வாஷிங்டன் :குடிப்பழக்கத்தை நிறுத்தும் புதிய மருந்து ஒன்றை, சிலி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால், அதை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிவதில்லை. இதனால், இது ஒரு சமூக பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால், ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த தூண்டுதலை, ரசாயனம் கொண்டே சரி செய்துவிடலாம் என்கிறார், சிலி நாட்டை சேர்ந்த ஆசின்ஜோ என்ற ஆராய்ச்சியாளர்.இந்த புதிய மருந்தை, ஊசி மூலம் உட்செலுத்தப்படும் பட்சத்தில், அதன் தாக்கம் குறைந்தபட்சம், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, நம் உடலில் நிலைத்திருக்கும்.
எனவே, மது குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை இது பெருமளவில் தடுத்துவிடுகிறது. அதையும் மீறி, மது குடிக்கும் பட்சத்தில், வாந்தி, மயக்கம், நெஞ்சு எரிச்சல், உடல் பலகீனம் போன்றவை ஏற்படும்.இந்த மருந்து செயல்படும் விதம் குறித்து, இந்தியாவிலும் விரைவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த மருந்து சந்தையில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, ஆசின்ஜோ கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்ல முயற்சி . வெற்றியடைய வேண்டும் . அப்படியே அதற்கும் ஊசி கண்டுபிடித்து இந்தியாவிற்கு அனுப்பவும் . வதவதன்னு பண்ணி குட்டிப்போடுவது போல நிறைய பெத்துதள்ளுகிறார்கள் மக்கள் தொகை தாங்க முடியல . இப்பவே ஒருத்தன் சம்பாதித்து 10 பேர் சாப்பிடவேண்டிய நிலை . அடுத்த 10 ஆண்டுகளில் ஒருத்தன் சம்பாதித்து 100 பேர் சாப்பிடவேண்டிய நிலை வரும் . எங்க அரசாங்கத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் . மருந்து சர்வ சாதாரணமாக வால் மார்டில் கிடைக்க வழி செய்யுங்கள் . நன்றி - சந்திரகுப்தன் , தோஹா, கத்தார் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.