A Blind mother's teer | "என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' : வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' : வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்

Added : பிப் 03, 2013 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 "என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி...' :  வழி தவறி, மகன்களை பிரிந்த தாய் உருக்கம்

புழல்:வெற்றிலை பாக்கு வாங்க நெடுஞ்சாலைக்கு வந்து, கண் பார்வை குறைவால், வழி தவறிய தாய், "என் மகன்கள் என்னை தேடுவார்கள், சீக்கிரமாக வந்து என்னைய கூட்டிட்டு போக சொல்லுங்க சாமி' என, சாலையில் போவோர் வருவோரிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார்.சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகில், அழுக்கு உடையுடன், வெற்றிலை பாக்கின் "காவி' நிறம் படிந்த ஒரு சில பற்களுடன், கண் பார்வை குறைந்த நிலையில் அங்கும் இங்கும் தடுமாறி கொண்டிருந்தார் 60 வயதை கடந்த மூதாட்டி.

அவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது:என் பேரு முல்லையம்மாள். வயசு 60 லேர்ந்து 70 இருக்கும். என் சொந்த ஊரு, திருத்துறைப்பூண்டி நீர்வழி ஓடாத்தெரு. கணவர் பெயர் லட்சுமணன். என் மகன்களில் மூத்தவன் ராஜா. அவனுக்கு ஒரு மகன் இருக்கிறான். இளையவன் ஜெயசங்கர். அவனுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.என் மகன்கள் என்னைய ரொம்ப பாசமா பார்த்துகிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெத்தலை பாக்கு வாங்க கடைத்தெருவுக்கு வந்தேன், கண்ணு சரியா தெரியலையா, எந்தப் பக்கம் போகணுமுன்னு தெரியலை; இப்ப இங்க இருக்கேன். நான் வந்த ரோட்ல ஒரு சிலை இருக்கும்; அங்கதான் என் மூத்த மகன் வீடு இருக்கு.இவ்வாறு அந்த மூதாட்டி கூறினார்.

மேற்கண்ட தகவலை தன்னிடம் விசாரிக்கும் அனைவரிடத்திலும், அவர் கூறுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளோர் தெரிவித்தனர். கடந்த இரண்டு மாதமாக அவர் அங்கிருப்பது தெரிய வந்தது.புழல், மாதவரம் என அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் தாய் முல்லையம்மாளை காணவில்லை என்று, அவரது மகன்கள் யாரேனும் புகார் செய்துள்ளனரா என்று விசாரித்த போது, இரண்டு மாதங்களில் அப்படி ஏதும் புகார்கள் வரவில்லை என்றும் தெரிய வந்தது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venuma Vendama - Boston,யூ.எஸ்.ஏ
06-பிப்-201301:16:36 IST Report Abuse
Venuma Vendama just read this on Dinamalr photo album section : சென்னை கொளத்தூர் கதிர்வேடு பகுதியில் வழி தவறிய முல்லையம்மாள் என்ற மூதாட்டி குறித்த செய்தி "தினமலரில்' வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது மகன்கள் தாயை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். தற்போது மகன்களின் அரவணைப்பில் முல்லையம்மாள்.
Rate this:
Share this comment
Cancel
GOWSALYA - DENHEDLER,நெதர்லாந்து
05-பிப்-201305:15:55 IST Report Abuse
GOWSALYA ஜெகன்,skv ,விக்னேஷ்குமார்,மங்கை நீங்க எழுதியதைப் படித்தேன்.நல்லவன் அவர்கள் சொன்னாப்போல விளம்பரத்தையும்,எனது கருத்தையும் ஒன்று இருதடவை வாசியுங்கள்.புரியும்.....exam நேரத்தில ஒரு வினாவை ஒருஇரு முறை படித்துப் புரிந்துகிட்டன்பின் தான் பதில் எழுதுவோம்.....எடுத்தோம் விதித்தோம் என்று எழுதின மார்க் வந்து 0 தான்,....எனக்கு அம்மா இல்லை,ஆனால்,எனக்குத் திருமணமாகி ...42 வருஷத்துக்குமுன்-எங்களுடன் புறப்பட்ட அத்தை [அம்மா எனத்தான் கூப்பிடுவேன் ]..எங்கள் பெரியவன்,சிறியவன் பிள்ளைகளைக் கண்டபின் தான் இறந்தார்கள்.அதுவும் அவர்களுக்கு என்கணவர் மட்டும் மகனல்ல....முதல் அண்ணி இருக்காக,மூத்தார் இருக்கார்,கடைசியா மதினி இருக்காக.எல்லோரும் வெளிநாட்டில் தான் இருக்காக.ஆனால் அத்தையம்மா யாருடன் போயிருக்க விரும்பவில்லை.என்னுடன் தான் இருந்தார்கள்.44 வருஷம் எங்க இருவருக்கும் ஒருசிறு வாய்ப்பேச்சு சண்டை வந்ததில்லை.என்கணவர் சிறிது குழம்பினாலும்,மகனுடன் தான் சத்தம் போடுவார்களே தவிர என்னைவிட்டுக் கொடுக்கமாட்டார்கள்.என் தாயைவிட,நான் அவர்களின் அன்பான பிரிவால் தான் தவிக்கிறேன்.பெற்றதாயை தங்களின் பெருமைக்காகப் பிரிக்கும் பிள்ளைக்களுமுண்டு நண்பர்களே......எங்கள் பசங்க திருமணமாகி மருகாளுடனும்,பிள்ளைகளுடன் இருக்கார்கள்......இந்த விளக்கம் சொன்ன காரணம் முதல்,ஜெகன் என்றவருக்கு.....எழுதுமுன் என்ன எழுதுகிறோம் ,எப்படி எழுதுகிறோம் என்று சிந்தித்து எழுதணும்.தேவையற்ற வார்த்தைகளை விடக்கூடாது.....அதைத் திருப்பி எடுக்கமுடியாது.முதல் எதற்கும் மரியாதை என்று ஒன்று இருக்கிறது.....முதலில் அதைப் படியுங்கள்....நீங்க ஒரு உத்தமனான மகனா இருக்கலாம்,ஆனால் நான் இந்தியா வந்தபோது கண்டுபேசிய...[ 2008 ல் ] 100க் கணக்கான பெண்களின் கண்ணீர் இன்றும் என்நினைவில் இருந்து போகவில்லை.உதரணமா ஒரு கதை: நாங்க நின்று பேசிக்கிட்டு இருந்தப்ப ஒரு குடும்பம் மோட்டார் வண்டியில் வந்தார்கள்.மகன் + மருகாள் + 2 பேரப்பிள்ளைகள். 7,4 வயசு.மருகாள் வண்டிவிட்டு வெளிய வரல்ல,மகன்,பிள்ளைகளை இறக்கிவிட்டார் ,அவ சொல்றா"" கிழவிக்கிட்டப் போயி பணத்தைமட்டும் வாங்கிட்டு வாங்கடா,கையில பிடிச்சு,முத்தம் கொடுக்கிற வேலைக்கெல்லாம் போககூடாது, என்று.அதுக இரண்டும் சரி மம்மி என்று போனாங்க.அதில வருவோர்போவோர் குடுக்கும் பணம் மட்டும் வேண்டும் அவளுக்கு,ஆனால் ஒரு முத்தம் கூட அந்தப்பிள்ளைகளுக்குக் கொடுக்ககூடாது.அதுவும் அந்தம்மா கொடுத்த பணத்தை வாசனை [ perfume ] போட்டு வண்டி சீட்டில காயவைக்கிறாங்க.அந்த அம்மா பாவம் மரப்பலகையை தலைக்கு வைச்சுப் படுக்கிறாங்க,ஒரு தலையணையில்லை...[அதில நாங்க பல உதவி செய்தோம் அது இந்த இடத்து அவசியமில்லை.].இது நடந்த இடம் திருப்பரங்குன்றம் கோவிலின் பிரகாரம் அடியில்.அதில் உள்ள அம்மாக்களை வழிநடத்துபவர்கள்,ஒரு விதவை அம்மாவும் அவர்மகனும் தான்.2 மணிநேரம் அவர்களுடன் இருந்து பேசி பகல் உணவு எங்களுடன் இருந்து சாப்பிடவைச்சோம்....அத்தையம்மவைக் கட்டுப்படுத்த முடியவில்லை.ஒரே விக்கிவிக்கி அழுதாங்க......ஐயோ நான் செய்த புண்ணியம் ,உங்ககூட இருக்கேன்,இல்லன்னா என்னிலையும் இப்படித்தான் இருக்குமோ? எனக்கேட்டார்கள்....இப்படிப்பல அம்மாக்கள் தங்களின் மனசுமையை சொல்ல முடியாமத் தவிக்கிறார்கள் தெரியுமா?.....நீங்கள் மூவரும் அல்ல யார் சொன்னாலும்,100 க்கு 80 % மனைவி பேச்சைக்கேட்டு தாயைப் பிரிந்தும்,அல்லாடவைக்கும் ஆண்கள் இருக்கார்கள்.ஆனால்,தன குடும்பம் என்றதும் அவள் விழுந்து விழுந்து கவனிப்பதையும் கண்டும் காணததுபோலப் போகும் வல்லவர்களும் இருக்கார்கள்...........மிக்க நன்றி நல்லவன் சகோதரே...நன்றி ஆசிரியர் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel
GanaNat - Portland,யூ.எஸ்.ஏ
05-பிப்-201304:30:18 IST Report Abuse
GanaNat ஸ்ரீ தேவி: தயவு செய்து அவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்து விடுவீர்களா? I can bear the financial expenses. Looks like the elderly woman is in Pulazh. Please let me know
Rate this:
Share this comment
Cancel
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
05-பிப்-201301:15:37 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi பத்திரிக்கை யில் செய்தி வெளியிட்டது நல்ல விஷயம் தான்.ஆனால் பத்திரிக்கை துறையினர் இன்னும் நிறைய பொறுப்புணர்வுடன் செயல் பட வேண்டும்.அந்த மூதாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டு அதன் பின் செய்தி வெளியிட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்.அரசாங்கத்தை விட மீடியாக்களுக்கு அதிக பொறுப்புணர்வு உள்ளது என்பதை மீடியாக்கள் புரிந்து செயல் பட்டால் நம் நாட்டு மக்கள் அனைவரும் எளிதாக தன்னிறைவு அடைந்து விட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Venuma Vendama - Boston,யூ.எஸ்.ஏ
05-பிப்-201301:13:46 IST Report Abuse
Venuma Vendama திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி facebook பேஜ் ல் லிங்க் அனுப்பியுள்ளேன் - உள்ளூர் மக்கள் அறிந்து அந்த தெருவில் போய் விசாரிக்கலாம்
Rate this:
Share this comment
Venuma Vendama - Boston,யூ.எஸ்.ஏ
06-பிப்-201301:30:07 IST Report Abuse
Venuma VendamaFollow Up: Just read in Dianamalr Photo Album section that Mrs.Mullayammal has been reunited with her sons....
Rate this:
Share this comment
Cancel
Amalraj Penigilapati - Castries,செயின்ட் லூசியா
05-பிப்-201300:08:11 IST Report Abuse
Amalraj Penigilapati ஒருவேளை திருவள்ளூருக்கு அருகில் உள்ள பூண்டி அணை பகுதியாக இருக்குமோ? வயதான தாய் பேசுவது புரியாமல் திருத்துறை பூண்டி என்று கருதப்பட்டுவிட்டதோ? திருவள்ளூர் பூண்டி என்பதும் கிட்டத்தட்ட பொருந்துகிறதே?
Rate this:
Share this comment
Cancel
Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்
04-பிப்-201322:44:45 IST Report Abuse
Nagesh Perumal Mutharaiyar இந்த செய்தியை போட்ட நேரத்தில் இந்நேரம் அவரை ஏதேனும் காப்பகத்தில் சேர்த்துவிட்டு காவல் நிலையத்தில் தகவல் தெரித்துவிட்டோம் என்று வெளியிட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Anbarasan Kandasamy - riyadh,சவுதி அரேபியா
04-பிப்-201322:30:16 IST Report Abuse
Anbarasan Kandasamy கொடுமை. கொடுமையிது எல்லோருக்குமே கடைசி காலம் என்று ஒன்று உண்டு இதை மறக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
04-பிப்-201321:35:45 IST Report Abuse
KMP அட கடவுளே ....ஐயோ ... கண்ணீர் தான் வருகிறது ...
Rate this:
Share this comment
Cancel
sankaridevi valangai - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201321:18:40 IST Report Abuse
sankaridevi valangai நெஞ்சம் மறப்பதில்லை, எந்த அம்மாவையும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை