சென்னை : மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு தி.மு.க. திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், லைசென்ஸ் பெறுவதற்கு கடைசிநாளான இன்று, மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அக்கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க கட்சி எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரையில் சுண்டல் விற்பவரும் லைசென்ஸ் பெற வேண்டும், உணவுப்பொருட்களை பாக்கெட்களில் அடைத்து தான் விற்பனை செய்ய வேண்டும், உணவுப்பொருட்கள் வைத்துள்ள கிடங்குகளில் எலி, கரப்பான் பூச்சி உள்ளிட்டவைகள் இருந்தால், உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் சிறை தண்டனை உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடிய உணவு பாதுகாப்பு சட்டத்தினை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தை, தி.மு.க. மனதார வரவேற்கவில்லை என்பதே உண்மை. ஏனெனில், அச்சட்டத்தில் உள்ள அம்சங்கள், சிறுவியாபாரிகளுக்கு பலனை தருவதற்கு பதில் பாதிப்புகளை அதிகம் வழங்கும் வகையில் உள்ளது. மேலும், இச்சட்டத்தில் அதிகாரிகளின் குறுக்கீடு அதிகளவில் இருப்பதாக உள்ளது. இதனால், சிறு மற்றும் நடுத்தர பிரிவு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
உணவுப்பொருட்களை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது பெரிய கடைகளை வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, சிறு வியாபாரிகளுக்கு இது பேரிடியாக அமையும். நுகர்வோர்களும், பாக்கெட்களில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்களை அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவர். அந்த பாக்கெட்களில் உணவுப்பொருட்களின் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது .
எனவே , அனைத்து தரப்பு வர்த்தகர்களும் பயன்பெறும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
சில்லரை வர்த்தகர்களை அழிவின் பாதைக்கு கொண்டு செல்லும் மத்திய அரசின் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க.விற்கு தற்போது சிறு வர்த்தகர்கள் மீது கரிசனம் வந்துள்ளது, வர்த்தகர்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த புத்தி அன்று வெளி நாட்டு வர்த்தகங்களுக்கு அனுமதி அளிப்பது பற்றிய வோட்டேடுப்பின் பொழுது உமக்கோ அல்லது உமது ஊழல் கட்சிக்கோ இருந்திருக்கவேண்டும். யாரை இன்னும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்? உமது காலம் முடிந்து விட்டது. பேசாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மதிப்பை தக்க வைத்துக்கொள்ளலாம். இல்லையேல் தினமும் தூற்றப்படுவீர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.