தமிழகத்தில் "விஸ்வரூபம்' படத்துக்கான தடை நீக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டது.

நடிகர் கமல் நடித்து, இயக்கி வெளிவந்துள்ள படம் விஸ்வரூபம். இந்த படத்தில், இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள், படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, 144 தடை உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்தது.

இதற்கு எதிராக, ராஜ்கமல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை ஐகோர்ட், படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக, தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின், தடை நீக்க உத்தரவை ரத்து செய்தது. இதனால், மீண்டும் தடை ஏற்பட்டது.


முதல்வர் அறிவிப்பு

:விஸ்வரூபம் படத்தை திரையிட, பெரும் அரசியல் விளையாடுவதாகவும், தமிழக அரசு இதன் பின்புலத்தில் உள்ளதாகவும், பல தரப்புகளிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த முதல்வர் ஜெயலலிதா, "முஸ்லிம் அமைப்புகளுடன், நடிகர் கமலஹாசன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண, தமிழக அரசு உதவும்' என அறிவித்தார்.முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில், உள்துறை செயலர் ராஜகோபால் தலைமையில், முத்தரப்பு பேச்சு, நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், 24 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அப்போது, விஸ்வரூபம் படத்தில், ஆட்சேபகர காட்சிகளை நீக்க, கமல் சம்மதம் தெரிவித்தார். "ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கியதும், படம் வெளியிடத் தடை இல்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தடை நீக்கம்:

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையடுத்து, மாநிலம் முழுவதும் படத்திற்கான தடையை நீக்க, தமிழக அரசு, கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னையில், தடை நீக்கப்படுவதாக, சென்னை போலீஸ் கமிஷனர், ஜார்ஜ் நேற்று அறிவித்தார். அடுத்தடுத்து, தமிழகம் முழுவதும், படத்திற்கான தடை நீக்கப்படுவதாக, கலெக்டர்கள் அறிவித்தனர்.அரசின் மேல்முறையீட்டு மனு, இன்று சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் போது, முஸ்லிம் அமைப்புகளுக்கும், நடிகர் கமலுக்கும் ஏற்பட்டுள்ள சமரசத்தை தெரிவித்து, வழக்குகளை அரசு வாபஸ் பெற்றுக் கொள்ளும் எனத் தெரிகிறது.


8ம்தேதி வெளியிட திட்டம் :

"விஸ்வரூபம்' படத்திற்கான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள், நீக்கும் பணி நடக்கிறது. காட்சிகள் நீக்கப்பட்ட பின், தணிக்கை வாரியத்தில் படத்தை திரையிட்டு காட்டி, "யு' சான்றிதழ் பெற, கமல் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில், 8ம்தேதி, "ரிலீஸ்' ஆகும் எனத் தெரிகிறது.முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி,முல்லா ஓமர் கோவையிலும், மதுரையிலும் தலைமறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் உட்பட, ஏழு காட்சிகள் படத்தில், வெட்டப்படவுள்ளன. காட்சிகளை வெட்டுதல் மற்றும் பின்னணி ஓசையை மட்டும் நீக்குதல் ஆகிய பணிகள், தற்போது துவங்கியுள்ளது. இதற்காக, ஹாலிவுட் கலைஞர்கள் சென்னை வரவுள்ளனர்.பட வெளியீடு குறித்து, வினியோகஸ்தர்கள் கூறுகையில், "படம் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் ஆனதால், தியேட்டர்களில் வேறு படங்களை திரையிடப் பட்டுள்ளது. குறைந்தது ஒரு வாரம் அந்த படங்கள் ஓடியபிறகு தான், விஸ்வரூபத்தை திரையிட முடியும்' என்றனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (98)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
04-பிப்-201314:41:06 IST Report Abuse
CHANDRA GUPTHAN கர்நாடகா தண்ணீர் தர சுப்ரீம் கோர்ட் அழுத்தம் தரமுடியாது என்று சொல்லியாகிவிட்டது , மழை பொய்த்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது . இப்போது சட்டசபையில் பட்ஜெட் போடும் நேரம்,முதுகெலும்புள்ள எதிர்கட்சிகள் நார் நாராக கிழிப்பார்கள் அதிலிருந்து கொஞ்சநாள் தப்பியாகிவிட்டது அவ்வளவே. தமிழகத்தில் அனைத்துவிதமான தொழில்களும் மூடுவிழா காண்கிறது. நெய்வேலி,கல்பாக்கம் மின்சாரத்தை தமிழகம் மட்டும் உபயோக படுத்த இவர்கள் போராட்டம் நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஒரு சினிமாவிற்கு போராடும் இவர்கள் பாக். பங்களாதேஷ் , ஆப்கன் , மற்றும் பல முஸ்லிம் நாடுகளில் நடக்கும் கொலைவெறிகளை நிறுத்த போராடவில்லை. சிரியாவில் 2.5 வருஷமா அப்பாவி மக்கள் மீது போர். இவர்களில் யாராவது குரல் கொடுத்தார்களா? மாட்டார்கள். இதில் இவர்களுக்கு சில்லறை கிடைக்காது என்பது உண்மை . இது ஒரு கெட்ட முன்மாதிரி. இனி தமிழ் சினிமா உருப்பட்ட மாதிரித்தான் . இன்னும் ஒரு வாரத்தில் உதயகுமார் கூடங்குளத்தில் போராட்டம் ஆரம்பிக்க போகிறார். மீடியாக்களில் பெரிய அளவில் செய்திகள் வழக்கம் போல வரும் மூன்று மாதம் போய்விடும் .இப்படிப்பட்ட நடவடிக்கைக்கு முடிவே இல்லை . மக்கள் நலனை யாராவது நினைத்திருந்தால் தானே. தன் மக்களின் நலனை ஏழேழு தலைமுறைக்கு நினைத்ததால் வந்த வினை .
Rate this:
Share this comment
Cancel
S.Balaji - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-201314:28:23 IST Report Abuse
S.Balaji Americans watch this film? Because in this movie the terrorist always trained to shoot Bush Picture
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201314:21:06 IST Report Abuse
Jeyaseelan இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் இயக்கத்தினர் தங்களின் பிறவி பலனை அடைந்திருப்பார்கள். இவர்கள் மனம் புண்படும் என்று சொல்லி ஒரு நல்ல கலைஞன் மனதை புண் படுத்திய இந்த யோக்கியர்கள் நீடுடி வாழ வேண்டும். சினிமாவை சினிமா என்று பார்க்கும் எண்ணம் எப்போது நம் மக்களிடம் வரப்போகிறது. இன்னமும் நஷ்டம் வரக்கூடாது என்பதற்காக இவர்கள் கேட்டுக்கொண்டது போல் சில காட்சிகளை நீக்க ஒத்துக்கொண்டிருக்கிறார் கமல். அவர் பெற்றெடுத்த குழந்தையின் கண்களை அவரை கொண்டே குத்த சொல்லி ரசித்திருக்கிறீர்கள், இதுவும் ஒரு வகையில் தீவிரவாதம்தானே.
Rate this:
Share this comment
Cancel
M.T.Moorthi - Yangon,மியான்மார்
04-பிப்-201313:40:06 IST Report Abuse
M.T.Moorthi ஒரு சினிமா நடிகனை தலைக்குமேல் தூக்கி வைத்து தெய்வத்தைப்போல கொண்டாடுவது, நடிகனின் Cut-Out வுக்கு பால் அபிஷேகம் பண்ணுவது போன்ற முட்டாள் தனத்தை தமிழ் நாட்டில்தான் காணமுடிகிறது. இவனுவலேல்லாம் பெற்றோர் ,பெரியோர்களை மதிக்காமல், கூத்தாடிகளுக்கு மரியாதை கொடுப்பதுதான் வேதனையாக உள்ளது. இதனால் வந்த பிரச்சனைகள்தான் இவ்வளவும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-பிப்-201313:16:11 IST Report Abuse
Swaminathan Nath கமலுக்கு இது நல்ல பாடம், இனி நாத்திகம் பேசி இந்துக்களை மட்டும் கிண்டல் செய்ய வேண்டாம், ஒரு நாத்திகன் கூட உனக்கு அதரவாக வரவில்லை. கடைசியில் மதவாதம் ஜெயித்தது. புரிந்துகொள்.???????????
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
05-பிப்-201302:46:39 IST Report Abuse
தமிழ்வேல் இதற்காக அவர் தனது கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டார் என்பது எனது கருத்து....// ஒரு நாத்திகன் கூட உனக்கு அதரவாக வரவில்லை // இல்லை .... ஆரம்பத்தில் இதில் நுழைந்து குழப்பினால் கமலுக்கு மேலும் சிக்கல் வரும் என்று விலகி இருந்தது உண்மையே... ஆனால் நாத்திகர் ஒருவர் குரல் எழுப்பியதும் தான் பூனை வெளியேறியது ......
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
04-பிப்-201313:14:51 IST Report Abuse
PRAKASH டேய் வாங்கடா இந்த படத்த பாத்தாச்சு. அடுத்து எவனோ சிங்கம் - 2 படம் எடுக்குராணம்.. அத போய் பாப்போம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-பிப்-201313:03:31 IST Report Abuse
Pugazh V பாட்ஷா படத்தில் வில்லன் பெயர் ஆண்டனி. எனில் கிறித்துவர்கள் ஆட்சேபம் தெரிவிக்க வில்லையே ஏன்? சிவாஜி படத்தில் வில்லன் பெயர் ஆதி நாராயணன். இந்து முன்னணியோ, ராம கோபாலனோ ஏன் ஆட்சேபம் தெரிவிக்க வில்லை? அப்போதைய தமிழக அரசும் தடை ஏதும் விதிக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-பிப்-201313:01:27 IST Report Abuse
Pugazh V கமலை, துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியதில் என்ன சந்தோஷமோ? ஒரு கலைஞனின் மன வருத்தம் கொள்ளச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். வெறும் ஒரு சினிமாவிற்காக சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் அளவிற்கு தமிழக முஸ்லிம்கள் கொடூரமானவர்கள் என்று சொல்லாமல் சொன்ன முதல்வர் பற்றி ஏன் யாரும் எதுவும் சொல்வதில்லை??
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
04-பிப்-201312:54:48 IST Report Abuse
Pannadai Pandian கமலுக்கு அரசியல் என்றால் எவ்வளவு ஆழம் என்று இப்போது தெரிந்திருக்கும். ஆழத்தை காட்டிய முதல்வருக்கு கமல் நன்றி கடன் பட்டிருக்கிறார். ஆழத்தில் ஆசையை காட்டி தள்ளிவிட்டவர் ஏமாந்த சோனகிரியாகி விட்டார். இதன் மூலம் பிரச்சனையை ஊதிப்பெரிதாக்கலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது. சூடு பட்ட பூனை இனி மறந்தும் பாலை குடிக்காது. நீங்க வேட்டி கட்டினா என்ன கோமணம் கட்டினா என்ன என்று துண்டை தலையில் கட்டிக்கொண்டு ஓடிவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
MOHAN - TRICHY,இந்தியா
04-பிப்-201312:23:10 IST Report Abuse
MOHAN தீவிரவாதம் / பிடிவாதம் வெற்றி பெற்றது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்