Music class for inmates | கைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்

Added : பிப் 05, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கைதிகள் மன நிலையை மாற்ற இசைப்பயிற்சி துவக்கம்

சேலம்: சேலம் மத்திய சிறையில், கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த, இசைப் பயிற்சி நேற்று துவக்கப்பட்டது. சேலம் மத்திய சிறையில், நேற்றைய நிலவரப்படி, 988 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 580 பேர் தண்டணைக் கைதிகளாகவும், 488 பேர் விசாரணைக் கைதிகளாகவும் உள்ளனர். இதில் தண்டணைக் கைதிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில, அவர்களுக்கு இசைப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.நேற்று முதல் கட்டமாக, 15 சிறைக் கைதிகளுக்கு இசைப் பயிற்சி துவக்கப்பட்டது.
இந்த பயிற்சிக்கான இசைக் கருவிகளை, ஹிந்தி சிறைப்பணி அமைப்பு சகோதரி ஜாய்ஸ் வழங்கினார். செயின்ட் ஜான்ஸ் பள்ளி இசைப் பயிற்சியாளர் ராபின்சன், சேலம் அரசு இசைப் பயிற்சி பள்ளி ஆசியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இந்நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், துணை சிறை அலுவலர்கள் ஜெயராமன், ராஜாமனோகரன், ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறை கண்காணிப்பாளர் முருகேசன் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள கோவை, கடலூர் ஆகிய இடங்களில் செயல்படும் சிறைகளில் உள்ள கைதிகளுக்கு இசைப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. சேலம் சிறையில் முதன் முறையாக இசைப் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக, 15 கைதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியை பெறுவதன் மூலம் சிறைவாசிகளுக்கு மனதை நல்வழிப்படுத்தவும், மனமாற்றம் ஏற்படவும், சிறையில் அவ்வப்போது இசை நிகழ்ச்சியை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். விடுதலையான பிறகு இதன் மூலம் தனியார் இசைக் குழுவில் சேர்ந்து பணியாற்றவும் வழி வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bacqrudeen - doha,கத்தார்
06-பிப்-201303:25:13 IST Report Abuse
bacqrudeen போற போக்கை பாத்தா ஜெயிலில் கூட்டம் ஜாஸ்தி ஆயிரும் போல -பஹ்ருத்தீன்
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
05-பிப்-201315:57:05 IST Report Abuse
Skv தவறு செய்தவா திருந்துரதர்க்கு கைதிகளுக்கு யோகா கற்றுத்தரலாமே கூடவெ மேடிடேஷனும் செய்யவச்சு மனதை ஒருநிலைபடுத்த வச்சு திருந்த வைக்கலாமே இது தான் பலருக்கு கிரண்பேதி சென்ஜ்ஜாங்கன்னும் சொல்லுவாக
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
05-பிப்-201312:49:28 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar காவல் துறை இச்செயல் வரவேற்க தகுந்தவை. பாராட்டுகள். முதலில் பொதுமக்கள் காவல்துறை பணியினை நன்கு புரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் பணி நேர்மையும் உண்மையுமாய் செயலாக்கம் முறையில் அமைந்தவை. அவர்கள் பழக இனிமையானவர்கள் செயல் நேர்மையானவர்கள்..,இதை பொதுமக்கள் சரியாக புரிந்துகொள்ளாதது தான் காரணம். சினிமாவில் காட்டப்படும் காவல்துறை போல் தான் இருப்பார்கள் என்று தவறாக எண்ணம் கொண்டு லஞ்சம் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். இதுவே ஒரு சில காவலர்களுக்கு தவறான பழக்கமாக மாறிவிடுகிறது. சமுக குற்றங்கள் குறைக்க காவல் துறை எடுக்கும் முயற்சியில் உறுதுணையாக பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக்கு தரவேண்டும். இவைதான் அவர்களின் எதிர்ப்பு.., அதற்கு பொதுமக்கள் தமக்குள் இருக்கும் தேவையற்ற பயத்தை முதலில் நீக்கவேண்டும். தவறு செய்பவர்கள் தான் காவல் துறையிடம் பயம் கொள்ளவேண்டும். தவறு செய்யாத பொதுமக்கள் நாம் பயப்பட வேண்டியதில்லை. பொதுமக்கள் தையிரமாக காவல் துறை நட்பு கரமாக வேண்டும். சமுக குற்றங்கள் வராது. வளராது. சிறை சாலையும் தேவையில்லாமல் போய்விடும்
Rate this:
Share this comment
Cancel
G.SUBRAMANIAN.KUMBAKONAM - KUMBAKONAM ,இந்தியா
05-பிப்-201310:58:32 IST Report Abuse
G.SUBRAMANIAN.KUMBAKONAM கூட்டு பிரார்தனை செய்வதன் மூலம் ...........மன நிம்மதி ............கிடைக்கும் ...........
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
05-பிப்-201308:20:41 IST Report Abuse
Sami நல்ல விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
05-பிப்-201306:51:32 IST Report Abuse
Lion Drsekar அப்பாவிகளை முன்விரோதம் காரணமாக, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, வீண் பழிசுமத்தி, எதிர்த்து பேசியதால், நேர்மையாக இருக்கவேண்டும் , நாட்டு நலன் கருதி உண்மையைப் பேசி, எழுதி, செய்தவர்களுக்கு மட்டுமே இது போன்ற மன அழுத்தம் ஏற்ப்படும், இதற்க்கு ஒரே வழி, நல்லவர்களை, நிரபாதிகளை விடுதலை செய்தாலே போதும்,. திருட்டையோ அல்லது கொலையையோ தொழிலாக செய்பவர்களுக்கு எந்த வித மன அழுத்தமும் இருக்காது. ஆகவே இவர்களுக்கு எதுவேண்டுமானாலும் அரசு செலவில் கற்றுக்கொடுக்கலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை