பெண்ணை பின் தொடர்ந்தாலே மூன்றாண்டு சிறைவாசம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: "பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.


கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.


பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தொந்தரவு செய்வதற்கு, குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.ஆண் குறியை காண்பித்தல், பிறரின் உடலுறவு காட்சிகளை காட்டுதல் போன்ற, முதல் முறையாக செய்யும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், ஓராண்டு முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.மீண்டும் அதே குற்றங்களை செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

அவிழ்த்து மானபங்கம் :

பெண்ணின் ஆடையை தவறான நோக்கத்தில் அவிழ்த்து மானபங்கம் செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் கிடைக்கும். பாலியல் நோக்கத்தில் எழுதப்பட்ட, வரையப்பட்ட ஏதாவது ஒன்றை காண்பித்தல், நிர்வாண படங்களை காண்பித்தல் போன்ற குற்றங்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.பாலியல் நோக்கத்தில் பெண்ணை தொடுவது, அவர் மீது படர்வது, கெஞ்சுவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும், இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படும். போலீஸ் துறையை சேர்ந்தவர், அரசு ஊழியர், ராணுவ படை வீரர் போன்றவர்கள், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

குற்றச்சட்டம், 376 (கற்பழிப்பு) படி, கற்பழிப்பு குற்றத்திற்கு, குறைந்தபட்சம், ஏழு ஆண்டு முதல், ஆயுட்காலம் வரையிலும் சிறையில் இருப்பதற்கான, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்தை கும்பலாக சேர்ந்து செய்பவர்களுக்கு, ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.அதிகாரத்தில் உள்ளவரின் கீழ் வேலை பார்க்கும் பெண், உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல், அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மைனர் பெண்களை கடத்தினால்: மைனர் பெண்ணை கடத்திய நபர், ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தால், அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். அவ்வாறு கடத்தி வரப்பட்ட மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் அல்லது கடத்தலுக்கு உதவினால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல் அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை கடத்தினால், குறைந்தபட்சம், 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையும், அபராதத்துடன் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை கடத்தினால், குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் முழுக்க சிறை தண்டனை நிச்சயம்.இவ்வாறு, பல திருத்தங்கள், அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (107)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
05-பிப்-201315:33:29 IST Report Abuse
vayalum vazhvum-saravanakumar அப்படியே பொது இடத்தில் அசிங்கமாக உடல் அங்கங்களை காட்டும் பெண்களை, மற்றும் transparency துணி போட்டுகொண்டு அசிங்கமாக ஆடும் பெண்களை சிறையில் தள்ள சட்டத்தில் திருத்தம் வேண்டும், உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டில் ஆடும் பெண்களை சிறையில் தள்ள சட்டம் கொண்டுவரவேணும் .முழங்காலுக்கு மேல் துணி உடுத்தி பிச்சைகார பெண்மணிகள் போல ஆங்கங்கே துணிகளை கிழித்துக்கொண்டு நடமாடும் பெண்களுக்கும் தவறு செய்ய தூண்டியதாக சிறையில் தள்ள சட்ட திருத்தம் வேணும்.
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
05-பிப்-201315:23:04 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் நடையா, இது நடையா ..........நடையை மாத்து .....என்று பாட்டெல்லாம் பாட முடியாதா? என்ன கொடுமை சரவணன்?
Rate this:
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
05-பிப்-201315:22:11 IST Report Abuse
maravan இது போன்ற கடுமையான சட்டங்கள் வந்தால் குற்றம் குறையுதோ இல்லையோ நிச்சயம் காதல் திருமணங்கள் குறையும்...ஏன் என்றால் காதல் செய்ய ஆண்களுக்கு பயம் வரும்...
Rate this:
Share this comment
Cancel
Sheik Maideen - BANGKOK,தாய்லாந்து
05-பிப்-201315:12:09 IST Report Abuse
Sheik Maideen வன்கொடுமை சட்டங்கள் கடுமையா இருக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன். ஆனால் இதை தவறாக பயன்படுத்தும் பெண்ணுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Bava Husain - riyad,சவுதி அரேபியா
05-பிப்-201314:22:18 IST Report Abuse
Bava Husain சட்டம் என்னவோ நல்லாத்தான் இருக்கு... ஆனா.... ஆனா... ம்ம்ம்ம் சந்தோஷமாவும் இருந்துக்க, எதுக்கும் ஜாக்கிரதையாவும் இருந்துக்க.....
Rate this:
Share this comment
Cancel
kannan - hyderabad,இந்தியா
05-பிப்-201313:50:49 IST Report Abuse
kannan பாவம் ஆம்பள நிலைமை?
Rate this:
Share this comment
Cancel
kannan - hyderabad,இந்தியா
05-பிப்-201313:50:09 IST Report Abuse
kannan எல்லாம் பெண்கள் பாதுகாப்புக்கு தான ஆண்கள் மனித ஜாதி கிடையாதா ஒரு பெண் ஒருவனை காதலித்து எமற்றுகிறாள் அவன் தற்கொலை செய்து கொண்டால் பெண்ணுக்க் தண்டனை எதாவது குடுங்க பாஸ் .
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
05-பிப்-201313:41:31 IST Report Abuse
சத்தி வழிய தேடி வரும் பெண்கள, சுத்திமுத்தி குறு குறு நு எவனாச்சும் பாப்பான்னு அலைபாயும் பெண்கள பத்தி சொல்லாதது துரதிர்ஷ்டவசமானது.
Rate this:
Share this comment
Cancel
Murugan Usha - Bhopal,இந்தியா
05-பிப்-201313:35:51 IST Report Abuse
Murugan Usha சமிபத்தில் கேரளவில் ஒரு சம்பவம் நடந்தது அதில் 40 வயது பெண் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பலாத்காரம் செய்தாள். இதற்க்கு என்ன தண்டனை? இதில் ஆண்கள் பாதிக்கதனே படுகிறார்கள். வரும் காலத்தில் அப்படிதான் நடக்கும் போல என்ன கொடுமை சார் இது ?
Rate this:
Share this comment
Cancel
Rajakumar - johannesburg,தென் ஆப்ரிக்கா
05-பிப்-201313:28:28 IST Report Abuse
Rajakumar இந்த சட்டத்தை முழுமையாக ஏற்று கொள்ள முடியாது. டில்லி விசயத்திற்கு அப்பறம் தினமும் கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கு செய்தி தாளிலும் வந்து கொண்டு தான் இருக்கு. தப்பு செய்தால் என்றால் உடனடியாக தண்டனை குடுங்க அதை விட்டு 1000 பக்கம் குற்ற பத்திரிக்கை அதை விசாரிக்க 10 வருடம் டிவில மூஞ்சு தெரியாம மூடிகிட்டு போறது அப்பறம் எங்க சார் இந்த மாதிரி குற்றதை தடுக்க முடியும். தப்பு செய்தவன் யாருன்னு உலகுக்கு தெரியனும் அவர்களுக்கு குடுக்கும் தண்டனை உடனடியாக இருக்க வேண்டும் அதை மக்கள் பார்க்க வேண்டும். இதை பண்ணி பாருங்க அப்பறம் இந்த மாதிரி குற்றம் நடக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்