Advertisement
ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு ; கறுப்புடை ஆர்ப்பாட்டம்; கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 05,2013,03:07 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 06,2013,19:45 IST

சென்னை; "இந்தியாவிற்கு வரும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெசோ சார்பில் கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொருளாளர் ஸ்டாலின் மற்றும் டெசோ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், துன்புறுத்தி வருவதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில், 18ம்தேதி, நாகப்பட்டினத்தில், 19ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பொது வாக்கெடுப்பு சம்மந்தமான தீர்மானத்தை, நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.



இலங்கை அதிபர் ராஜபக்சேயின், இந்திய வருகையைக் கண்டித்து, இம்மாதம், 8ம்தேதி, சென்னையில் கறுப்புடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், டெசோ உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். இலங்கையில் தமிழர்கள் படுகின்ற அவலங்களையும் விளக்கும் வகையில், டில்லியில் மார்ச் மாதத்தில், அனைத்திந்திய அளவில், அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து, கருத்தரங்கம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



கூட்டம் முடிந்த பின், கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:




நாங்கள் ஏற்கவில்லை :


இலங்கை தமிழர்களுக்கு எதிராக, இலங்கை அரசு தொடர்ந்து செயல்படுமானால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இந்தியாவில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என, ஏ.கே.அந்தோணி கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. அவர்கள், இலங்கை தமிழர்களை படுகொலை செய்ததையும், அந்த இனபடுகொலை தொடர்வதும் பொறுத்துக் கொள்ள முடியாத நிகழ்வுகள். நாங்கள் நிறைவேற்றும் தீர்மானத்தை ஏற்காமல், தயக்கம் காட்டினால், டெசோ சார்பில், தொடர் போராட்டம் நடத்தப்படும்.



41 நாடுகளின் தூதர்கள் : டெசோ உறுப்பினர்கள் பாகிஸ்தான், சீனா நாடுகளின் தூதர்களை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை. தனி ஈழம் வேண்டும் என, டெசோ கருதுகிறது. டில்லியில் நடத்தும் கருத்தரங்கத்திற்கு, இலங்கை தமிழர்கள் பிரச்னையில், அக்கறையுள்ள எல்லா கட்சிகளையும் அழைப்போம். தி.மு.க., எம்.பி., க்கள், ஏழு குழுவினராக சென்று, 41 நாடுகளின் தூதர்களை சந்தித்து, தீர்மானங்களை வழங்குவர். இவ்வாறு கருணாநிதி கூறினார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (60)
thevarmagan - vaduvur,இந்தியா
06-பிப்-201311:48:28 IST Report Abuse
thevarmagan கொலை குற்றவாளி, தமிழனை காட்டி கொடுத்த டக்லஸ் க்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தபோது எங்கே போனிங்க ? ராஜபக்சே பண்ண கொலை அங்கெ போன உங்க பொண்ணுக்கு தெரியாதா?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
thevarmagan - vaduvur,இந்தியா
06-பிப்-201311:46:44 IST Report Abuse
thevarmagan இந்த பொழப்புக்கு .........................
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
PALRAJ - Subbiahpuram,இந்தியா
05-பிப்-201317:43:31 IST Report Abuse
PALRAJ பாவம் தமிழர்கள்......
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Balaji - Tirunelveli ,இந்தியா
05-பிப்-201317:41:13 IST Report Abuse
Balaji எதுக்கு தலைவரே சட்டைய மாத்திகிட்டு .....ராஜபக்சே வை வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வைத்து நினைவு பரிசும் ஒன்று கொடுத்து கூடவே நம்ம தீர்மானத்தையும் கொடுத்து வழி அனுப்பி வைத்து விட்டால் இலங்கை தமிழர்கள் படுகின்ற அவலங்கள் அனைத்தும் நீங்கிவிடும் ..... அவரே வெளியில் வந்து நிலைமை சரி ஆயுடுசுனு பேட்டி கொடுப்பர் தங்கள் புத்திரி போல ......
Rate this:
16 members
1 members
29 members
Share this comment
S. ANANTHA RAMAN - CHENNAI,இந்தியா
05-பிப்-201316:32:04 IST Report Abuse
S. ANANTHA RAMAN இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்.
Rate this:
8 members
0 members
32 members
Share this comment
Raju Rangaraj - Erode,இந்தியா
05-பிப்-201316:22:52 IST Report Abuse
Raju Rangaraj இலங்கையில் தமிழர்கள் இருந்தால் பிரச்னை தானே. ராஜபஷேவை தூங்க விடாமல் செய்து கொண்டு இருப்பது அவர்கள் தானே. அதை இவர் ஞாபக படுத்துகிறாரா ?இவர் கருப்பு சட்டை அணிவதால் என்ன பயன் ?கொஞ்சம் டிவியிலும் பேப்பரிலும் போட்டோவுடன் வரும் அவ்வளவு தான். வீரமணியும் வீரபாண்டியனும் திருமாவும் சுப்புலக்ஷிமியும் மாறி மாறி கலைஞரை புகழ்ந்து தள்ளுவார்கள். மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டால் இனி இவர் அன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் சட்டை அணிவார். சட்டைகளை மாற்றுவதால் பயனில்லை என்பது இவருக்கு தெரியும். அமைச்சரவையை விட்டு எங்கள் கட்சியினர் வெளியேறுவார்கள். ஆட்சிக்கும் முட்டு கொடுக்க மாட்டோம்.ஆதரவை விலக்கிக்கொள்ள ஜனாதிபதியிடம் கடிதம் கொடுப்போம் சபாநாயகர் பார்வையிலும் வைப்போம் என்று துணிச்சலாக கூறினால் ஒரு வேளை மத்திய அரசு கொஞ்சம் மிரளலாம்.
Rate this:
1 members
0 members
26 members
Share this comment
saravanan - madurai,இந்தியா
05-பிப்-201315:59:27 IST Report Abuse
saravanan இப்படி ஓட்டுக்காக பச்சோந்தி போல மாறி மாறி அறிக்கை விட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் உங்கள் திமுகவிற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இருக்கு பெரிய ஆப்பு .
Rate this:
64 members
0 members
38 members
Share this comment
Venkii - Chennai,இந்தியா
05-பிப்-201315:34:26 IST Report Abuse
Venkii இனி கருப்பு சட்டைதான் போடுவேன்னு சொல்லிட்டு வுடனே பல்டி அடித்த தாத்தா. கருப்பு சட்டை போட்டாலும் ஜோசியர் சொன்னமாதிரி மஞ்சள் துண்டும் போடுவீங்கல்ல.
Rate this:
32 members
0 members
25 members
Share this comment
Karthi Keyan - Chennai,இந்தியா
05-பிப்-201315:14:47 IST Report Abuse
Karthi Keyan அரசியல் சாணக்கியர் கருணா என்றால் அவரை விட பத்து மடங்கு பெரியவ அளவில் இப்போது ராஜபக்ஷே. ஆனால் ராஜபக்ஷே ஒரு முட்டாள் சாணக்கியன். திருப்பதி வருவதும் பின்னர் வெங்கடசலபதி கோவிலுக்கு செல்வதும் தன்னை வைணவ நெறியாளன் என்று கண்பித்துகொள்வதும் வேடிக்கை. ராமன் ராவணனை கொன்றது போன்றது போல், இவன் தமிழர்களை ராவணனுக்கு ஒப்பாக கொன்று குவிததுக்கு போல் தன்னை அடையாளம் காட்டிகொள்ள முயல்கிறது இந்த பக்கி ராஜபக்ஷே. இதன் மூலம் மறைமுகமாக இந்தியாவின் செல்வாக்கை பெறலாம் என்பது இவனின் எண்ணம். ஆனால் இவன் ஒரு அறிவற்ற பக்கி. திருமலை திருப்தியும் தமிழ் மன்னன் தொண்டைமான் கட்டியது. வைணவ பக்தி தொடங்கியதும் தமிழ் மண்ணில். ஆதாரம்,இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் இலக்கிய பக்கத்தில். இப்படி தமிழ் மண்ணில் இறுதி பரவியது வைணவ பக்தி இலக்கியம் திருப்தியும் சித்தூர் உள்ளடங்கிய பகுதியும் மொழிவாரி எல்லைபிரி்ெபின் போது அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் போது ஆந்திராவிற்கு தாரைவார்கபட்டது.அப்போது அமளி எழுப்பிய எதிர்கட்சிகளிடம் அன்றைய தமிழ் முதல்வர் கர்மவீரர் ,எந்த பகுதி எங்கு இருந்தால் என்ன ?இதியாவில் தானே இருக்கிறது என்றார் .வாயடைத்து போன எதிக்கட்சிகள் பதில் பேசவில்லை அவர் இருக்கும் போதும் இறந்த பிறகும் .இது வரலாறு .ஆனால் பக்கி ராஜ பக்சே வரலாறு எதுவும் தெரியாமல் ,தமிழ் மக்களை கொன்றுவிட்டு ,தமிழ் பகுதிக்கே திருபதிக்கே (இன்று ஆந்திராவின் வசம் ) வந்து பிரைய சித்தம் தேடுவது போன்ற மாயபிம்பம் ஏற்படுத்த விளைவது பேதமையில் எல்லாம் பெரும் பேதைமை .ராவணனை மற்றும் ராமபிரானை பற்றி கூட அந்த பகிபயுளுக்கு முழுமய தெரிய வாய்ப்பு இல்லை .தமிழ் மீது உள்ள வாக்கு சாவடி அன்பால் கருணா தமிழ் பக்தி இலக்கியங்களை கண்டுகொள்ளவில்லை ,சங்ககால கடவுள்களை கண்டுகொள்ளவில்லை .அதை ஒரு ஆய்வாக செய்திருத்தல் கூட இன்று கருணாவை போல் ராஜபக்ஷே இன்று அசிங்கபடிருக்க மாட்டான் .இதை மையமாக வைத்து "தமிழனை கொன்று விட்டு தமிழ் மன்னன் கட்டிய திருமலை என்று தமிழ் பெயரை இன்றும் தான்கிகொண்டிருக்கும் திருப்திக்கு பகுதிக்கு வரும் ராஜப்சவிற்கு இந்த உண்மையை கூறி அந்த நாயை உண்மை உணர்த்தி அதிதி விரட்டுவார்கள திருப்தி வாழ் பூர்விக தமிழர்கள் .
Rate this:
0 members
1 members
26 members
Share this comment
Peria Samy - chennai,இந்தியா
05-பிப்-201314:52:19 IST Report Abuse
Peria Samy நடையா இது நடையா ஒரு நாடகம் அன்றோ நடக்குது.அந்தக் காலத்து சினிமாப் பாட்டு இப்ப ஞாபகத்துக்கு வருது.
Rate this:
30 members
0 members
17 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.