Swiss banks invites to deposit gold | வலை விரிக்கும், "சுவிஸ் வங்கிகள்' : தங்கம் டெபாசிட் செய்ய அழைப்பு | Dinamalar
Advertisement
வலை விரிக்கும், "சுவிஸ் வங்கிகள்' : தங்கம் டெபாசிட் செய்ய அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஜெனிவா:சுவிஸ் வங்கிகள், தங்களிடம் கணக்கு வைக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, பணக்காரர்களுக்கு, மறைமுக அழைப்பு விடுத்திருக்கின்றன.

முறைகேடாக சேர்த்த சொத்துகளை, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்கள், சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக, குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை, தங்கள் வங்கிகளில், டெபாசிட் செய்ய வருமாறு, உலகில் உள்ள பணக்காரர்களுக்கு, சுவிஸ் வங்கிகள் அழைப்பு விடுத்துள்ளன.

"வாடிக்கையாளர்களின் கணக்கு விவரங்கள், அவர்களது நாட்டின், வருமான வரி துறையினர் மற்றும் கட்டுப்பாட்டாளர்களால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவுக்கு, பாதுகாப்பாக இருக்கும்' என, சுவிஸ் வங்கிகள் உறுதியளித்துள்ளன.சுவிஸ் வங்கிகள், இது தொடர்பாக, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. சமீபத்தில், டாவோசில் நடைபெற்ற, உலக பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்ட, சுவிஸ் வங்கியாளர்களில் சிலர், இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ponraj Tuticorin - Al-Jubail,சவுதி அரேபியா
04-பிப்-201321:37:00 IST Report Abuse
Ponraj Tuticorin இப்ப தான் தெரியுது ஏன் தங்கம் விலை குறைகிறது என்று, அரசியல் வாதிகள் ஸ்விஸ் வங்கிக்கு எடுத்து செல்ல வசதியாக என்று. உஷர் உஷர்.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nagarajan - Madurai  ( Posted via: Dinamalar Android App )
04-பிப்-201316:39:02 IST Report Abuse
Nagarajan நம்ப ஊர்லே மீன்கள் தானாகவே வலையை தேடி போய் விழும் போது அவங்க வேலை ரொம்ப சுலபங்க
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-பிப்-201310:27:36 IST Report Abuse
mirudan தமிழ் நாட்டு பக்கம் வாங்க நிறைய பேர் முதலீடு செய்ய காத்து கொண்டு இருக்கிறார்கள், முதலில் டாஸ்மாக் ஊழியர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், மந்திரி, முதல் மந்திரி இப்படி அகர வரிசைப்படி ஆரம்பித்தால் வரி சுருட்டி கொண்டு போகலாம்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
04-பிப்-201310:04:19 IST Report Abuse
Guru "ஸ்விஸ் பேங்க்" சட்டவிரோதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்த நிறுவனத்தை தடை செய்ய முடியாதா?
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா
04-பிப்-201308:26:20 IST Report Abuse
Arvind Bharadwaj ஆஹா. இதுல்லையா நியூசு. ராஜஸ்தான்ல இருந்து தமிழ்நாட்டுக்கு வர்ற மார்வாடிங்க ஆரம்பிக்கறதே அடகு கடைதான். தங்கத்தை அடகு புடிச்சி எடுத்துகிட்டா ஐஸ்வர்யம் தங்களோட பக்கம் வந்துரும்னு நினைச்சிகிட்டு இந்த கூட்டம் வருது. இப்ப அவங்களுக்கே ஆப்பு அடிக்க வர்ராய்ங்களே சுவிஸ் பேங்க்காரவிக. திருநெல்வேலிக்கே அல்வா குடுக்குராய்ங்களே.
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
04-பிப்-201307:08:58 IST Report Abuse
Baskaran Kasimani சுவிஸ் வங்கிகள் ஒரு காலத்தில் ரகசியங்களை காப்பாறின - அமெரிக்காவின் நெருக்குதலுக்கு பின்னர் அவர்களால் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. இனி வரும் காலங்களில் புதிய பதுக்கல் இடங்களை அரசியல் வாதிகள் கண்டு பிடிப்பார்கள் என்று நம்பலாம்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
04-பிப்-201305:57:46 IST Report Abuse
villupuram jeevithan வலை விரிக்க வேண்டிய அவசியமே வேண்டாம். இப்படி யோசனை சொன்னதே நம்ம அரசியல்வாதிகள் தான்.
Rate this:
0 members
29 members
28 members
Share this comment
Cancel
Annamalai - Oxford,யுனைடெட் கிங்டம்
04-பிப்-201301:25:56 IST Report Abuse
Annamalai உங்க ஸ்விஸ் பேங்க் ஆபீசெர்களுக்கு திறமை கொஞ்சம் கம்மிய இருக்குமோனு தோணுது. பின்ன என்னய்யா முதல் தப்பு எங்க அரசியல்வாதிகள குறைச்சு எடை போட்டது. ரெண்டாவது தப்பு: தமிழ் நாட்டுக்கு நீங்க தனி அழைப்பு குடுக்கனுமா வேண்டாமா? ஆயிரம், இலட்சத்தில அடிச்ச கோடிகணக்கான பணம் இருக்கு.ஸ்விஸ் அக்கௌன்ட் மட்டும் தமிழிலே வச்சுக்கலாம்ன்னு சொன்னிங்கனா உங்களுக்கு தமிழ் நாட்டுலே நிறைய கணக்கு கிடைக்கும்.
Rate this:
1 members
15 members
48 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்