பெங்களூரு: ""இலகுரக போர் விமானம், "தேஜஸ்'தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் எனது பொறுமை தீர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டிலாவது தயாரிக்கப்பட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.போரில் பயன்படுத்த, "தேஜஸ்' என பெயரிடப்பட்ட, இலகு ரகவிமானத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதற்கான திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கியும், இன்னும் விமானம் முழு அளவில் தயாரிக்கப்படவில்லை.பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலகங்கா விமான தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், அமைச்சர் அந்தோணி பேசியதாவது:டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் சாதனைகளை நான் மெச்சுகிறேன். அதே நேரத்தில், "தேஜஸ்' இலகு ரக போர் விமானம் தயாரிப்பில் ஏற்படும் தாமதம், என்னை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது; என் பொறுமை எல்லாம் தீர்ந்துவிட்டது. ஆராய்ச்சி, சோதனை என, இன்னும் காலத்தை விரயமாக்காமல், விமானத்தை விரைந்து தயாரிக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளுங்கள். ராணுவ தயாரிப்பு ஆராய்ச்சியில் மத்திய அரசு ஏராளமாக நிதியுதவி செய்கிறது. அந்த அளவிற்கு தனியார் நிறுவனங்கள் செய்வதில்லை.
ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்திற்கு போட்டியாக மற்றொரு நிறுவனம் வந்தால் தான், இதன் செயல்பாடு மேம்பாடு அடையும் என நான் நினைக்கிறேன். இவ்வாறு, அமைச்சர் அந்தோணி பேசினார். விமானப்படை தளபதி, ஏர் சீப் மார்ஷல், பிரவுனி பேசும் போது,""குறிப்பிட்ட காலத்திற்குள் ராணுவ தயாரிப்புகளை மேற்கொள்ளாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை திரும்ப பெற வேண்டும்,'' என்றார்.
மத்தியில் ஆளும், காங்கிரஸ் அமைச்சர்களில், "கைசுத்தமானவர்' என்பதால், அந்தோணிக்கு, அமைச்சரவையிலும், ராணுவத்திலும் மதிப்பு அதிகம் உண்டு.அமைதியான அவர், சில நேரங்களில் நியாயமான தன் கோபத்தை வெளிப்படுத்தவும் தவறுவது இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
It will be convenient to partition time into a sequence of windows
, each of duration . We suppose that the
server can process requests at a mean rate of REQ packets
per second so that, in any window, the mean number of requests
that it can process is . In any given window , new
clients arrive at a rate of clients per second.
The client request factor determines the
fraction of the server’s (computational) bandwidth that is required
to process new clients in the window . We suppose
that the client request factors are uniformly bounded above by
, for some fixed in the unit interval.
இப்படித்தான் இருக்கணும், 25 வருசமா எமாத்ரவங்க மேலே இவ்வளவு கோபம் வருதே, அப்படினா 5 வருசத்ல 1 லட்சம் சில்லறை கோடி சுருட்ற அரசியல்வாதி மேல மக்கள் எவ்வளவு கோபம் படுவாங்க, கொஞ்சம் புரிஞ்சி நடந்தா நல்லதுதான். அது இல்லாம தலைப்பு நியூஸ்ல நம்ம போட்டோ வருனும்னு பேச பிடாது, இத ஏன் எங்ககிட்ட சொல்ற, இப்படி நீ சொன்ன கையலதவன் , உனக்கு அதிகாரம் இருக்கு, நீ மக்களிடம் சொல்ல வேண்டியது அதனுடைய சிறப்பு மட்டும்தான் , உண்மையில் ஒரு படை தளபதி'னா நம்மலுடைய உண்மையான குறைய வெளிய சொல்ல கூடாது , 25 காலத்துக்கு முன்னால போட்ட திட்டத்ததள எதாவது நவீன காலத்திற்கு ஏற்றார்போல மாத்த முயற்சிக்கணும் .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.