முதுநகர்:ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள், தங்கள் விலை பொருட்களின் விலையை பிற மாநிலத்தின் விலையுடன் ஒப்பிடும் வகையில் "டிஜிட்டல்' போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பெரும்பாலான விவசாயிகள் தங்கள்
விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்
றனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் விலை நிலவரங்களை பிற மாவட்டங்களின் விலையுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் வகையில் மத்திய, மாநில அரசுகள் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.
அதன்படி, மாநிலத்தில் அனைத்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் "டிஜிட்டல்' போர்டு அமைக்கப்படும். அதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் நடப்பு விலை விவரத்தை அறிந்து கொள்ள முடியும்.
மாநிலத்தின் முக்கிய 12 வகையான விளை பொருட்களின் விலை விவரங்கள் "டீஜிட்டல்' போர்டில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக லாபம் பெறும் வகையில் மூன்று மாதங்களுக்கு பிறகு நிலவும் தோராய விலையும் இதில் குறிப்பிடப்படும்.
இதனால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை அதற்கேற்ப இருப்பு வைத்து, சந்தைப்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும்.
கடலூர் மாவட்டத்தில் தற்போது முதுநகர், பண்ருட்டி, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.