சென்னை :டீசல் விலை உயர்வை அடுத்து, ஆம்னி பஸ்களில், 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை, கட்டணத்தை உயர்த்த, தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், முடிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம், மத்திய அரசு டீசல் விலையை, லிட்டருக்கு, 55 பைசா உயர்த்தியது. தற்போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள, நஷ்டத்தை சரி செய்வதற்கு, மாதந்தோறும் டீசல் விலையை லிட்டருக்கு, 40 முதல் 50 பைசா வரை, உயர்த்திக் கொள்ளவும், மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.மொத்த கொள்முதல் விலையை உயர்த்தியதன் மூலம், அரசு போக்குவரத்து கழகங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், டீசல் விலை உயர்வால், தனியார் போக்குவரத்து கழகங்களும், பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.இந்த செலவை சமாளிப்பதற்கு, ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதத்திற்கு, ஒரு முறை கட்டணத்தை மாற்றி அமைக்கவும், சங்கத்தினர் கலந்து ஆலோசித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆம்னி பஸ், உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறியதாவது:மாதந்தோறும் டீசல் விலை, 50 பைசா வரை, உயரும் என்பதால், ஆம்னி பஸ்களில் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாது. தற்போது, 400 கி.மீ.,ருக்குள் சென்று வரும் பஸ்களில், கட்டணத்தை, 10 ரூபாயும், 400 கி.மீ.,ருக்கு மேல் சென்று வரும் பஸ்களின் கட்டணத்தை, 20 ரூபாய் வரை உயர்த்துவது குறித்து, ஆலோசித்து வருகிறோம்.மேலும், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கட்டணத்தில் மாற்றம் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
தயவு செஞ்சு volvo bus ல கடைசி வரிசைல மட்டும் travel பண்ணாதிங்க. என்ஜின் vibration உங்கள் காது ஜவ்வை சற்றே கிழிய வைத்துவிடும். இது உண்மை. நீங்கள் காது அடைத்தது போல் உணர்வீர்கள்.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லை தனியார் பஸ்கள் விலை ஏற்ற அனுமத்தித்து பின்பு அரசு பேருந்தும் விலையை ஏற்றுமா? மக்களின் அடிப்படை போக்குவரத்து பிரச்னையை உடனே கவனிக்க படவேண்டிய ஒன்று..
டிக்கெட்டை ஏலத்தில் விட்டு அதிக கட்டணம் கொடுப்பவர் மட்டும் ஏறலாம் என முடிவெடுத்தால் என்ன? அதிக கட்டணம் கொடுக்க முடியாதவர்களுக்கு முன்னாள் அரசியல்வாதி பாணியில் இருக்கவே இருக்கு திருட்டு ரயில்.
மாநில அரசு சார்பில் ரயில்வே துறை அமைச்சரை நியமிக்க வேண்டும்.மத்திய ரயில்வே மந்திரியுடன் ஆலோசித்து ரயில்கள் அதிகமாக விடுவதன் மூலம் ஓரளவு சமாளிக்க முடியும்.
திரு. கனகராஜ், நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்ச தான் பேசுறீங்களா? ரயில்களில் தனியார்........சரி ரலிகளில் தனியார் வைத்துகொள்வோம் ஏன் அம்மா அதிலும் துட்டு பார்க்கனும் என்ற ஆசையா? நம்ப பஸ் கட்டணம் போல் இதுவும் கூட்டவா? உங்களுக்கு தான் மன சாட்சியே இல்லையே எதுவேணாலும் செய்யுவீங்க....
விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் வகையிலும் ஏழை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நெல் விலையை மாதாமாதம் உயர்த்த உத்தேசித்துள்ளோம் என்று ஏன் விவசாயிகள் சங்கம் அறிவிக்கக் கூடாது? அதற்கு மட்டும் ஏன் இன்னமும் அரசின் கையை எதிர்பார்க்க வேண்டும்?...
ஏம்பா மூணு மாசம் வரை ஏன் காத்திருக்க போறீங்க....மாசாமாசம் உயர்த்திக்கிட்டே போக வேண்டியது தானே...யாரு கேட்க போறாங்க. அரசாங்கத்துக்கும் கவலை கிடையாது.....காசு கொடுத்து அழப்போற பொதுஜனங்களுக்கும் அக்கறை கிடையாது. இலவசங்களால் உயிர் வாழலாம். தேர்தலுக்கு கிடைக்கும் பணம் மற்றெல்லாவற்றையும் மறக்க செய்து விடும், பிறகு என்ன பிரச்சினை.
வண்டி புல்லானா கட்டணத்த சரியா வாங்குங்க. காலியா போனா கட்டணத்த அதுக்கு தகுந்த மாதிரி ஏத்துங்க. யாரும் வண்டி காலியா போக விட மாட்டாங்க..ஆனா தாறு மாறா ஏத்தினா டயரு காணாம போயிடும்.....
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.