இலவசம்:
"டிவி' சேனல்கள் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்பப்படுகின்றன. தூர்தர்ஷன், கலைஞர் "டிவி', வசந்த், பாலிமர், மெகா போன்ற சேனல்கள் இலவசமாக ஒளிபரப்பை அளிக்கின்றன. சன் "டிவி' சென்னையில் மட்டும் இலவசமாகவும், பிற இடங்களில் கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்புகிறது. விஜய், ஜெயா "டிவி'கள் கட்டண அடிப்படையில் அளிக்கப்படுகின்றன.ஈ.எஸ்.பி.என்., ஸ்டார், டென் போன்ற விளையாட்டுச் சேனல்கள், டிஸ்கவரி உள்ளிட்ட சுற்றுச்சூழல், வன விலங்குகள் பற்றிய சேனல்கள், திரைப்படச் சேனல்கள், கட்டண அடிப்படையில் ஒளிபரப்பாகின்றன.தாக்கம்:
கட்டணச் சேனல்களின் விலை அதிகம் என்பதால், கேபிளின் மாதக் கட்டணத்தை குறைக்க முடியவில்லை என, எம்.எஸ்.ஓ.,க்கள் கூறுகின்றனர். அரசு கேபிள் "டிவி' எம்.எஸ்.ஓ.,வாக செயல்படத் துவங்கியதும், கட்டணச் சேனல்களை இணைத்துக் கொண்டு, இலவச சேனல்களையும் ஒளிபரப்பத் துவங்கியது. இலவசமாக ஒளிபரப்பப்பட்டு வந்த, ஜெயா சேனல்கள் கட்டணச் சேனல்களாக மாற்றப்பட்டன.இதற்கிடையே, உள்ளூர் சேனல்களின் தாக்கம், இலவச செயற்கைக்கோள் சேனல்கள் மூலம் எழுந்துள்ள போட்டி ஆகியவற்றால், கட்டணச் சேனல்களின் பார்வையாளர்கள் மற்றும் விளம்பரங்கள் குறையத்காரணம் என்ன?
வாரந்தோறும் வெளியாகும், டி.ஆர்.பி., ரேட்டிங்கை தக்கவைத்துக் கொண்டால் தான், சேனல்களில் கூடுதல் விளம்பரங்களைப் பெற முடியும் என்பதால், பார்வையாளர்களை அதிகரிக்க,கட்டணச் சேனல்களின் விலையைக் குறைக்க முன்வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.ஈ.எஸ்.பி.என்., போன்ற கட்டணச் சேனல்கள், 25 ரூபாயாக இருந்த மாதக் கட்டணத்தை, 14 ரூபாயாகவும், திரைப்படச் சேனல்கள், 40 ரூபாயிலிருந்து, 30 ரூபாயாகவும் மாதக் கட்டணத்தை குறைத்துள்ளன. பிப்ரவரி 1ம் தேதியிலிருந்து, இக்கட்டணக் குறைப்பு, அமலுக்கு வந்துள்ளதாகவும் எம்.எஸ்.ஓ.,க்கள் கூறுகின்றனர்.தகவல்:
கட்டணக் குறைப்பு கேபிள் மூலம் ஒளிபரப்புவதற்கும், டி.டி.எச்., மூலம்போட்டி:
ஆண்டு முழுவதும், அனைத்து தொடர்களையும் ஒரே சேனல் ஒளிபரப்புவதில்லை. எனவே, கட்டணத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை, தூர்தர்ஷன் இலவசமாக ஒளிபரப்பி விடுகிறது. எனவே, கட்டணம் செலுத்தி சேனலை பார்க்கும் அவசியமும் ஏற்படாது. போட்டிகள் அதிகரித்து வருவதால், விரைவில் கட்டண முறையை சேனல்கள் கைவிடும் சூழல் ஏற்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாம் பார்க்கும் டிவி விளம்பரங்கள் பொருட்கள் விலை உயர்வு நேரிடையாக மறைமுக வாய்ப்பு ஏற்படுகிறது. டிவி தனியார் நிறுவனங்கள் வியாபார யுத்திகள் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். தேவையில்லாமல் டிவி பார்த்து மின்சாரத்தை வீணடிக்க வேண்டாம். தேவையில்லாமல் விளம்பரங்களை பார்த்து பொருள்களை வாங்கவும் வேண்டாம். கட்டண சேனல்களை தவீர்ப்பீர். பணத்தை வங்கியில் தொடர் வைப்பாக சேமிப்பாக சேர்ப்பீர். அவை நமக்கு உதவ கூடியவை. டிவி மற்றும் சினிமாவால் எந்த பயனும் இல்லை. இதனை வாழ்க்கையில் தவீர்பீர். தடைகள் இன்றி முன்னேற்றம் காண்பீர்கள். இதுதான் வெற்றியின் வாழ்க்கையின் இரகசியம்.தினசரி புத்தகம் பத்திரிகை படிப்பீர் சமுக உலக சூழ்யலை அறிவீர்.நலமுடன் வாழுவோம். நம்பிக்கையுடன் முன்னேறுவோம் - பூபதியார்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.