Now, Mani Ratnam's 'Kadal' faces protest by Christian outfit | "கடல்' படத்துக்கும் கிளம்பியது எதிர்ப்பு | Dinamalar
Advertisement
"கடல்' படத்துக்கும் கிளம்பியது எதிர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை : "கிறிஸ்தவர்களை புண்படுத்தும் வகையில், சமீபத்தில் வெளிவந்துள்ள, "கடல்' படத்தின், தயாரிப்பாளர் மனோகர் பிரசாத், டைரக்டர் மணிரத்னம் ஆகியோரை கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பேராயர் கிறிஸ்து மூர்த்தி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனு :தமிழகம் முழுவதும், இம்மாதம், 1ம் தேதி வெளியிடப்பட்ட, டைரக்டர் மணிரத்னத்தின், கடல் திரைப்படத்தில், கிறிஸ்தவர்கள் மனதை புண்படுத்தும் வகையில், சில காட்சிகள் உள்ளன. பைபிள் கல்லூரியில், நடிகர்கள் அரவிந்த்சாமி, அர்ஜுன் ஆகியோர் மாணவர்களாக இருக்கும் வகுப்பறையில், "சாத்தான் அண்ணன், இயேசு தம்பி' என்று பேசும் வசனத்தை நீக்க வேண்டும். படத்தின் கதாநாயகன் பிரசவம் பார்த்த கைகளில், ரத்தம் இருக்க உடன் இருப்பவர், "என்ன ரத்தம்' என கேட்கும் போது, "இது இயேசுவின் ரத்தம்' என்று கதாநாயகன் சொல்கிறார்.
சாத்தானை பார்த்து :


திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகளில், பாதிரியார் அரவிந்த்சாமியும், சாத்தான், அர்ஜுன் ஆகிய இருவரும் பயங்கரமாக மோதிக் கொள்ளும், சண்டை காட்சியில், பாதிரியார் அரவிந்த்சாமி, சாத்தானை பார்த்து, "நீ ஜெயித்து விட்டாய்' என்று மூன்று முறை கூறுவார்; சாத்தான் ஜெயித்ததாக வரலாறு கிடையாது. "ஆண்டவர் மீது சத்தியம்' என்று கூறுவது உள்ளிட்ட ஆறு காட்சிகள், கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே, படத்தயாரிப்பாளர், டைரக்டர் மணிரத்னம் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும். திரைப்பட தணிக்கை குழு அதிகாரி பக்கிரிசாமி மீது வழக்கு தொடர வேண்டும். இந்த படத்தை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, உரிய நடவடிக்கை இல்லையென்றால், கிறிஸ்தவர்களை ஒன்று திரட்டி போராடுவோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"ஆதிபகவன்' படத்தில் சர்ச்சை : "ஆதிபகவன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தெரியவந்துள்ளதால், அதனை தாங்கள் பார்த்த பின்பே திரையிட வேண்டும்' என, இந்து மக்கள் கட்சியினர், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்த "விஸ்வரூபம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி, முஸ்லிம் அமைப்பினர், படத்தை தடை செய்யுமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்து, தடை செய்யப்பட்டது. தொடர்ந்து, தற்போது சமாதானம் ஏற்பட்டு, படம் வெளியிடும் நிலைக்கு வந்துள்ளது.

இந்து மக்கள் கட்சியினர் ; இந்நிலையில், இயக்குனர் அமீரின், ஆதிபகவன் படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த படத்தில், இந்து சமய நம்பிக்கைகளை புன்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அந்த படத்தை இந்து இயக்க தலைவர்களுக்கு திரையிட்டு காட்டிய பின்பு, திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி, இந்து மக்கள் கட்சியினர், நேற்று, தலைமைச் செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர். இதையடுத்து, ஆதிபகவன் வெளியாவதிலும் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (207)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agaram - Coimbatore,இந்தியா
05-பிப்-201316:34:27 IST Report Abuse
Agaram நான் கோவில் கூடாது என்று சொல்லவில்லை, கோவில் கொடியவரின் கூடாரமாக கூடாது என்றுதான் சொல்கிறேன். நான் திரைப்படங்கள் கூடாது என்று சொல்லவில்லை. அந்த திரை படங்களில் ஆபாசம், வன்முறை, மதவிசிவசிகள் மணம் நோகடிப்பு போன்றவை தான் கூடாது என்கிறேன்.
Rate this:
84 members
1 members
33 members
Share this comment
Cancel
yesubalan - coimbatore,இந்தியா
05-பிப்-201315:52:06 IST Report Abuse
yesubalan ஒவ்வொருவர் வாழ்விலும் " நான் " என்ற வார்த்தை நீக்கப்பட்டு அதில் "இறைவன் "என்பவன் இடம் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு மத கோட்பாட்டு .ஆனால் மனிதன் மேற்கூறியவற்றை மட்டும் தவிர்த்து ,அவனுடைய சுய சல்லாப காரியங்களுக்கு ,இறைவனை பயன்படுத்துவது என்பது ,இதயத்தில் இருக்கவேண்டிய இறைவன் ,நம் காலில் அகப்பட்ட பந்தை போல
Rate this:
11 members
1 members
17 members
Share this comment
Cancel
Rajasekharan - Chennai,இந்தியா
05-பிப்-201315:47:59 IST Report Abuse
Rajasekharan நாடு கடலுல கப்பலை இறங்கி தள்ள முடியுமா... கடல் படத்தில கதை என்னனு சொல்ல முடியுமா ...முடியுமா...
Rate this:
3 members
0 members
47 members
Share this comment
Cancel
Babu Bose - Chennai,இந்தியா
05-பிப்-201315:45:37 IST Report Abuse
Babu Bose ஏங்க..எல்லாரும் கடைய சாத்துனதுக்குப்புறம் நீங்க தொறக்குறீங்க....... இவங்க எப்போமே இபடித்தான் மணிரத்தினம் நீங்க அடுத வேலையா பாருங்க
Rate this:
8 members
0 members
29 members
Share this comment
Cancel
TRR Mani - New Plymouth,நியூ சிலாந்து
05-பிப்-201315:44:31 IST Report Abuse
TRR Mani மற்ற மாநிலங்களில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டு ஒழுங்காக ஓடியும் தமிழ் நாட்டில் நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அதற்க்கு ஆதரவான அரசின் போக்கும் அமைதியாக இருக்கும் பெரும்பாலான மக்களை முகம் சுளிக்க வைத்தது. எல்லா அரசுகளும் அரசியல் கட்சிகளும் சிறுபான்மை மதத்தவரின் காவலனாக தங்களை காட்டி கொள்ள விரும்புகின்றன. அவர்களது கோரிக்கைகளுக்கும், மிரட்டல்களுக்கும் ஓட்டுக்காக அடி பணிகின்றன. ஏனென்றால் பெரும்பான்யினரின் ஓட்டுக்கள் சிதறி கிடக்கின்றன. ஆனால் இப்படியே போய் கொண்டிருந்தால்..என்ன ஆகும்? விஸ்வரூபம் விவகாரம் மாதிரி இன்னும் ஒன்றிரண்டு தேர்தலுக்குள் நடந்தால் பெரும்பான்மியர் எரிச்சலாகி இந்த மாதிரி கட்சிக்கு எதிர்த்து வாக்களிப்பர். நிலைமை மாறி போகும் நாள் தூரத்தில் இல்லை என்று தோன்றுகிறது.
Rate this:
19 members
0 members
129 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
05-பிப்-201315:27:26 IST Report Abuse
maravan இனிமேல் எந்த படம் வந்தாலும் அந்த மத ஜாதி பற்றிய குழுக்கள் பிரச்சனை செய்வார்கள்...விஸ்வரூபத்தில் தமிழக அரசின் தவறான முடிவே இதற்கெல்லாம் காரணம். ..ஆகவே இனிமேல் சினிமாவுக்கு கஷ்டகாலம்தான்...
Rate this:
11 members
0 members
159 members
Share this comment
Cancel
Kanal - Chennai,இந்தியா
05-பிப்-201315:24:33 IST Report Abuse
Kanal சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்குக் கொடுத்துவிட்டால் பிரச்சினை சுமூகமாக முடியும்.
Rate this:
15 members
0 members
151 members
Share this comment
Cancel
rama kumaran - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-201315:14:26 IST Report Abuse
rama kumaran படம் வேஸ்ட்....... செம மொக்கை, கிறிஸ்டின் நண்பர்களே ஓடுற படத்துக்கு போராட்டம் பண்ணுங்க, ஓடாத படத்துக்கு வேண்டாம்.
Rate this:
8 members
2 members
62 members
Share this comment
Cancel
Tamilan - Tamil nadu,இந்தியா
05-பிப்-201314:47:08 IST Report Abuse
Tamilan சினிமாக்காரன் பின்னாடி போகாதீர்கள் மக்களே. அவன் எல்லா மதத்தையும் வைத்து சம்பாரிக்க பார்கிறான், கோடி கோடியாக மக்கள் பணத்தை சினிமா என்ற மாயையை வைத்து கொள்ளை அடிக்கிறான். விளித்து கொள்ளுங்கள். சினிமாக்காரன் பின்னாடி போகாதீர்கள்.
Rate this:
7 members
0 members
44 members
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
05-பிப்-201314:46:21 IST Report Abuse
meenakshisundaram பழையபடி அரசாங்க செய்தித்துறையின் நியூஸ் மட்டும் தயாரித்து ஓட்டுங்க. மற்ற சினிமா எல்லாம் DTH ல போட்டுடுங்க. நாங்க வீட்டுலயே பாத்துக்கறோம். அப்பத்தான் எந்த பயலும் பெட்ரோ குண்டு போடமாட்டான்
Rate this:
4 members
0 members
184 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்