I will not criticize DMK : Vaiko | தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன் : வைகோ தடாலடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன் : வைகோ தடாலடி

Updated : பிப் 06, 2013 | Added : பிப் 05, 2013 | கருத்துகள் (96)
Advertisement
I will not criticize DMK : Vaiko "ராஜபக்சே வின், இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவேன் என, அறிக்கை வெளியிட்டால், நான், தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்' என, வைகோ கூறினார்.

சென்னை : "ராஜபக்சே வின், இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவேன் என, அறிக்கை வெளியிட்டால், நான், தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன்' என, வைகோ கூறினார். ம.தி.மு.க., வின், 21வது பொதுக்குழு, சென்னையில் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், நாசரேத் துரை, பொருளாளர் மாசிலாமணி, எம்.பி., கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.பொதுக்குழுவில்


நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக, மத்திய அரசு அறிவிக்க, உரிய நடவடிக்கைகளை, தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும். மக்களையும், விவசாயிகளையும் காப்பாற்றாத அ.தி.மு.க., அரசை கண்டிக்கிறோம். மாநில அரசுகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்துகின்ற, "உங்கள் பணம் உங்கள் கையில்' என்ற மோசடி திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் விநியோகத்திற்கான கட்டுப்பாட்டிற்கு மத்திய அரசிற்கு கண்டனம் உள்ளிட்ட, 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிரதமர் இல்லத்தை முற்றுகை :

தொடர்ந்து வைகோ அளித்த பேட்டி:தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, இம்மாதம், 18ம்தேதி மறைமலைநகரில் துவங்கி, கோவளம் வரை பிரச்சார நடைப் பயணம் நடத்தப்படும். ராஜபக்சே வின் வருகையை கண்டித்து, என் தலைமையில், டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும், திருப்பூர் துரைசாமி தலைமையில், திருப்பதியில் கறுப்புக்கொடி காட்டும் போராட்டமும் நடத்தப்படும். இலங்கை அதிபர் ராஜபக்சே, மத்திய அரசின் அனுமதியோடு தான் இந்தியா வருகிறார்.


எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்ச ரவையிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட வேண்டும். அவ்வாறு அறிக்கை வெளியிட்டால், நான் தி.மு.க.,வை விமர்சிக்க மாட்டேன். வரும், லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., போட்டியிடும். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Rangaraj - Erode,இந்தியா
05-பிப்-201317:31:01 IST Report Abuse
Raju Rangaraj திண்ணை காலியாகத்தான் போகிறது. அழகிரியோடு அண்ணன் வைகோ அங்கே குடியேறுவது நிச்சயம். பதவி கிடைகாமலிருக்கும் திமுக மூத்த தலைகள் திண்ணை காலியாகட்டும் என்பதை எதிர் நோக்கி இருக்கிறார் கள் என்பதை காலம் உணர்த்தும். இப்போது பெரியவர் இருக்கும் பொது தரும் மரியாதையை அன்று ஸ்டாலின் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் டு
Rate this:
Share this comment
Cancel
Hari - singapore,சிங்கப்பூர்
05-பிப்-201316:46:12 IST Report Abuse
Hari ஏற்கனவே தைத்த கருப்பு சட்டையை போட கலைஞர் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது அவ்வளவுதான், மற்றபடி இதனால் ஒன்றும் நடக்காது.
Rate this:
Share this comment
Cancel
Venkii - Chennai,இந்தியா
05-பிப்-201315:32:59 IST Report Abuse
Venkii நாஞ்சில் சம்பத் வாயை அடைக்க வழுக்கை திட்டம் போடுது.
Rate this:
Share this comment
Cancel
Karthi Keyan - Chennai,இந்தியா
05-பிப்-201315:08:13 IST Report Abuse
Karthi Keyan அரசியல் சாணக்கியர் கருணா என்றால் அவரை விட பத்துமடங்கு பெரியவ அளவில் இப்போது ராஜபக்ஷே. ஆனால் ராஜபக்ஷே ஒரு முட்டாள் சாணக்கியன். திருப்பதி வருவதும் பின்னர் வெங்கடசலபதி கோவிலுக்கு செல்வதும் தன்னை வைணவ நெறியாளன் என்று கண்பித்துகொள்வதும் வேடிக்கை. ராமன் ராவணனை கொன்றது போன்றது போல், இவன் தமிழர்களை ராவணனுக்கு ஒப்பாக கொன்று குவிததுக்கு போல் தன்னை அடையாளம் காட்டிகொள்ள முயல்கிறது இந்த பக்கி ராஜபக்ஷே. இதன் மூலம் மறைமுகமாக இந்தியாவின் செல்வாக்கை பெறலாம் என்பது இவனின் எண்ணம். ஆனால் இவன் ஒரு அறிவற்ற பக்கி. திருமலை திருப்தியும் தமிழ் மன்னன் தொண்டைமான் கட்டியது ,வைணவ பக்தி தொடங்கியதும் தமிழ் மண்ணில் .ஆதாரம்,இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் இலக்கிய பக்கத்தில் .இப்படி தமிழ் மண்ணில் இறுதி பரவியது வைணவ பக்தி இலக்கியம் .திருப்தியும் சித்தூர் உள்ளடங்கிய பகுதியும் மொழிவாரி எல்லைபிரிபின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திராவிற்கு தாரைவார்கபட்டது.அப்போது அமளி எழுப்பிய எதிர்கட்சிகளிடம் அன்றைய தமிழ் முதல்வர் கர்மவீரர் ,எந்த பகுதி எங்கு இருந்தால் என்ன ?இதியாவில் தானே இருக்கிறது என்றார் .வாயடைத்து போன எதிக்கட்சிகள் பதில் பேசவில்லை அவர் இருக்கும் போதும் இறந்த பிறகும் .இது வரலாறு .ஆனால் பக்கி ராஜ பக்சே வரலாறு எதுவும் தெரியாமல் ,தமிழ் மக்களை கொன்றுவிட்டு ,தமிழ் பகுதிக்கே திருபதிக்கே (இன்று ஆந்திராவின் வசம் ) வந்து பிரைய சித்தம் தேடுவது போன்ற மாயபிம்பம் ஏற்படுத்த விளைவது பேதமையில் எல்லாம் பெரும் பேதைமை .ராவணனை மற்றும் ராமபிரானை பற்றி கூட அந்த பகிபயுளுக்கு முழுமய தெரிய வாய்ப்பு இல்லை .தமிழ் மீது உள்ள வாக்கு சாவடி அன்பால் கருணா தமிழ் பக்தி இலக்கியங்களை கண்டுகொள்ளவில்லை ,சங்ககால கடவுள்களை கண்டுகொள்ளவில்லை .அதை ஒரு ஆய்வாக செய்திருத்தல் கூட இன்று கருணாவை போல் ராஜபக்ஷே இன்று அசிங்கபடிருக்க மாட்டான் .இதை மையமாக வைத்து "தமிழனை கொன்று விட்டு தமிழ் மன்னன் கட்டிய திருமலை என்று தமிழ் பெயரை இன்றும் தான்கிகொண்டிருக்கும் திருப்திக்கு பகுதிக்கு வரும் ராஜப்சவிற்கு இந்த உண்மையை கூறி அந்த நாயை உண்மை உணர்த்தி அதிதி விரட்டுவார்கள திருப்தி வாழ் பூர்விக தமிழர்கள் .
Rate this:
Share this comment
Cancel
Vaal Payyan - Chennai,இந்தியா
05-பிப்-201315:06:06 IST Report Abuse
Vaal Payyan நீங்க 17 தீர்மானங்கள் தான் அதுவும் உள்ளுர்ல நிறைவேற்றினிர்கள் - நாங்கள் கடல் கடந்து போய் 108 தீர்மானங்கள் நிறைவேற்றினோம் அப்புடின்னு தாத்தா அறிக்கை விடுவாரு ... இது தேவையா
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
05-பிப்-201314:36:58 IST Report Abuse
p.saravanan செந்தமிழ் கார்த்திக் அவர்களே, வைகோ அவர்களை பற்றி சரியாக கூறினீர்கள் . இந்திய தேசிய அரசியலில் தன்மானம் உள்ளவர். வைகோ அவர்கள் தனது கொள்கைகளை மாறாமல் கடை பிடிப்பவர். அம்மையாரின் காலில் விழ தேவை இல்லை . கரங்கள் கொடுத்தால் போதும். அரசியல் என்னும் நெடிய பயணத்தில்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
05-பிப்-201313:20:22 IST Report Abuse
PRAKASH நீங்க பேசுனா என்ன பேசலேனா என்ன. .. உங்க பேச்சை கேக்குறதுக்கு யாரும் இல்ல ... வயசான காலத்துல அங்க இங்க அலையாம வீட்டுல உக்காருங்க ..
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
05-பிப்-201312:47:35 IST Report Abuse
சத்தி காங்கிரஸ் லயிருந்து பிச்சுக்க சொல்றாரு, அதுவும் உருப்பிடியா, தன்னிச்சையா முடிவெடுக்க தெரியாத ஒருத்தர்
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
05-பிப்-201311:28:19 IST Report Abuse
ஆனந்த் தடாலடியாக காலில் விழுந்தது கலிங்க நாட்டு சிங்கம்..
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
05-பிப்-201310:56:23 IST Report Abuse
Yoga Kannan இங்கே கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கின்ற ஒரு சில புல்லுருவீகள் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும். திரு மோடி அவர்கள் ஒரு சிறந்த ஆளுமை திறன் கொண்ட முதலமைச்சர்.அவருக்கு USA அனுமதி வழங்கவில்லை.அதனால் இரு நாடுகளுக்கும் உறவு பாதிப்பு ஏற்பட்டதா. அல்லது இரு நட்டு தலைவர்களும் வராமல் - செல்லாமல் இருக்கிறார்களா.இலங்கை பிரச்னை இன்று நேற்றா நடகின்றது.எவன் மத்திய அரசில் ஆட்சி செய்தாலும் இதே நிலைமைதான் ஏற்பட்டது.வீர வசனம் பேசுற தமிழக தலைவர்கள் ஈழ தமிழனுக்க ஒண்ணா கை கோர்த்தது உண்டா . ஓட்டு வாங்குறதுக்கு மட்டுமே ஈழ தமிழன் .அவன் பெயரை சொல்லி ஆட்சியில் அமர்ந்துள்ள அம்மையாரை ஏன் விமர்சிக்கவில்லை.சொந்த நாட்டில் காட்டி கொடுத்த இன துரோகி தமிழ் செல்வனை ஏன் எவனும் சாடவில்லை . இலங்கை தமிழனையும் சேர்த்துதான் கேட்கிறேன்.நீ மானமுள்ள தமிழனாக இருந்ததால் உன் ஒற்றுமையை இப்போது காட்டு... கட்சியை தூக்கி எறிந்துவிட்டு வீதிக்கு வந்து போராடு பார்ப்போம் .... தமிழகத்தை ஸ்தம்பிக்கவை ....உன்குரல் இந்தியா என்ன ..... உலக நாடு முழுதும் ஓங்கி ஓலிக்கும்.....ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....இல்லையேல் தமிழனுக்கு தாழ்வே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை