அரசியல்வாதிகள் பாலியல் குற்றம்; விசாரிக்க முடியாது!; சிதம்பரம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

""பாலியல் வன்முறைகளுக்கு எதிராக அமல்படுத்தப்பட்டுள்ள அவசர சட்டம், முடிவானது அல்ல; ஒரு துவக்கமே. நீதிபதி வர்மா தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரைகள் அனைத்தும், அவசர சட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்றாலும், எந்த ஒரு பரிந்துரையும் நிராகரிக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரைகள் அடிப்படையில், பாலியல் வன்முறைகளை தடுக்க, மத்திய அரசு, நேற்று முன்தினம் அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்தியது.

இந்த அவசர சட்டம் பற்றி, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் நேற்று கூறியதாவது:


கருத்தொற்றுமை : பாலியல் குற்றங்களை தடுக்க, புதிதாக அவசர சட்டம் அமலாகியுள்ளது. இந்த அவசர சட்டம், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில், அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்தை, மத்திய அரசு தயாரித்த போது, இன்னென்ன அம்சங்கள், சட்டத்தில் இடம் பெற வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்தனர். அதில், சில அம்சங்களில் கருத்தொற்றுமை காணப்பட்டது; மற்ற சில அம்சங்களில் மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அனைத்தையும், அரசு கவனத்தில் கொண்டு, அதனடிப்படையில், அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கருத்தொற்றுமை உள்ள அம்சங்கள் எல்லாம், சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம், பாலியல் குற்றங்களுக்கு எதிரான, ஒரு துவக்கமே; இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம், அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கருத்தொற்றுமை இல்லாத அம்சங்களிலும், ஒரு முடிவு காண, முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இந்த அவசர சட்டம் ஒப்புதலுக்காக, பார்லிமென்டில் தாக்கலாகும் போது, விவாதம் நடைபெறும்; அப்போது, எம்.பி.,க்கள் பலரும், தங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் தெரிவிப்பர். அவற்றையும் பரிசீலித்து, அவற்றிலுள்ள நன்மை தரும் அம்சங்கள், சட்டத்தில் சேர்க்கப்படும். அத்துடன், அனைத்து அரசியல் கட்சிகளிடமும், யோசனை கேட்கப்பட்டு, அவையும், சட்டத்தில் இணைக்கப்படும்.

பாலியல் வன்முறைக்கு எதிரான, முந்தைய சட்டங்களின் முக்கிய அம்சங்களும், புதிய சட்டத்தில் சேர்க்கப்படும்.பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் சிறாராக இருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்குவதில், வயது ஒரு பிரச்னையாக உள்ளது. தற்போது சிறாருக்கான வயது வரம்பு, 18 ஆக உள்ளது. இதை, 16 ஆக குறைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரத்தில், குறைக்க கூடாது என்றும் சில தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.எனவே, இந்த வயது வரம்பு விஷயத்தில், அரசு அவசரப்பட்டு ஒரு முடிவை எடுக்க முடியாது. அதனால், இது தொடர்பாக ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சிகளில், மத்திய உள்துறை அமைச்சகமும், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளன.

ராணுவத்தினர் - போலீசார் : பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மற்றும் போலீசார் மீது, நடவடிக்கை எடுக்க, அரசு தயக்கம் காட்டுவதாக கருத வேண்டாம். இந்த குற்றங்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும், தண்டனை அளிக்க, அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து, ராணுவ அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் தீவிரமாக கலந்து ஆலோசித்து வருகின்றன; விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும்.அரசியல்வாதிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, தனியாக விரைவு கோர்ட் அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.-நமது டில்லி நிருபர்-

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.RAMAN. - chennai,இந்தியா
10-பிப்-201313:55:41 IST Report Abuse
K.RAMAN. அரசியல்வாதிகளை சிதம்பரம் எப்படி விசாரிக்க சொல்லுவார்.உள்துறை அமைச்சருக்கு பி ஜே குரியன் வேண்டாதவரா.கார்த்திக் சிதம்பரமும் உதயநிதியும் அவர் மறக்கமுடியுமா.வாரிசுகளை மறந்தால் நாளை ஆட்சி எப்படி நடக்கும்.எல்லோரும் இந்த அவசர சட்டப்படி விசாரிக்க படுவார்கள் என்றாவது ப சி சொல்லிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
05-பிப்-201304:48:50 IST Report Abuse
Thangairaja இவர் சொல்வது சரிதான். அரசியல்வாதிகளை ஏன் பிரித்து பார்க்க வேண்டும். எல்லோருக்கும் பொதுவான தண்டனையே போதுமானது. ராணுவ. போலிஸ் துறையினருக்கு சாதரணமானவர்களை விட தண்டனை இருமடங்காக்க pada வேண்டு, சவூதியில் நடைமுறையில் உள்ளது போல.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
05-பிப்-201304:41:29 IST Report Abuse
Skv 1947லெ சுதந்திரம் வாங்கினோம் இப்போ 2013 இத்தனை வருஷமா என்ன செஞ்சாங்க எல்லா அரசியல்வாதிகளும் அப்போலேந்தே இந்த ஆபாசம் நடந்துண்டே தான் இருக்கு , டெல்லிகேசு ஒபேனாவெளிலே வந்துட்டுது பங்களூர் கேசு அமுக்கியாச்சு , அரசியல் எம்பி எம் எல் எ என்றால் என்ன ஆகசத்துலேந்த வந்தாக . தப்பு எவன் செஞ்ச்சளும் தப்புதான்
Rate this:
Share this comment
Cancel
Rk Babu - பெங்களூர் ,இந்தியா
05-பிப்-201304:24:40 IST Report Abuse
Rk Babu யார் இந்த அரசியல் வாதி பொதுமக்கள் வேலைக்காரன் இவர்கலுக்கு இந்த சட்டம் ஏன் அமைக்கவில்லை ஒரு அரசியல்வாதி கூட தண்டனை இல்லாமல் இருக்க மாற்றான் இந்தியாவில் அரசியல்வாதியே இருக்கமாட்டார்கள் எனவே இவர்களுக்கு சாதகமாக இவர்களே சட்டம் இயற்றி ஒப்புதல் அளிப்பார்கள் இது இந்தியாவின் நிலை
Rate this:
Share this comment
Cancel
GUNA - chennai,இந்தியா
05-பிப்-201301:44:07 IST Report Abuse
GUNA உங்களை எப்போது உள்துறை அமைச்சர் ஆக்கினார்கள் ? உங்கள் வீட்டுக் கூரையின் ஓட்டைகளை முதலில் சரி செய்யுங்கள் . அடுத்தவன் வீட்டைப் பற்றி அப்புறம் பேசலாம்
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
05-பிப்-201301:29:47 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ராணுவத்துக்கு, ராணுவ கோர்ட் இருக்கு, ஆனா பொலிசாருக்கு சக பொலிசார் கேசே பதிய மாட்டாங்களே? அது எங்க போயி சொல்வீங்க?
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
05-பிப்-201301:02:17 IST Report Abuse
தமிழ் சிங்கம் ஒரே நாளில் இந்தியா வளர்ந்த நாடாகிவிட முடியாது. எந்த சட்டமும் உடனடியாக அமுல் படுத்த வேண்டும். அதில் அரசியல்வாதிகளையும் உட்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது தவறு. எந்த சட்டத்தையும் படிப்படியாகத்தான் முன்னேற்றமுடியும். முதலில் இப்போது வந்துள்ள சட்டத்தால் அரசியல்வாதிகளை தடை செய்கிறதா என்று பார்ப்போம். இல்லையென்றால் அவர்களுக்கென தனி சட்டம் கேட்போம். பாலியியல் குற்றத்திற்கு உள்ளான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்வது? நாம் ஓட்டுபோட காசு கேட்போம். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் காந்தி போன்று இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
05-பிப்-201304:33:27 IST Report Abuse
Baskaran Kasimaniஒரே நாளில் முடியாது - ஆனால் சுதந்திரம் வாங்கி 23,916 நாட்கள் கடந்து விட்டது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்