Advertisement
"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2013,01:11 IST

சற்று மாற்றி யோசித்தால், சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டடங்கள் கட்ட பயன்படுத்த முடியும் என, "சமர்ப்பண்' தொண்டுஅமைப்பு நிரூபித்து உள்ளது."கோடை காலத்தில் குளிர்ச்சியும்,குளிர் காலத்தில் வெப்பமும் தரக்கூடியபசுமை வீடுகளை, பிளாஸ்டிக்கழிவுகளை வைத்து உருவாக்க முடியும்' என, இந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

செங்குன்றத்திற்கு அருகே, பம்மதுகுளம்ஊராட்சிக்கு உட்பட்ட, சரத்கண்டிகை கிராமத்தில், "சமர்ப்பண்' தொண்டு நிறுவனத்தின் பசுமைவீடு திட்ட மையம் உள்ளது. இங்கு, இரண்டுஏக்கர் இடத்தில் மாதிரி பசுமை வீடு உருவாகிவருகிறது.முதல் கட்டமாக, இந்த தொழில்நுட்பத்தில்,ஒரு ஜெனரேட்டர் மேடை அமைக்கப்பட்டுஉள்ளது. இது முற்றிலும் பழைய பிளாஸ்டிக்பாட்டில்களால் ஆனது!சுற்றுச்சூழலின் எதிரியாக உருவெடுத்திருக்கும்பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம், பசுமைவீடுகளை கட்ட முடியும் என்பதை, டில்லியில்நிரூபித்து, சென்னைக்கு அருகே அத்திட்டத்தைசெயல்படுத்தும் முயற்சியில், "சமர்ப்பண்'ஈடுபட்டுள்ளது.

இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோமின் கூறியதாவது:பிளாஸ்டிக் பாட்டில்களால் உருவாக்கப்படும்பசுமை வீடுகள், மிகவும் பாதுகாப்பானவை.1,560 ஆண்டுகள் வரை சேதாரமின்றி உறுதியாகஇருக்கும். இதற்கு தேவையான, காலி பிளாஸ்டிக்பாட்டில்கள், சென்னையில் உள்ள நட்சத்திரஓட்டல்கள், திருமண மண்டபங்கள், பொதுவிழாக்கள் நடைபெறும் இடங்களில் இருந்து,ஒரு மாதத்தில், ஏழு லட்சம் காலி பாட்டில்களைபெற்றோம்.அவற்றை அளவுக்கு ஏற்ப பிரித்து; சவுடு மண்,சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் வீணானமண் ஆகியவற்றை கொண்டு நிரப்பி, பாட்டிலைஉறுதியாக்கி, கட்டட பணிக்கு பயன்படுத்துகிறோம்.பாட்டிலின் தட்டையான பின்பகுதியைசுவரின் வெளிப்புறம் மற்றும் தரை தளத்தில்இருப்பது போல் பயன்படுத்தினால், "சம நிலையில்' இருக்கும். மூடியிருக்கும் மேல்பகுதி"மாற்றி யோசித்தால்' பிளாஸ்டிக் கழிவு "பசுமை' வீடாகும்!உட்புறத்தில் இருக்கும். இதனால், சுவரை,சிமென்ட் மூலம் எளிதாக பூச முடியும்.செங்கல் வாங்கும் செலவை தவிர்க்கலாம்.அதே போன்று, சிமென்ட் வாங்கும் செலவும் பாதியாக குறையும்.

மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில்குளிர்ச்சியாகவும் இருக்கும். இது போன்றபசுமை வீட்டை, டில்லியில், பள்ளி கட்டடமாக கட்டி கொடுத்துள்ளோம். 15 அடிநீளம், 12 அடி அகலம் கொண்ட வீடு கட்ட,30 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.இங்கு, 2,400 சதுர அடி பரப்பளவில் தரைதளத்துடன், கூடுதலாக ஒரு மேல் தளமும்கொண்ட கட்டடத்தை கட்ட உள்ளோம்.அதற்கான தூண் மேல் தளத்தின் அழுத்தத்தை தாங்குமா என்பதை அறிய ஐ.ஐ.டி.,மூலம் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற பசுமை வீடுகளின் மேல் தளத்தில், சூரிய மின் சக்தி உருவாக்கும் வகையில் கூரைகள் அமைக்கும்திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம்,பள்ளி, கல்லூரி, மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்.இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (14)
Varatharajan - Oslo,நார்வே
04-பிப்-201317:40:32 IST Report Abuse
Varatharajan "மேற்கண்ட வீடு,மழை மற்றும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும், கடுமையான கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். " மனிதன் முயன்றால் முடியாது உலகில் இல்லை சிறந்த உதாரணம் மேலும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
04-பிப்-201309:45:10 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM நல்ல விஷயங்கள் .........பாராட்டுகள் .............
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
03-பிப்-201319:47:56 IST Report Abuse
M.Srinivasan பல மாதங்களுக்குமுன் பிளாஸ்டிக் கழிவு குறித்த விவாதத்தில் எளிதில் அழியாத பிளாஸ்டிக் பொருளை நாம் வேருவிதமாக பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் என குறிப்பிட்டேன் மேலும் பயன் படுத்தும் நம் மீது தவறை வைத்துக்கொண்டு பிளாஸ்டிக்கை குறைசொல்வது தவறு எனவும் குறிப்பிட்டேன் அது இப்போது உண்மை என்றாகிவிட்டது ஆனால் திரு நல்லவன் நல்லவன் கூறுவதுபோல் The pressure difference in plastic bottles or containers may cause imbalance in the structure ....... வாய்ப்புள்ளது
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Jwala - vellore,இந்தியா
03-பிப்-201316:30:47 IST Report Abuse
Jwala இந்த வீட்டில் நிம்மதியாக சுவற்றில் எப்படி சாய்ந்து உட்கார முடியும். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Appavu Vel - dammam,சவுதி அரேபியா
03-பிப்-201316:15:55 IST Report Abuse
Appavu Vel அவர்களை வாழ விட்டால் சரி
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Ramadurai Azhagirisamy - Bisha,சவுதி அரேபியா
03-பிப்-201313:09:03 IST Report Abuse
Ramadurai Azhagirisamy இவர்களுடைய contact details கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
சுலைமான் - தோஹா,கத்தார்
03-பிப்-201311:43:24 IST Report Abuse
சுலைமான் நல்ல முயற்சி..இதன் மூலம் சுற்று சூழலையும் பாதுகாக்க முடியும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
anand - neyveli,இந்தியா
03-பிப்-201310:23:29 IST Report Abuse
anand தயவு செய்து அரசாங்கம் இது போன்ற முயற்சியை ஊக்கு விக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Ram - ottawa,கனடா
03-பிப்-201307:29:43 IST Report Abuse
Ram நல்ல முயற்சி , உங்களது contact details கிடைக்குமா
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201303:15:02 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் , இது தான் சாக்குன்னு எல்லா ஹோட்டலிலும் பாட்டில் தண்ணி விலையை ஏத்திட போறாங்க
Rate this:
0 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.