7 years for husband who touch ex wife without her permission | பிரிந்து வாழும் மனைவியுடன் "செக்ஸ்' கணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை| Dinamalar

பிரிந்து வாழும் மனைவியுடன் "செக்ஸ்' கணவனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

Added : பிப் 02, 2013 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உடலுறவு கொண்டால், அதற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, மத்திய அமைச்சரவை நேற்று முன் தினம் ஒப்புதல் அளித்த, அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: "பிரிந்து வாழும் மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், கணவன் உடலுறவு கொண்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்' என, தற்போது அமலில் உள்ள, இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376 ஏ-யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டப் பிரிவை நீக்கும்படி, நீதிபதி வர்மா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. "மனைவியுடன், அவரின் சம்மதம் இல்லாமல், உடலுறவு கொண்டாலும், அதை பாலியல் பலாத்காரமாகவே கருதி, கூடுதல் தண்டனை வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது. இருந்தாலும், தற்போதைய சட்டப் பிரிவு தொடர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தற்போதுள்ள, 2 ஆண்டு தண்டனை என்பதை, 7 ஆண்டாக உயர்த்த தீர்மானித்துள்ளது. பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், சட்டப் பிரிவு, 376ஏ - தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு, 376ஏ-ன் கீழான குற்றம், இதுவரை, ஒரு கிரிமினல் குற்றமாக கருதப்படுவதில்லை. ஆனால், இனி அது கிரிமினல் குற்றமாக கருதப்படும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
attlu attlu - San Francisco,யூ.எஸ்.ஏ
03-பிப்-201309:52:35 IST Report Abuse
attlu attlu பிரிந்து வாழும் கணவனை மனைவி rape பண்ணினால் எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ]
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
03-பிப்-201313:57:08 IST Report Abuse
Karam chand Gandhi நல்ல கேள்வி. மனைவி கணவனை கற்பழிக்கவே முடியாது அப்படின்னு சட்டம் சொல்லுது. கணவன் மட்டும் தான் குற்றம் செய்ய முடியும் மனைவிகள் குற்றமே செய் முடியாது என 498அ , குடும்ப வன்முறை போன்ற சட்டங்களில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆணாக இருந்தால் சட்டம் உங்களை குற்ற பரம்பரை என அறிவிக்கும். இதை எதிர்க்க விரும்பினால் ஆண்கள் ஓட்டு வங்கியை உருவாக்குங்கள். பின் சட்டங்கள் மாறும், ...
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
03-பிப்-201314:09:04 IST Report Abuse
Karam chand Gandhi மனைவியின் கள்ளதொடர்பை அனுமதிக்காத கணவனுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை 498அ சட்டத்தில் கொடுமை படுத்தியதாக. ...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
03-பிப்-201307:25:57 IST Report Abuse
ஆரூர் ரங இனி பிரிந்து வாழும் மனைவியைப் பார்க்கபோகும்போது ஒரு பாண்டு பத்திரப் பேப்பரோடு போகணும் பின்னால் பிரச்னை வராமலிருக்குமே
Rate this:
Share this comment
Karam chand Gandhi - Auroville,இந்தியா
03-பிப்-201314:01:23 IST Report Abuse
Karam chand Gandhi நீங்க எழுதி வாங்கிட்ட ? காவல்துறை அதற்கும் ஒரு செக்சன் போடும் நீங்கள் அடித்து துன்புறுத்தி வாங்கியதாக. அதை ஆமோதித்து நீதிபதி தண்டனை வழங்குவார். நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. ரொம்ப துள்ளினால் வழகரிஞர்கள் கோர்டிலேயே உங்களை நீதிபதி முன்பே அடிப்பார்கள். தப்பிக்க முயற்சிக்காதீர். பேசாம ஜெயிலுக்கு போயிட்டு வந்திருங்க. அல்லது பெண்ணாக மாறி விடுங்கள். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை