Plus 2 Girl Student burns to death | ஒருதலை காதலால் மாணவி எரித்து கொலை; இரு குழந்தைகளின் தந்தையின் வக்கிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒருதலை காதலால் மாணவி எரித்து கொலை; இரு குழந்தைகளின் தந்தையின் வக்கிரம்

Added : பிப் 06, 2013 | கருத்துகள் (62)
Advertisement
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார்.

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி அருகே ஒருதலை காதலால், பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட, இரு குழந்தைகளின் தந்தை மீது, மண்ணெண்ணெய் தெறித்ததில், அவரும் கருகி இறந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி படிக்காசுவைத்தான் பட்டி குருநாதசுவாமி கோயில் தெருவை சேர்ந்த ராமசாமி மகள் ராஜேஸ்வரி, 17. வன்னியம்பட்டி தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்தார். அதே தெருவைச் சேர்ந்த, மில் தொழிலாளியான ஆதிசக்தி குழந்தைவேலு, 35, ராஜேஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகளும் உள்ளனர்.


இதனிடையே ராஜேஸ்வரி, செய்முறை தேர்விற்கு செல்ல, தன் தங்கை கவிதாவுடன், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள புதரில் இருந்து வந்த, ஆதிசக்தி குழந்தைவேல், ராஜேஸ்வரியை தூக்கியபடி, மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் தாய் வீட்டிற்குள் சென்று, இரு கதவுகளை பூட்டினார்.


அலறிய ராஜேஸ்வரி மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மண்ணெண்ணெய் ஊற்றியபோது, ஆதிசக்தி குழந்தைவேலு மீதும் பட்டதில், அவரும் காயம் அடைந்தார். அப்பகுதியினர், கதவை உடைத்து பார்த்தபோது, சம்பவ இடத்தில் ராஜேஸ்வரி இறந்து கிடந்தார்.காயம்பட்ட ஆதிசக்தி குழந்தைவேலு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.


கதவுகளை அடைத்தார் :

கவிதா கூறுகையில், ""எனக்கு பின்னால், ராஜேஸ்வரி வந்தாள். திடீரென காணவில்லை. திரும்பி பார்த்தபோது அவளை, ஆதிசக்தி குழந்தைவேலு குண்டுகட்டாக தூக்கி சென்று, வீட்டின் கதவுகளை அடைத்தார். "காப்பாற்றுங்கள்' என, ராஜேஸ்வரி கதறினார். அலறல் சத்தம்கேட்டு, கதவை உடைத்து பார்த்தபோது, கருகிய நிலையில் இறந்து கிடந்தாள்,'' என்றார். இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


காதலி யாருக்கும் கிடைக்க கூடாது : மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த, ஆதி சக்தி குழந்தைவேல், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவர், 100 சதவீத பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் இருந்தார். இவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கும் போது, சத்தமாக புலம்பியப்படி இருந்தார்.


அப்போது போலீசார் மற்றும் உறவினர்களிடம் அவர் கூறுகையில், ""இரு ஆண்டுகளாக, ராஜேஸ்வரியை காதலித்தேன். எனக்கு கிடைக்காத இவர், வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தேன். அவள் இறந்த பின், நானும் உயிர்வாழ விரும்ப வில்லை. என்னை ஊசி போட்டு கருணை கொலை செய்யுங்கள். இனி நான் வாழ விரும்ப வில்லை,'' என்றார். மாலை, 4:30 மணிக்கு, அவர் இறந்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - chenai ,இந்தியா
06-பிப்-201315:16:58 IST Report Abuse
Tamilan இது போன்ற காம வெறியர்களின் காம இச்சைக்கு பெயர் காதலா?. இது எல்லாம் இவர்களின் .............. கொழுப்பு. என்ன இவன் குடும்பத்தை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
சத்தி - Bangalore,இந்தியா
06-பிப்-201314:41:02 IST Report Abuse
சத்தி இது மாதிரி யாரேனும் தொல்லைகொடுதால் உடனே மற்றவர்களோடு அது பத்தி சொல்லுங்க , உதவி கேளுங்க , ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு கொண்டுசெல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
06-பிப்-201313:54:10 IST Report Abuse
Tamilan இன்றைய கேவலமான திரை படங்களும், தொல்லைகாட்சி மகா மட்டமான மெகா தொடர்களுமே இது போன்ற காமகொடுரனுக்கு வக்கிர புத்தியை கொடுக்கிறது. நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெரியாத அரவேக்காடுகள் நிறைந்த சமுகம். நிஜ வாழ்க்கையிலே ஐந்து முறை திருமணம் செய்தவர்களை, திருமண பந்தத்திற்கு வெளியே உறவு வைத்திருப்பவர்களை, அவர்களிடம் பணம் இருக்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை எல்லாம் லட்சிய தம்பதிகளாகவும், தலைவர், தலைவி களாகவும் ஏற்று கொள்கிறோம். சமிபத்தில் லட்டு தின்று வெற்றிபெற்ற படத்திலே, ஒரு இளம் பெண்ணை, ஒன்றுக்கும் உதவாத, லயக்கிலாத முன்று இளைஞர்கள் , அதில் ஒருவர் 50 வயது போட்டி போட்டு காதலிப்பதாக ஒரு காப்பி அடித்த கேவலமான திரைபடம் அதையும் நாம் வெற்றுபெற செய்கிறோம், பொறுப்பற்ற சமுகத்தில் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பணமே பிரதானம் என்று திரைப்படத்திலும், மெகா தொடர்களிலும் எவ்வளவு கேவலமான விசயங்களையும் காட்ட படைபாளிகள், அதையும் அங்கீகரித்து, பாராட்டி, வெற்றிபெற செய்ய இந்த சமுகம். ஒரு காலத்தில் பாவம், தவறு, குற்றம், மோசம், என்று கருதப்பட்ட விசயங்கள் அனைத்தும் இன்று விரும்பி, வரவேற்று, நியாயபடுத்தி செய்கிறோம், அப்படி செய்பவர்களை பாராட்டுகிறோம். தனி மனித ஒழுக்கம் முற்றிலுமாக மறைந்து வருகிறது.
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
10-பிப்-201300:33:07 IST Report Abuse
VELAN Sநன்றாக சொன்னீர்கள் . இதைப்போய் கேட்டால் , இது மாதிரி ஒரு இடத்தில நடந்துது , அதனால்தான் படமா எடுத்தேன் என்பான் . மக்களுக்கு எது நன்மை தருமோ அதை காண்பிக்க வேண்டும் , நடந்ததை காண்பிக்கின்றேன் என்று கண்டதையும் காண்பித்து மக்களை கெடுக்க கூடாது என்று இந்த முட்டாள்களுக்கு என்று புரியுமோ , அன்று , தமிழகத்தின் தலைஎழுத்து மாறும்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Krishnan - Bagram,ஆப்கானிஸ்தான்
06-பிப்-201313:52:04 IST Report Abuse
Ramesh Krishnan என்னிக்கு இந்த சட்டங்களை கடுமயாக்குரன்களோ அப்போதான் கொஞ்சமாவது குறையும், சும்மா சும்மா சினிமா டிவி நு கரணம் சொல்லி பிரயோஜனம் இருக்கிறதா தெரியல
Rate this:
Share this comment
Cancel
venky - chennai,இந்தியா
06-பிப்-201313:26:07 IST Report Abuse
venky இந்த செயலானது தன் மகளை தானே கொள்வதற்கு ஈடானது. இது போன்ற வெக்ககேடான செயல்களை செய்யும் மனிதர்கள் இன்னும் பூமியில் பிறர்கிரார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் தயவு செய்து இது போன்ற செய்திகளை வெளியிடும் போது பெண்ணின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
06-பிப்-201313:14:35 IST Report Abuse
PRAKASH இவன் உயிரோட இருந்தா கூட நம்ம சட்டம் ஒன்னும் பன்னிருகாது ..
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
06-பிப்-201313:12:36 IST Report Abuse
PRAKASH உலகம் சீக்கிரமாக அழிவதற்கான அறிகுறி .. கலி யுகத்தின் உச்ச காலம்,
Rate this:
Share this comment
Cancel
ismail - madurai  ( Posted via: Dinamalar Android App )
06-பிப்-201313:02:33 IST Report Abuse
ismail சட்டம் கடுமை ஆக்கா வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-பிப்-201312:56:01 IST Report Abuse
g.s,rajan தனியார் தொலைக்காட்சி சீரியல்கள் ,மெகாத் தொடர்கள் ,திரைப்படங்கள் மக்களை சீரழித்துக்கொண்டு இருப்பதால் வரும் வினை .
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
06-பிப்-201312:40:32 IST Report Abuse
Rangarajan Pg அந்த பெண்ணின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த நிகழ்வை ஒரு பாடமாக எடுத்து கொண்டு பெண்ண பிள்ளைகளை பெற்ற அனைவரும் இனி வெளி ஆட்கள் அல்லது உறவினர்களை கூட நம்பி இருக்க வேண்டாம். பெண் பிள்ளைகள் என்றால் வயது வித்யாசமில்லாமல் அவர்களை ஒரு போக பொருளாக பார்க்கும் கலாசாரம் பெருகி விட்டது. திரைப்படங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், விளம்பரங்கள் எல்லாவற்றிலும் பெண்கள் ஒரு போக பொருளாகவே சித்தரிக்கபடுகிறார்கள். இதன் தாக்கம் இந்த நாட்டின் பெண்கள் மொத்தத்தையும் பாதிக்கும் முன் இந்த அரசும் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விழிப்படைந்து இந்த கலாசார சீர்கேட்டை ஊக்குவிக்கும் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை தடுக்க வேண்டும் அல்லது கண்டிஷன் களுக்கு உட்படுத்த வேண்டும். தொலைக்காட்சி சீரியல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும். இதை எல்லாம் அரசாங்கம் செய்ய வில்லை என்றால், மக்கள் தான் தங்களது சுய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பை மனதில் வைத்து இதை போன்ற சீரழிவை IGNORE செய்ய வேண்டும். பார்ப்பதற்கு ஆளில்லை என்றால் இதை போன்ற கயவர்கள் படம் மற்றும் சீரியல்கள் விளம்பரங்கள் தயாரிப்பதை நிறுத்தி விட்டு மாடு மேய்க்க போய் விடுவார்கள். நம் சமுதாயமும் சீரழிவிலிருந்து தப்பிக்கும். ஆனால் பெண் பிள்ளைகளை பெற்றவர்களே,, சுய பாதுகாப்பு மிகவும் முக்கியம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை