women back to return home | "தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"தினமலர்' செய்தியால் மகன்களுடன் இணைந்த தாய்

Added : பிப் 06, 2013 | கருத்துகள் (69)
Advertisement

செங்குன்றம்: வழி தவறி பிரிந்து சென்ற தாயை, சென்னை முழுக்க தேடிக்கொண்டிருந்த மகன்கள், "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, புழல் பகுதிக்கு நேரில் வந்து, அவரை அழைத்து சென்றனர்.

சென்னை கொரட்டூர் பாலாஜி நகர், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர்கள் ராஜன், ஜெய்சங்கர். இருவரும், சகோதரர்கள். இவர்களது தாய் முல்லையம்மாள், 60. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், புழல் கதிர்வேடு பேருந்து நிறுத்தம் அருகே, வந்து சேர்ந்தார். அன்று முதல், அங்கு வருவோரிடம், "வெற்றிலை வாங்க கடைக்கு வந்து, வழி தவறி இங்கு வந்து விட்டேன். என்னை, என் மகன்களிடம் சேர்த்து வையுங்கள்' என, கேட்டு வந்தார்.

இவர் குறித்த செய்தி, "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம், படத்துடன் வெளியானது. செய்தி மூலம், தாயின் இருப்பிடத்தை அறிந்த மகன்கள், அன்றே, அவரை நேரில் வந்து அழைத்து சென்றனர். மகன்களுடன் இணைந்த அவரை, நேற்று சந்தித்த போது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். தாயை பிரிந்தது குறித்து, ராஜன், ஜெய்சங்கர் கூறியதாவது:


. "தினமலர்' உதவியால் :

கடந்த, ஆகஸ்ட், 16ம் தேதி பிற்பகலில், வெற்றிலை வாங்க சென்றவர், வீடு திரும்பவில்லை. "பார்வை குறைவு' காரணமாக, புழல் கதிர்வேடு பகுதிக்கு போய் சேர்ந்து இருக்கிறார். நாங்கள், கொரட்டூர் போலீசில் புகார் செய்தோம். அவர்கள், அவரது புகைப்படம் கொண்டு வாருங்கள், நீங்களும் தேடிப்பாருங்கள் என்றனர். எங்களிடம் புகைப்படம் இல்லை. ஆனாலும், சென்னை முழுக்க தேடினோம். இந்நிலையில், "தினமலர்' நாளிதழில், எங்கள் தாயின் படத்துடன் வந்த செய்தியை, சென்னை போரூரில் வசிக்கும் எங்கள் ஊர்க்காரர் பார்த்து, உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அவர் மூலம், எங்கள் தாயை மீட்டோம். "தினமலர்' உதவியால், ஐந்து மாதங்களுக்கு முன் பிரிந்த எங்கள் உயிர், மீண்டும் கிடைத்துள்ளது என, கண்களில் நீர் பெருக்குடன், நன்றி தெரிவித்தனர்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamalakkannan K - chennai,இந்தியா
12-பிப்-201315:54:09 IST Report Abuse
kamalakkannan K நன்றி தினமலர்
Rate this:
Share this comment
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
12-பிப்-201305:55:13 IST Report Abuse
thamizh Madayan என்னய்யா போலீஸ் இது? ஒரு ஸ்டேஷன்ல புகார் கொடுத்தால் அடுத்து ஸ்டேஷனுக்கு தெரியாதா? கூகுல் மேப் ல போய் பாத்தேன். ஸ்ரீநிவாசன் தெரு பாலாஜி நகர் கொரட்டூர் லேர்ந்து கதிர்வேடு புழல் மொத்தம் 8 கிலோ மீட்டர். பாட்டி நடந்திருக்கும் தூரம் தான். இந்த ரெண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தொடர்பு கிடையாதா? இந்த பசங்களும் சென்னைல போய் தேடினாங்களா? எதோ பாட்டி செஞ்ச புண்ணியம் பசங்களோட போய் சேந்துட்டாங்க. கையில் அட்ரஸ் எழுதி வெச்சுக்கணும். எங்கப்பா அமேரிக்கா வந்த போது சட்டை பையில அட்ரஸ் எழுதி வெச்சுக்க சொன்னேன். அவருக்கு கோபம். என்னடா? நான் போஸ்ட் அபீஸ் சூப்ரண்டு, எனக்கு நல்லா இங்கிலீஷ் வரும்னாரு. நான் சொன்னேன், அப்பா, இந்த ஊருல எல்லாருக்கும் இங்கிலீஷ் தெரியாது. உன்ன மாதிரி சுத்தமான இங்கிலீஷ் பேசினா அமேரிக்கா காரன் கொழம்பிடுவான் அதான் ன்னு சொன்னேன். எப்பவும் ப்ளேன்ல வரபோது பிளைட் நம்பர், அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி வெச்சுக்கிட்டுதான் வருவாரு.
Rate this:
Share this comment
Cancel
Fero - Ramnad,இந்தியா
06-பிப்-201315:27:20 IST Report Abuse
Fero மிக்க மகிழ்ச்சி . உதவிக்கரம் நீட்டிய தினமலருக்கு பல நன்றிகள்.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
06-பிப்-201315:22:02 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. வாய்ப்பு கிடைத்தால்... எங்கே பெற்றோரை தள்ளிவிடலாமென்று நினைக்கும் இல்வ்வுலகில். இன்னும் இதுபோல்.. சில மகன்களும், மருமகள்களும் இருப்பது மிக்க சந்தோசத்தை தருகிறது.. வாழ்க பல்லாண்டு...
Rate this:
Share this comment
Cancel
Palanivel Naattaar - ABUDHABI,ஐக்கிய அரபு நாடுகள்
06-பிப்-201314:28:14 IST Report Abuse
 Palanivel Naattaar தினமலரின் சேவையை மனதார பாராட்டுகிறேன் இதைபோல அனைத்து ஊடகங்களும் பின்பற்ற வேண்டும். ஒப்பற்ற அந்த உறவை மீண்டும் பெற்ற ராஜன், ஜெய்சங்கர் இருவரும் பாக்கியசாலிகள்.
Rate this:
Share this comment
Cancel
vidhuran - Hastinapur,இந்தியா
06-பிப்-201313:38:26 IST Report Abuse
vidhuran இவர்களெல்லாம் நாடகமாடும் பிள்ளைகள் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தாய் நினைப்பது போல பிள்ளைகள் அவ்வளவு பாசக்காரப் பிள்ளைகள் இல்லை. தாய் என்றைக்குமே பிள்ளைகளிடம் "நான் சுகமாக, ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கென்ன குறை" என்றுதான் சொல்லுவார். பெரும்பாலான பிள்ளைகள் தாயின் தேவைகளை தீர ஆராய்ந்து நிவர்த்தி செய்வதில்லை. இந்நேரம் இதே தாய் தனது பார்வையிழந்த, ஆரோக்கியமில்லாதா, நடக்கச் செட்டையில்லாத, கையில் ஒரு நாயாப் பைசா கூட இல்லாமல், ஒடிந்து முதிர்ந்து போன த்றேகத்துடன் கூடிய மகனை தவற விட்டிருந்தால், என்ன செய்திருப்பாள் என்பதை யோசிக்கவும். இந்நேரம் மகனை இழந்த தாய் இரண்டு மாதமும் பட்டினி கிடந்து, மனம் பேதலித்து, வெய்யில், குளிர் என்று பாராமல், வீதி வீதியாக வீடு வீடு வீடாக, பாஷை தெரியாத வீட்டுப் படிகளிலேல்லாம் ஏறி இறங்கி, கண்ணில் பட்ட கோவில்களுக்கெல்லாம் தனது த்றேகத்தைக் காநிக்கையாக்கிருப்பால். இவற்றில் எதைச் செய்தார்கள் இந்த தாயன்பு தெரியாத பிள்ளைகள்? சொல்லுங்கள் பார்க்கலாம்?
Rate this:
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
06-பிப்-201312:52:32 IST Report Abuse
Mohamed Nawaz எல்லா புகழும் இறைவனுக்கே, தாயின் மீது பாசமுள்ள மக்களை இந்த புகை படத்தில் காண முடிகிறது. எல்லாம் வல்ல, எல்லோருக்கும் பொதுவான இறைவன் நமக்கு அறிவை தந்துள்ளான் ஆனால் இங்கே கருத்தெழுதும் பல அன்பர்கள் அடுத்தவர் மனசு புண்படும்படி அள்ளி வீசிவிடுகின்றனர். சகோதரி கௌசல்யா சொன்னது போல தயவு செய்து எந்த கருத்தும் அடுத்தவர் மனம் புண்படாமல் எழுதுவது நல்லது. இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sanghimangi - Mumbai,இந்தியா
06-பிப்-201312:28:36 IST Report Abuse
Sanghimangi மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருக்கிறேன். சொல்வதற்கு இதற்கு மேல் வேறொன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
சகுனி - ஸ்ரீபெரும்புதூர்,இந்தியா
06-பிப்-201312:18:54 IST Report Abuse
சகுனி வெத்தல .......வெத்தல ........வெத்தலையோ .........கொழுந்து வெத்தலையோ ........ ஒரு வெத்தலையால பாட்டி பேமஸ் ஆனது பெரிய விஷயம் ......
Rate this:
Share this comment
vidhuran - Hastinapur,இந்தியா
06-பிப்-201313:19:57 IST Report Abuse
vidhuranஇந்த பாசக்கார வாசகரின் "ஒரு வயது முதிர்ந்த" தாயைப் பற்றிய கேலித்தனமான பேச்சிலிருந்து, ஒன்று புரிகிறது. இந்தக் பாசக்கார வாசகர், கட்டாயம் தனது தாயிடம் அன்பு காட்டியிருக்க வாய்ப்பே இல்லை. ஆண்டவா இவர்களுக்கு தாயன்பு என்பது விளையாட்டுக்காக/விவாதத்திற்காக பயன்படுத்தப் படுவதல்ல என்பதை புரிய வை....
Rate this:
Share this comment
Cancel
seenivasan - Tirupur,இந்தியா
06-பிப்-201312:18:46 IST Report Abuse
seenivasan இது போன்ற நல்ல விசயங்களை செய்ய அனைத்து பத்திரிகைகளும் முன் வர வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை