க வேண்டும் .இதனால் நம் அந்நியச்செலாவணி வெகுவாகக்குறையும்/போக்குவரத்து நெரிசலும் ,சாலை விபத்துக்களும் கட்டாயம் குறையும் .போக்குவரத்து நெரிசலால் வீணாகும் எரிபொருளையும் மிச்சப்படுத்தலாம் .மத்திய அரசு கவனிக்குமா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை . .
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
SEKAR - chennai,இந்தியா
03-பிப்-201313:54:50 IST Report Abuse
SEKARஒன்றுமே புரியவில்லை . தனி நபர் போக்குவரத்தைத் தடை செய்து விட்டு இப்போதுள்ள நிலையில் பொது மக்களின் போகுவரத்துத் தேவைகளைத் தீர்த்து விடும் அளவுக்கு அரசாங்கத்தின் வசத்தில் இருக்கும் இரயில் , போக்குவரத்து துறைகளில் கட்டுமானம் ,மனித வளம் ஆகியவை உள்ளனவா? அமைச்சர்கள் , அவர்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு அதிகாரிகள் தனி விமானத்தில் பயணம் செய்தல், வரையறை இல்லாமல் அடிக்கடி பயணம் செய்தல் இவைகளால் நாம் இழந்து கொண்டிருக்கும் அன்னியச் செலாவணியின் அளவு உங்களுக்குத் தெரியுமா?...
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201304:46:57 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சரித்தான், கோவை மாநகருக்கு மேலே எல்லா ரெயிலும் பறந்து செல்லுவதற்கு மேம்பாலம் கட்ட வேண்டுமா? போத்தனூறு விரிவாக்கம் செய்யவேண்டுமா? புரியலையே? இல்லை தமிழக வண்டிகளில் மூட்டைபூச்சி/எலி எண்ணிக்கை பெருக்கினால் அவற்றின் ஓட்டு வங்கி எங்காவது பயன்படுமா?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Thangairaja - Dammam,சவுதி அரேபியா
03-பிப்-201301:10:39 IST Report Abuse
Thangairaja முதல்ல இந்த பஞ்சாலை தூக்கிட்டு லாலுவுக்கு அந்த பொறுப்பை கொடுங்கள். லோக்சபா தேர்தலுக்குள் மாயாஜாலமே நிகழ்த்தி காட்டுவார்.
Rate this:
3 members
0 members
8 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
03-பிப்-201315:23:56 IST Report Abuse
dori dori domakku doriநேத்துதான் அவரு ஏறின மேடை புட்டுகிச்சு...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.