Vijayakanth advises to MLAs | சபையில்எப்படி செயல்படுவது? விஜயகாந்த், "அட்வைஸ்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபையில்எப்படி செயல்படுவது? விஜயகாந்த், "அட்வைஸ்'

Updated : பிப் 06, 2013 | Added : பிப் 05, 2013 | கருத்துகள் (96)
Advertisement
சட்டசபையில் எவ்வாறு செ யல்பட வேண்டும் என்பது குறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுடன், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை: சட்டசபையில் எவ்வாறு செ யல்பட வேண்டும் என்பது குறித்து, தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களுடன், அக்கட்சி தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.செ ன்னை, கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., அலுவலகத்தில், விஜயகாந்த் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன், அனகை முருகேசன், அருண் சுப்பிரமணியன், பண்ருட்டி சிவக்கொழுந்து ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் கலந்துக் கொள்ளவில்லை.‌சொந்த அலுவல் காரணமாக இவர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழழகன், சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகியோரும் பங்கேற்கவில்லை. மற்ற, 20 எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில் பேசுவதற்கு, அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும் ஆர்வமாக இருப்பது தெரிகிறது.


குறைந்த நாட்களில் இந்த கூட்டத்தொடர் நடப்பதால், அனைவரும் பேச முடியாது. எனவே, இந்த கூட்டத் தொடரில் பேசுவதற்கு, பார்த்திபன், வெங்கடேசன், சந்திரக்குமார் ஆகிய மூன்று பேரை நானே தேர்வு செய்துள்ளேன்.பட்ஜெட் கூட்டத்தொடரில், மற்ற, எம்.எல்.ஏ.,க்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படும். விவசாயிகளுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்தும், மின்வெட்டால் தொழில்கள் பாதித்துள்ளது குறித்தும் கவர்னர் உரையில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.


எனவே, இப்பிரச்னையை, இந்த மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், பிரதானமாக எழுப்புவர். வேறு என்னென்ன பேசவேண்டும் என, மற்ற எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்க்கின்றீர்களோ, அதை அவர்கள் மூவரிடமும், பகிர்ந்துக்கொள்ளுங்கள். இது குறித்து இங்கேயே அமர்ந்து விவாதித்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசியதாக கூறப்படுகிறது.

விஜயகாந்த்,இன்று முடிவு :

இதைதொடர்ந்து, சட்டசபையில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, மற்ற எம்.எல்.ஏ.,க்கள் விவாதித்துவிட்டு, பிற்பகல், 2:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இம்மாதம், 8ம்தேதி முதல்வரின் பதிலுரை இடம்பெறும் நாளில், எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்று பேசுவது குறித்து, விஜயகாந்த்,இன்று முடிவு செய்வார் எனத் தெரிகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LOTUS - CHENNAI,இந்தியா
10-ஏப்-201316:35:07 IST Report Abuse
LOTUS சபை அலுவல் நேரத்தில் கேள்வி நேரம் என்பது ஒரு பகுதி.. அதில் அணைத்து தரப்பிற்கும் உரிய எண்ணிக்கையில் கட்சி வாரியாக, பிரிக்கப்பட்டு மொத்தமாக 8 - 10 பேச அனுமதி அளிக்கப்படும்..... வோவொரு கட்சிக்கும் தனித்தனியாக நேரம் அளிக்கபட்டால் அன்றைய அலுவல் நேரம் குளறுபடியாகும்.... வேலைக்கு சேர்ந்து 2 வருடம் ஆகியும் இன்னும் trainee / apprenticeship முடிக்காத thalaimai. athan தலைமையில் ஒரு கூட்டம்.......... தலயில் அடித்து கொள்ளுவதாக இருந்தால் மூளையே கலங்கி ...................
Rate this:
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
02-ஏப்-201310:47:53 IST Report Abuse
R.Saminathan மக்களுக்காக கடுமையாக பாடு பட வேண்டும் தே.மு.தி.க..
Rate this:
Share this comment
Cancel
Bala Murali - Tirunelveli,இந்தியா
07-பிப்-201304:22:18 IST Report Abuse
Bala Murali சொன்ன பேச்ச கேட்பியா கேட்பியா .ங்க்க்
Rate this:
Share this comment
Cancel
PALANI - Madurai,இந்தியா
05-பிப்-201322:15:00 IST Report Abuse
PALANI கடந்த ஆட்சியின் பொது சட்டசபைக்கு வராமல் வரண்டாவில் கையெழுத்து போட்டவர் தான் இந்த முதல்வர் JJ .மறக்க முடியுமா .இது எல்லா கட்சிக்கும் பொதுவான ஒரு mla கூட்டம் தான். இதை இந்த நாளிதழ் பெரிதாக எழுது கிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Senthil kumar - Cuddalore,இந்தியா
05-பிப்-201321:28:28 IST Report Abuse
Senthil kumar sabash kalakkunga captain.
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
05-பிப்-201321:26:00 IST Report Abuse
venkat Enna pudhu கமெடி கேப்டன், இப்போ என்ன அறிவுரை குடுக்கபோறீங்க. குடியும் குடுதினமும் பற்றி பேச சொல்லி குடுக்க போறீங்க. அதுல நீங்க தான் எச்பெர்ட் ஆச்சே. ஏன் யா ஒரு நாள் குடிக்காம நிதானமா யோசிச்சு பாரு, அப்போ புரியும் நீ எவ்வளவு லக்கி லைப் ல நு. இல்லேன்னா நீ எல்லாம் பொது வாழ்கைல வரமுடியுமா. நேராம் தான் ஔர் டியர் பாட்டில் கேப்டன்.
Rate this:
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
05-பிப்-201320:33:03 IST Report Abuse
Ajay ganesh சொல்லிடாரு.......கேப்டன் ...உங்க தொண்டர்களிடம் நீங்கள் நாகரிகத்தை கற்றுக்கொள்ளுங்கள்....அவங்க தேவலாம்.
Rate this:
Share this comment
Cancel
GURU.INDIAN - beiruth,லெபனான்
05-பிப்-201318:24:39 IST Report Abuse
GURU.INDIAN அப்படியே ஆப்பம் சுடுவது எப்படி ? தோசை சுடுவது எப்படி ? குவாட்டர் பாட்டால் திறப்பது எப்படி என்று சொன்னால் நல்லா இருக்குமே ?
Rate this:
Share this comment
Cancel
மதுர முனியாண்டி - madurai,இந்தியா
05-பிப்-201313:48:28 IST Report Abuse
மதுர முனியாண்டி தேறாத case
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
05-பிப்-201313:21:47 IST Report Abuse
PRAKASH வெளி நடப்பு செய்யுறதுக்கு எதுக்கு அட்வைஸ் ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை