E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2013,01:36 IST
கருத்துகள் (2)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தேவையான தட்டு மற்றும் டம்ளர்கள் கடந்த, 30 ஆண்டுகளாக வாங்கப்படவில்லை. வீட்டிலிருந்தே தட்டு கொண்டு வந்து சாப்பிட, மாணவர்கள் சங்கடப்படுகின்றனர். இதையடுத்து, சத்துணவு வழங்க, 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் தேவை என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 1982 - 83ம் கல்வியாண்டில், பள்ளிகளில் மதிய சத்துணவு திட்டத்தை, முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்தார். அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 35 ஆயிரம் பள்ளிகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

"வெரைட்டி ரைஸ்' : இதற்காக, ஒரு மாணவனுக்கு, 10 ரூபாய் என்ற அடிப்படையில், அலுமினிய தட்டு, டம்ளர் மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கி கொள்ள உத்தரவிடப்பட்டது. தற்போது, 43 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும், சத்துணவு திட்டத்தின் மூலம், 52 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை, 25 லட்சம் மாணவர்களும்; 6ம் வகுப்பு முதல், 10ம்

வகுப்பு வரை, 16 லட்சத்து, 38 ஆயிரம் மாணவர்களும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். இவர்கள் தவிர, தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ், 12 ஆயிரம் பேரும், 18 ஆயிரம் முதியவர்களும் சத்துணவு திட்டத்தின் மூலம், பயனடைந்து வருகின்றனர். சத்துணவு திட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், விரைவில், "வெரைட்டி ரைஸ்' என்ற திட்டத்தையும் அமல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தட்டு, டம்ளர்கள் வாங்க : இந்நிலையில், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்குபோதிய அளவில் தட்டுகள், டம்ளர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட, 1982ம் ஆண்டு, அலுமினிய தட்டு, டம்ளர், மற்றும் சமையல் பாத்திரங்கள் வாங்கிக் கொள்ள, நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின், ஒவ்வொரு ஆண்டும், சமையல் பாத்திரங்கள் வாங்குவதற்கு மட்டும், நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், தட்டு, டம்ளர்கள் வாங்க, முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது இல்லை. சத்துணவு ஊழியர் ஒருவர் கூறியதாவது:

Advertisement

வருகை பதிவேட்டுக்காக... சில மாணவர்கள், வருகை பதிவேட்டுக்காக சத்துணவு சாப்பிடுகின்றனர். இதற்காக,வீட்டில் இருந்து சிறிய தட்டு எடுத்து வருகின்றனர். முட்டையுடன், சத்துணவு வாங்கி, முட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். சாப்பாட்டை அப்படியே கொட்டி விடுகின்றனர். இதனால் சத்துணவு வீணாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த பிரச்னை குறித்துல எங்கள் கவனத்துக்கும் வந்தது. 62 லட்சம் தட்டு மற்றும் டம்ளர்கள் வாங்க வேண்டியிருப்பதாகவும், இதற்காக, 16 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும், அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளோம். விரைவில் அரசு தரப்பில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
manama murugesh - manama,பஹ்ரைன்
06-பிப்-201300:07:16 IST Report Abuse
manama murugesh பள்ளி சிறார்களின் பாவத்தை சம்பதிக்காதீர்கள்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05-பிப்-201310:18:39 IST Report Abuse
சு கனகராஜ் அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் மிக பெரிய தொழில் நிறுவனங்களையோ அல்லது தொழிலதிபர்களையோ முடிந்த அளவுக்கு தட்டு தம்லர்கலையே அளிக்க செய்யலாமே
Rate this:
1 members
0 members
18 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.